தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 9 april 2014

நந்தகோபனின் ஏழாலை வீடும் சுற்றிவளைப்பு: பொலிஸ் அதிகாரி அஜித் ரோஹன !

அடக்கி வாசிக்க ஆரம்பித்துள்ள சில பிரித்தானிய அமைப்புகள் !
08 April, 2014 by admin
இலங்கை அரசானது கடந்த சில நாட்களுக்கு முன்னர், தாம் புலம்பெயர் நாடுகளில் இயங்கும் சுமார் 16 அமைப்புகளுக்கு தடை விதிப்பதாக வர்தமானி அறிவித்தல் மூலம் அறிவித்தது. அதில் பிரித்தானியாவை தளமாகக் கொண்டு இயங்கும் உலகத் தமிழர் பேரவை(GTF) தமிழர் ஒருங்கிணைப்பு குழு(TCC) நாடு கடந்த அரசு மற்றும் பிரித்தானிய தமிழர் பேரவை(BTF) ஆகியவையும் அடங்கும். கனடாவில் தடைசெய்யப்பட்ட அமைப்புகளில் பெரும்பாலான அமைப்புகள் அத் தடையை நாம் நிராகரிப்பதாகவும், அதனை தாம் ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் அறிவித்துவிட்டது. ஆனால் பிரித்தானியாவில் உள்ள அமைப்புகள் சில எதுவும் கூறாமல் அப்படியே மெளனம் காத்து வருகிறார்கள். உலகத் தமிழர் பேரவையைச்(GTF) சேர்ந்த இமானுவேல் அடிகளார் இலங்கை அரசின் இந்த அறிவிப்பை முற்றாக நிராகரித்துள்ளார்.

இதேவேளை நாடு கடந்த அரசாங்கமும் இதனை தாம் மறுப்பதாகவும், சட்ட நடவடிக்கை எடுக்க இருப்பதாகவும் பதில் அறிக்கை ஒன்றை வெளியிட்டு விட்டார்கள். லண்டனில் இயங்கும் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு(TCC) இது தொடர்பாக தாம் ஆராய்ந்துவருவதாகவும், தமது அமைப்பை இலங்கை தடைசெய்தது சட்டத்திற்கு புறம்பான விடையம் என்றும் கூறியுள்ளார்கள். இருப்பினும் சில அமைப்பு தொடர்ந்தும் மெளனம் காத்து வருகிறது. இதனூடாக இலங்கை அரசு செய்தது சரி என்று இவர்கள் எண்ணுகிறார்களா ? இல்லை இலங்கை அரசின் தடையை நினைத்து அஞ்சுகிறார்களா என்பது தெரியவில்லை. ஒரு தடையை எதிர்த்து அறிக்கை ஒன்றை வெளியிட முடியாத இந்த அமைப்புகள் எவ்வாறு தமிழர்களுக்காக துணிந்து போராடும் ? சில தமிழ் தொலைக்காட்சிகள், இது தொடர்பாக வந்து பேசுமாறு அழைப்பு விடுத்தும் கூட, குறிப்பிட்ட ஒரு சில அமைப்புகள் இதுதொடர்பாக மக்கள் மத்தியில் பேச தயார் இல்லை என்று கூறிவிட்டார்களா. அப்படி என்றால் இவர்கள் எதனை மறைக்க பார்கிறார்கள் ?

எனவே இதுவரை தமது அறிக்கையை வெளியிடாத அமைப்புகள், இலங்கை அரசு தடைசெய்துள்ள விடையம் தொடர்பாக வாய் திறக்கவேண்டும். இச்செய்தியை அப்படியே மூடி மறைத்துவிட்டு, தனியே விழிப்புணர்வு போராட்டம் மற்றும், பிரித்தானிய நாடாளுமன்றில் கூட்டங்களையும் நடத்திவிட்டுச் செல்வது என்றால், இதனை சாதாரண மனிதர்கள் எவரும் செய்யலாம் அல்லவா ? அமைப்பு என்று ஒன்று ஏன் தேவை ? எனவே இலங்கை அரசின் இந்த அறிவித்தலுக்கு இதுவரை தமது எதிர்ப்பை தெரிவிக்காத அமைப்புகள் உடனடியாக கண்டன அறிக்கைகளை வெளியிடவேண்டும் என, தமிழ் ஆர்வலர்கள் மற்றும் செயல்பாட்டாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள். அதனையே அதிர்வு இணையம் இங்கே பதிவுசெய்துள்ளது.
http://www.athirvu.com/target_news.php?getnews=news&action=fullnews&showcomments=1&id=6654
நந்தகோபனின் ஏழாலை வீடும் சுற்றிவளைப்பு: பொலிஸ் அதிகாரி அஜித் ரோஹன !
09 April, 2014 by admin
கைதுசெய்யப்பட்டு மலேசியாவில் இருந்து இலங்கை கொண்டுசெல்லப்பட்ட புலிகளின் முக்கிய பிரமுகர் நந்தகோபனிடம், பயங்கரவாத தடுப்பு பிரிவினர் விசாரணைகளை நடத்திவருவதாக் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன நேற்று மாலை(08) தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகளின் அமைப்பில் ஊடகப் பிரிவில் பணியாற்றியவரும், பின்னர் உலகளாவிய ரீதியில் புலிகளின் ஊடகப் பிரிவுக்கு பொறுப்பாகவும் இருந்தவர் நந்தகோபன் ஆவர். இவரது கைதை அடுத்து அவரது வீட்டையும் யாழ் பொலிசார் சுற்றிவளைத்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர் என்ற செய்தியும் அதிர்வுக்கு கிடைக்கப்பெற்றுள்ளது.

யாழ் ஏழாலையில் உள்ள நந்தகோபனின் உறவினர்கள் வீடும் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. நந்தகோபன் வெளிநாட்டில் உள்ளவேளை எந்த நாடுகளுக்கு பயணித்தார் மற்றும் யார் யாருடன் தொடர்புகளை வைத்திருந்தார் என்று பயங்கரவாதப் பிரிவினர் விசாரணைகளை நடத்திவருவதாக, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன மேலும் தெரிவித்துள்ளார்.
http://www.athirvu.com/target_news.php?getnews=news&action=fullnews&showcomments=1&id=6656

Geen opmerkingen:

Een reactie posten