தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 11 april 2014

மன்னாரிலும் பொது பலசேனாவின் அட்டகாசம் ஆரம்பம்

TNA வலி.தென் மேற்குப் பிரதேச சபையில் முறுகல்…

வலிகாமம் தென்மேற்குப் பிரதேச சபையின் மாதாந்தக் கூட்டத்தின்போது நிகழ்வுக்குத் தலைமை வகித்த பதில் தலைவர் கே.கெளரிகாந்தனுக்கும், முன்னாள் தவிசாளர் அ.ஜெபநேசனுக்கும் இடையில் வாக்குவாதம் உச்சக்கட்டம் வரை நடந்தது. ஒருகட்டத்தில் முன்னாள் தவிசாளர் ஜெபநேசனை சபையை விட்டு வெளியேறுமாறும், தவறும் பட்சத்தில் அவர் வெளியேற்றப்படுவார் என்றும் பதில் தலைவர் கெளரிகாந்தன் எச்சரித்தார். ஆனால் பதில் தலைவரின் மிரட்டலுக்கு அஞ்சாத உறுப்பினர் சபையை விட்டு வெளியேற மறுத்ததுடன் கூட்டம் முடியும் வரை மண்டபத்தில் அமர்ந்திருந்தார்.
மதிய இடைவேளைக்குப் பின்பு பதில் தவிசாளர் சமுகமளிக்காததினால் சக உறுப்பினர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க ஆளும் கட்சி உறுப்பினர் கே.கெளரிகாந்தன் பதில் தலைவராகப் பதவியேற்றார். அக்கூட்டத்தில் அடைக்கல நாயகி வீதியின் அபிவிருத்தி வேலை பற்றி ஆராயப்பட்ட போது முன்னாள் தவிசாளரும் தற்போதைய உறுப்பினருமான அ.ஜெபநேசனுக்கும் பதில் தலைவர் கே.கெளரிகாந்தனுக்குமிடையில் ஏற்பட்ட கருத்து முரண்பாடு வாக்குவாதமாக மாறி உச்சக் கட்டத்தை அடைந்தது. அமைதியை நிலைநாட்ட முற்பட்ட பதில் தலைவர் “நீர் உரையாற்றி முடிந்துவிட்டது. ஆசனத்தில் அமருங்கள்.” என மூன்று தடவை தொடர்ந்து கூறினார்.
ஆயினும் உறுப்பினர் ஜெபநேசன் ஆசனத்தில் அமராமல் தொடர்ந்து பேசிக் கொண்டு இருந்தார். இதையடுத்து, ஆவேசத்திற்குள்ளான பதில தமைலவர் சபையை விட்டு வெளியேறுமாறும் தவறும் பட்சத்தில் வெளியேற்றப்படுவீர் என்றும் உறுப்பினரை மிரட்டினார். பதில் தலைவரின் மிரட்டலுக்கு மசியாத ஜெபநேசன் கூட்டம் முடியும் வரை சபையில் அமர்ந்திருந்தார். இருவருமே ஆளும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இருவருக்கும் ஏற்பட்ட முரண்பாட்டை அடுத்தே முன்னாள் தவிசாளர் தமது தவிசாளர் பதவியைத் துறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
http://www.jvpnews.com/srilanka/65336.html

மன்னாரிலும் பொது பலசேனாவின் அட்டகாசம் ஆரம்பம்

எங்களை எங்கள் சொந்த மண்ணில் குடியிருக்காமல் செய்யும் நோக்குடனே பொதுபலசேன தற்பொழுது இந்த நடவடிக்கையில் இறங்கியிருக்கிறது. அன்று பௌத்த பிக்குகள் தலைமையில் வந்த குழுவினர் எங்கள் கிராமத்துக்குள் நுழைந்து தகாத வார்த்தைகளுடன் எங்களுக்கெதிராக அட்டகாசம் புரிந்தவேளையில் அந்த இடத்தில் எங்களைச் சார்ந்த சுமார் 700 பேர் அங்கு சூழ்ந்திருந்தோம். இருந்தபோதும் எங்களுடன் இருந்த ஓர் ஆன்மீகத் தலைவர் மௌலவி எம். முஹமது தவ்பீக் எங்களை சட்டவிரோத செயலில் இறங்க வேண்டாம் என்று தடுத்ததுடன் அங்கு வந்து அட்டகாசம் புரிந்த பௌத்த மத குருக்களின் உடைக்கு மரியாதை கொடுக்கும்படியும் எமது மாவட்டம் தொடர்ந்து ஒற்றுமையில் திளைக்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். அதற்கு இணங்க எங்கள் கிராம மக்கள் அமைதி காத்தனர். இந்த சம்பவங்கள் அனைத்தையும் பொலிஸார் மற்றும் பாதுகாப்பு படையினர் பார்த்துக் கொண்டிருந்தனர். – எனவும் குறித்த மக்கள் மேலும் தெரிவித்தனர். -
பௌத்த தீவிரப் போக்கு அமைப்பான பொதுபலசேன மன்னார் மாவட்டத்திலும் தனது கைவரிசையை காட்ட ஆரம்பித்திருப்பதாகக் கூறப்படுகின்றது. எனினும் அந்த அமைப்பின் ஆத்திரமூட்டலுக்கு இடம் கொடாமல் ஒற்றுமைக்கும் ஆன்மீகத்துக்கும் மதிப்பளிக்குமுகமாக அமைதி காத்தோம் என மன்னார் மாவட்டத்திலுள்ள மறிச்சுக்கட்டி மரைக்கார்தீவு மக்கள் தெரிவித்தனர்.
கடந்த செவ்வாய்கிழமை மன்னார் மாவட்டத்தின் முசலி பிரதேச செயலக பிரிவிலுள்ள மறிச்சுக்கட்டி கிராமத்தக்கு வந்த பொதுபலசேன அமைப்பைச் சேர்ந்தவர்கள் எனக் கருதப்படும் மதத்தலைவர்கள் உட்பட ஒரு குழுவினர் அக்கிராம மக்களை நோக்கி தகாத வார்த்தைகள் பேசி அட்டகாசம் புரிந்தனர் எனக் கூறப்படுகிறது. இதுபற்றி மேலும் தெரிவிக்கப்படுவதாவது அன்று மாலை 5 மணியளவில் 30 வாகனத்தில் சுமார் 30 பௌத்த பிக்குகளுடன் சுமார் 100 பேர் கொண்ட குழுவினர் மன்னார் மாவட்டத்தின் முசலி பிரதேச செயலக பிரிவிலுள்ள மறிச்சுக்கட்டி கிராமத்துக்கு திடீர் என வந்து இறங்கினர்.
அங்கு வசித்த ஒரு மதத்தைச் சார்ந்த மக்களை தகாத வார்த்தைகளால் அவர்கள் ஏசினர். அங்கு குடியிருக்கும் அந்தமக்களை உடன் அவ்விடத்தை விட்டு வெளியேறும்படியும் எச்சரித்தனர். இந்த அட்டகாசம் சுமார் இரு மணி நேரம் நீடித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. இவ்விடயம் குறித்து அப்பகுதி மக்கள் கூறியவை வருமாறு மன்னார் மாவட்டத்தின் முசலி பிரதேச செயலக பிரிவிலுள்ள மறிச்சுக்கட்டி மரைக்கார் தீவு கிராமமானது எமது முன்னோர்கள் வாழ்ந்த எமது பூர்வீக மண்ணாகும்.
அத்துடன் நாங்கள் இங்கு வாழ்ந்து கொண்டிருந்தபொழுது புலிகளால் வெளியேற்றப்பட்டோம். இரு வருடங்களுக்கு முன் எங்கள் சொந்த மண்ணுக்கு மீண்டும் திரும்புவதற்காக எங்கள் இந்த பூர்வீக காணியைத் துப்பரவு செய்தோம். சுமார் 30 லட்சம் ரூபா செலவில் 45 கொட்டில்கள் அமைத்தோம். அப்பொழுது அவை இனந்தெரியாதோரால் அழிக்கப்பட்டன.Mannar-PalasanaMannar-Palasana01Mannar-Palasana02Mannar-Palasana03Mannar-Palasana04

http://www.jvpnews.com/srilanka/65342.html

Geen opmerkingen:

Een reactie posten