தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 12 april 2014

சவேந்திர சில்வாவுக்கு எதிராக நியூயோர்க்கில் ஆர்ப்பாட்டம்!



கடதாசி ஆலை நிர்வாகத்தினரை அறைக்குள் வைத்துப் பூட்டிய ஊழியர்கள்
[ சனிக்கிழமை, 12 ஏப்ரல் 2014, 07:53.25 AM GMT ]
வாழைச்சேனை கடதாசி ஆலையின் ஊழியர்களுக்கு வழங்கப்பட வேண்டிய சம்பள நிலுவையில் இரண்டு மாத சம்பளத்தினை வழங்குவதாக நிர்வாகம் அறிவித்து, வழங்காத நிலையில் ஐந்து பேரை ஊழியர்கள் அறையில் வைத்து பூட்டிய சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
கணக்காளர், முகாமையாளர், காசாளர் மற்றும் அலுவலக பணியாளர்கள் இரண்டு பேர் உட்பட ஐந்து பேரை நிர்வாகப் பகுதி காரியாலயத்தில் இருந்து வெளியேறாதவாறு பூட்டி கடந்த வியாழக்கிழமை விட்டனர்.
பின்னர் இந்த இடத்திற்கு வருகை தந்த வாழைச்சேனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினர் ஆலையின் ஊழியர்களோடு கலந்தாலோசித்ததன் பின்னர் பூட்டப்பட்ட கதவு திறக்கப்பட்டது.
இதன் பின்னர் நிர்வாகத்துடனும், ஆலை ஊழியர்களுடனும் கலந்தாலோசித்த பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, ஊழியர்களுக்கான சம்பளம் வழங்கப்படும் என்று நிர்வாகத்தினர் கூறியதாக தெரியப்படுத்தியதை அடுத்து கலைந்து சென்றனர்.
இதேவேளை பாசிக்குடாவில் உள்ள உல்லாச விடுதிகளுக்கு வாகனேரி குளத்தில் இருந்து பெறப்படும் நீர் காகித ஆலையில் சுத்திகரிக்கப்பட்டே பாசிக்குடாவிற்கு குழாய் மூலம்
செல்கின்றது.
ஊழியர்கள் அந்த நீரையும் வியாழக்கிழமை பிற்பகல் 3 மணி முதல் திறந்துவிடாமல் இருந்ததுடன், பொலிஸாரினால் வழங்கப்பட்ட உறுதிமொழியை அடுத்து அந்த நீர் விநியோகத்தையும் மாலை 6 மணி முதல் வழங்கியுள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmsyESWLXmu6.html


சவேந்திர சில்வாவுக்கு எதிராக நியூயோர்க்கில் ஆர்ப்பாட்டம்!
[ சனிக்கிழமை, 12 ஏப்ரல் 2014, 02:42.05 AM GMT ]
நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்துக்கான இலங்கையின் பிரதி வதிவிடப் பிரதிநிதி சவேந்திர சில்வாவுக்கு எதிராக நேற்று ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டது
சர்வதேச மன்னிப்பு சபையின் இளைஞர் பிரிவினால் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
திருகோணமலையில் ஐந்து மாணவர்கள் கொலை செய்யப்பட்டமை உட்பட்ட சம்பவங்கள் தொடர்பில் பொறுப்புக்கூறலை வலியுறுத்தியே இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இதன்போது சவேந்திர சில்வா, தமது அலுவலக அறையின் ஜன்னல் கண்ணாடியின் மூலம் ஆர்ப்பாட்டத்தை அவதானித்த பின்னர் ஜன்னலின் திரையை மூடிக்கொண்டமையை இன்னர்சிட்டி பிரஸ் காணொளி காட்சியாக படமாக்கியுள்ளது.
இந்த ஆர்ப்பாட்டத்தின் பின்னர், சர்வதேச மன்னிப்பு சபையின் இளைஞர் மன்னிப்பு பிரிவின் மஸாசுசெட்ஸ் (Massachusetts )இல் உள்ள பிரதிநிதி, ஐக்கிய நாடுகளின் இலங்கை காரியாலயத்துக்கு சென்று சவேந்திர சில்வாவின், முகவரி அட்டையை எடுத்து வந்தார்.
இதன்போது தாம், பொறுப்புக்கூறல் தொடர்பாக விடுத்த கோரிக்கைக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என சவேந்திர சில்வா உறுதியளித்தாக அந்த பிரதிநிதி தெரிவித்தார்.
இதேவேளை 2009ம் ஆண்டு இறுதிப் போரின் போது போர்க்குற்றங்களுக்கு காரணமான சவேந்திர சில்வாவை, ஐக்கிய நாடுகளின் அமைதி காப்பு படைக்கு ஆலோசகராக நியமித்தமை தொடர்பில் நேற்று இன்னர் சிட்டி பிரஸ், பான் கீ மூனின் பேச்சாளரிடம் வினவியது.
இதற்கு பதிலளித்த பேச்சாளர், ஸ்டீபன் டுஜாரிக் எந்த கருத்தையும் வெளியிடவில்லை.
2ம் இணைப்பு
மூவரின் கொலை குறித்து ஐ.நா.சபையில் கேள்வி
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீள உருவாக்க முயற்சிப்பதாக தெரிவித்து நேற்றைய தினம் கோபி உள்ளிட்ட மூன்று பேர் கொலை செய்யப்பட்டமை தொடர்பில், ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையக செய்தியாளர் சந்திப்பில் வைத்து கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
எனினும் ஐக்கிய நாடுகளின் பேச்சாளர் ஸ்டீபன் டுஜாரிக் இதற்கான பதில்கள் எதனையும் வழங்கவில்லை.
http://www.tamilwin.com/show-RUmsyESWLXmt4.html

Geen opmerkingen:

Een reactie posten