இரணைமடு நீரால் யாழ் – கிளிநொச்சி இரண்டாக்கும் அரசியல் ஆரம்பம்
குறித்த முன்மொழிவில் இரணைமடு குளத்தை ஆழப்படுத்துவது மற்றும் பலப்படுத்துவது ஒன்றாகவும் யாழ்ப்பாணத்திற்கான குடிநீர் விநியோகம் மற்றும் மாநகர கழிவகற்றல் ஒன்றாகவும் பிரேரிக்கப்பட்டுள்ளது.அதனையே தாம் நிராகரிப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.
இதேவேளை, வடக்கு மாகாணசபை நிராகரித்தால் மத்திய அரசு நேரடியாகவே குறித்த திட்டத்தை மேற்கொள்ளுமாவென் கேடுக்ப்பட்ட போது, மத்திய அரசினைப் பொறுத்தவரையில் மத்தியில் அதிகாரம் ஒரு இடத்தில் குவிந்துள்ளது. எனவே எதுவும் நடைபெறாது என்றில்லை என்று தெரிவித்தார் பேராசிரியர் நந்தகுமாரன்.
இரணைமடு குளத்து நீரினை யாழ்ப்பாணத்திற்கு கொண்டுவருவது தொடர்பிலான வடக்கு மாகாண சபையின் நிபுணர்குழுவின் ஆய்வறிக்கை தமக்கு கிடைக்கவில்லை என்று தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் செயற்றிட்டங்கள் தொடர்பிலும் இரணைமடுவிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு நீர் கொண்டுவருவது தொடர்பிலுமான ஊடகவியலாளர் சந்திப்பு இன்று அதன் யாழ்.பிராந்திய அலுவலகத்தில் நடைபெற்றிருந்தது.
குறித்த பத்திரிகையாளர் சந்திப்புக்கு பேராசிரியர் நந்தகுமாரன் தலைமை தாங்கினார். இச்சந்திப்பில் யாழ்.குடாட்டில் மேற்கொள்ளப்பட்ட நீர் விநியோக நடவடிக்கைகள் மற்றும் நீர்ப் பற்றாக்குறைகள் என்பன தொடர்பில் நீண்ட விளக்கமளிக்கப்பட்டது.
அதன் பின்னர் இரணைமடுவிலிருந்து குடாநாட்டிற்கு நீர் விநியோகம் மேற்கொள்ளுதல் தொடர்பில் ஊடகவியலாளர்களுடைய நீண்ட நேர கேள்விகளுக்கு பேராசிரியர் நந்தகுமாரன் மற்றும் துறை சார் பொறியலாளர்கள், சபையின் சமூகவியலாளர்கள் ஆகியோர் விளக்கமளித்தனர்.
இரணைமடுவிலிருந்து குடாநாட்டுக்கு குடிநீர் கொண்டு செல்லும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டால் தற்போதைய சூழல் போல் எதிர்காலத்தில் ஏற்படும் வரட்சியை எவ்வாறு எதிர்கொள்வது எனக் கேள்வி எழுப்பிய போது அவர்களால் சரியான விளக்கமளிக்கப்படவில்லை.
அதேவேளை, இரணைமடு நீர்த் தேக்கத்தில் கொள்ளப்படுகின்ற நீரில் இரசாயனக் கலவைகள் அதிகமான இருப்பதற்கான வாய்ப்பிருப்பதால் அதனால் குடாநாட்டு மக்களுக்கு பாதிப்பில்லையா? எனக் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர்கள், நைற்றஜன் எனப்படும் பதார்த்தத்தின் தாக்கம் குடாநாட்டிலுள்ள நிலத்தடி நீரிலும் பார்க்க இரணைமடு நீரில் குறைவாகவே இருப்பதாக ஆய்வுகளைக் குறிப்பிட்டுத் தெரிவித்தனர்.
http://www.jvpnews.com/srilanka/65364.html
புலிகளின் தலைவர்களுக்கு எதிராக நெடுங்கேணியில் 2000ம் இராணுவம் தாக்குதலாம்…!
நெடுங்கேணி முன்னெடுப்பு…! கோபிக்கு எதிரான முன்னெடுப்பில் படையினர் பங்கேற்பு
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் புதிய தலைவர் என்று கூறப்படும் கோபி என்றழைக்கப்படும் பொன்னையா செல்வநாயகம் கஜீபன் உள்ளிட்ட குழுவினருக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட இராணுவ முன்னெடுப்பில் இரண்டாயிரம் படையினர் ஈடுபட்டதாக வன்னி படைத் தலைமையகம் தெரிவித்தது.
நெடுங்கேணி, வெடிவைத்தகல் பகுதியில் இடம்பெற் இராணுவ முன்னெடுப்பில் கோபி, அப்பன் மற்றும் தேவியன் ஆகிய மூவரும் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.








http://www.jvpnews.com/srilanka/65352.html
Geen opmerkingen:
Een reactie posten