[ சனிக்கிழமை, 12 ஏப்ரல் 2014, 12:00.52 AM GMT ]
சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு அவர் விடுத்துள்ள வாழ்த்து அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் ஜனநாயகம் மேலோங்கிய நாட்டை கட்டியெழுப்ப அமெரிக்கா தொடர்ந்து ஒத்துழைக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா சார்பிலும், அமெரிக்க மக்கள் சார்பிலும், அனைத்து இலங்கை மக்களுக்கும், புலம்பெயர்ந்து வாழ்கின்ற இலங்கையர்களுக்கும் அவர் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyESWLXms3.html
இலங்கையில் மீண்டும் அவசரகால சட்டம் அமுல்?
[ வெள்ளிக்கிழமை, 11 ஏப்ரல் 2014, 11:37.35 PM GMT ]
இதற்கான சட்டமூலம் விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று பாதுகாப்பு அமைச்சின் தகவல் ஒன்று தெரிவிக்கப்படுகிறது.
எதிர்வரும் வாரங்களில் சர்வதேச மனித உரிமைகள் ஆணைக்குழுவின் இலங்கைக்கு எதிரான விசாரணைக் குழு அறிவிக்கப்படவுள்ளது.
இந்த குழுவின் முன்னால் சாட்சி வழங்குவதை தடுக்கும் நோக்கில், வடக்கு கிழக்கிலும், தென்னிலங்கையின் பல பகுதிகளிலும் அரசாங்கத்துக்கு எதிரான தரப்பினரை கைது செய்வதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
தற்போது கைது செய்யப்படுகின்றவர்களை 48 மணித்தியாலங்களுக்கு மேல் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்த முடியாதுள்ளது.
இந்த நிலையில் கைது நடவடிக்கைகளுக்கு சட்ட ரீதியான அதிகாரத்தை அதிகரித்துக் கொள்ளும் நோக்கில் அரசாங்கம் மீண்டும் அவசகால சட்டத்தை அமுலாக்கவிருப்பதாக கூறப்படுகிறது.
http://www.tamilwin.com/show-RUmsyESVLXms1.html
Geen opmerkingen:
Een reactie posten