[ வியாழக்கிழமை, 10 ஏப்ரல் 2014, 11:37.31 PM GMT ]
கனடாவில் உள்ள பாரிய தமிழ் சமூகத்தின் மத்தியில் கட்டுக்கோப்பாக தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் ஊடுருவி இருக்கிறது.
இதற்கு அந்த நாட்டில் ஊடக நிறுவனங்களை தமிழீழ விடுதலைப் புலிகள் அமைத்து வழி நடத்தி வருகின்றனர்.
அங்கு விடுதலைப் புலிகள் இயக்கம் தடை செய்யப்பட்டுள்ள போதும், விடுதலைப் புலிகளின் நிதியை கொண்டு பல தமிழ் வானொலிகளும் தொலைக்காட்சி சேவைகளும் நடத்தப்படுகின்றன.
கனடாவில் இயங்கும் தமிழ் வண், வணக்கம் எப்.எம். போன்றன தமிழீழ விடுதலைப் புலிகளின் நிதியால், எம்.எம்.அலைவரிசைகளில் அங்கு நடத்தப்படும் வானொலி சேவைகள் என்று குறித்த பத்திரிகை தெரிவித்துள்ளது.
அத்துடன் இவ்வாறான பல தமிழ் ஊடகங்களில் விடுதலைப் புலிகள் ஊடுருவி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் கனடாவில் வாழ்கின்ற அமைதியான தமிழ் சமூகம் விடுதலைப் புலிகளால் ஊடுருவப்பட்டிருப்பதாக அந்த பத்திரிகை மேலும் தெரிவித்துள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyESULXmo3.html
சர்வதேச மனித உரிமைகள் அறிக்கைகளுக்கு ஐ.நாவின் பொதுச்சபை உந்துசக்தி
[ வெள்ளிக்கிழமை, 11 ஏப்ரல் 2014, 03:21.04 AM GMT ]
உறுப்பு நாடுகள் தமது மனித உரிமை மீறல்களை மதித்து நடக்கின்றன என்பது குறித்து மீளாய்வு செய்து அதனை வலிமைப்படுத்தும் திட்டத்துக்கு ஐக்கிய நாடுகளின் பொதுச்சபை கடந்த புதன்கிழமை அங்கீகாரம் வழங்கியது.
இந்த யோசனையின்படி, ஜெனீவாவை தளமாகக் கொண்ட 10 இணக்க அமைப்புக்களை புதுப்பிப்பதே நோக்கமாக உள்ளது.
இந்த இணக்க அமைப்புக்கள், உறுப்பு நாடுகள் சர்வதேச மாநாட்டு விழுமியங்களை எவ்வாறு நடைமுறைப்படுத்துகின்றன. குறிப்பாக சித்திரவதைக்கு எதிராகவும் சிறுவர் உரிமைகள் தொடர்பாகவும் நாடுகள் எவ்வாறு நடந்துக்கொள்கின்றன என்பதை இந்த அமைப்புக்கள் மீளாய்வு செய்கின்றன.
அதாவது இந்த அமைப்புக்கள், சர்வதேச மனித உரிமை பாதுகாப்பு திட்டத்தின் இதயங்களாக விளங்குகின்றன.
இவை, உறுப்பு நாடுகளின் மனித உரிமைகள் குறித்த உடனடியாகவே எச்சரிக்கைகளை விடுப்பது, மனித உரிமைகளுக்கான வழிமுறைகளை ஏற்படுத்துதல் போன்ற கடமைகளை கொண்டிருப்பதாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் குறித்த அமைப்புக்கள் நான்கு அல்லது ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை சிவில் குழுக்கள், ஜெனீவாவின் அமர்வுகளில் பங்கேற்கும் அரசுகளின் பிரதிநிதிகளின் கருத்துக்களை மையமாகக் கொண்ட முறையான அறிக்கைகளை சமர்ப்பிக்க வேண்டும் என்று கோரப்படும்.
அத்துடன் இந்த அமைப்புக்கள் பிரச்சினைகளை அடையாளம் கண்டு அதற்கான பரிந்துரைகளையும் வழங்கும் அதிகாரத்தை கொண்டிருக்கின்றன என்று நவநீதம்பிள்ளை குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை கடந்த புதன்கிழமையன்று ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட யோசனையின்படி ஜெனீவாவின் இணக்க அமைப்புக்களுக்கு தகவல்கள் மூலம் பங்களிப்பு செய்யும் தனிப்பட்டோர் மற்றும் குழுக்களுக்கு எதிராக செயற்படல், அச்சுறுத்தல் விடுத்தல், சிவில் குழுக்களின் தகவல் வழங்குதலை தடுத்தல் மற்றும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவைக்கு தகவல்களை வழங்கும் மனித உரிமை காப்பாளர்களை நோக்காக கொண்டு அச்சுறுத்தல் விடுத்தல் போன்ற நடவடிக்கைகள் கண்டிக்கப்பட்டுள்ளன.
http://www.tamilwin.com/show-RUmsyESVLXmpz.html
Geen opmerkingen:
Een reactie posten