தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 12 april 2014

புலிகள் மீண்டும் தலைதூக்க இடமளிக்கப் போவதில்லை!- இராணுவம்

தொடரும் புலிக்கதை: மற்றுமொரு புலிகளின் தலைவர் கைது என்கிறது பாதுகாப்பு தரப்பு
[ சனிக்கிழமை, 12 ஏப்ரல் 2014, 06:55.02 AM GMT ]
விடுதலைப் புலிகள் அமைப்பை மீளமைக்கும் செயற்பாடுகளில் ஈடுபட்டு வந்ததாக குற்றம் சுமத்தி யாழ். வேலணை பிரதேசத்தை சேர்ந்த ஒருவரை பாதுகாப்பு தரப்பினர் கைது செய்துள்ளனர்.
இவர், புலம்பெயர் தமிழர்களிடம் இருந்து லட்சக்கணக்கில் பணத்தை பெற்று புலிகள் அமைப்பை மீள உருவாக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டு வந்தாகவும் இவர் அந்த அமைப்பின் முன்னாள் தலைவர்களில் ஒருவர் எனவும் பாதுகாப்பு தரப்பினர் கூறியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபருக்கு கடந்த சில மாதங்களில் மாத்திரம் மலேசியாவில் உள்ள புலம்பெயர் அமைப்பொன்றின் தலைவர் 60 லட்சம் ரூபாவை அனுப்பி வைத்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
விடுதலைப் புலிகள் அமைப்பு இலங்கையில் செயற்பாட்டில் இருந்த காலத்தில், சந்தேக நபர் அந்த அமைப்பின் நலன்புரி மற்றும் நிர்வாகத்துறையின் தலைவராக பணியாற்றியுள்ளதாகவும் இவருக்கு மலேசியாவிலும் யாழ்ப்பாணத்திலும் வர்த்தக நிறுவனங்கள் இருப்பதாகவும் பாதுகாப்பு தரப்பு குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyESWLXmu3.html
புலிகள் மீண்டும் தலைதூக்க இடமளிக்கப் போவதில்லை!- இராணுவம்
[ சனிக்கிழமை, 12 ஏப்ரல் 2014, 06:23.40 AM GMT ]
நாட்டில் எந்த சந்தர்ப்பத்திலும் விடுதலைப் புலிகள் அமைப்பு மீண்டும் தலைதூக்க இடமளிக்க போவதில்லை என இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய தெரிவித்தார்.
நெடுங்கேணியில் நேற்று மேற்கொள்ளப்பட்டது அப்படியான நடவடிக்கையே எனவும் அவர் கூறியுள்ளார்.
விடுதலைப் புலிகளின் இலங்கையின் புதிய தலைவராக செயற்பட்ட கோபி என்ற செல்வநாயகம் கஜீபன் உட்பட மூன்று பேர் நேற்று கொல்லப்பட்டனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வடக்கில் மாத்திரமல்ல தெற்கிலும் மக்கள் அச்சமும் சந்தேகமும் இன்றி அமைதியாக புதுவருடத்தை கொண்டாட சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்துள்ளதாகவும் இராணுவப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyESWLXmu1.html

Geen opmerkingen:

Een reactie posten