இதனைச் செய்யும்போது அவர்களின் சிலர் உயிரிழந்தும் உள்ளார்கள். ஆனால் எப்படி என்றாலும் பிரித்தானியாவுக்குள் வந்துவிடவேண்டும் என்பதே இவர்களின் முழு நோக்கமாக உள்ளது. கடும் குழிர் மழை காற்று எதனையும் பொருட்படுத்தாமல் இவர்கள் வாழ்ந்து வருவதாக ஆங்கில ஊடகம் ஒன்று சுட்டிக்காட்டியுள்ளது. இதனைப் பார்த்த பல பிரெஞ்சுக்காரர்கள், குறித்த இடத்திற்குச் சென்று அவர்களுக்கு உணவுகளை கூட வழங்கியுள்ளார்கள். தடுப்பு முகாமை விட்டு தப்பிச் சென்றவர்களை பிரான்ஸ் பொலிசார் பெரிதாக மேற்கொள்வதில்லை என்றும் கூறப்படுகிறது. ஆட்கள் எண்ணிக்கை குறைந்தால் போதும் என்று அவர்கள் இருந்துவிடுகிறார்கள் என்றும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இதேவேளை இப்படியான குடிசைகளில் பல தமிழர்களும் வாழ்ந்து வருவதாக மேலும் அறியப்படுகிறது. சரியான சந்தர்பம் கிடைக்கும் பட்சத்தில் இவர்கள், அங்கே வரும் லாரிகளில் ஏறி, பிரித்தானியாவுக்குள் நுளைய முற்படுகிறார்கள். இதன் காரணமாக இவர்களின் குடிசைகள், நெடுஞ்சாலைக்கு அருகாமையில்தான் அமைக்கப்பட்டுள்ளது என்று அந்த ஆங்கில ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது. இங்கே நாம் பிரசுரித்துள்ள படத்தில், நெடுஞ்சாலையில் பிரித்தானியா நோக்கிச் செல்லும் லாரி ஒன்றில் வேற்று இனத்தவர்கள் ஏற முற்படும் காட்சிகளும் அடங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்க விடையம் ஆகும்.
http://www.athirvu.com/target_news.php?getnews=news&action=fullnews&showcomments=1&id=6643
Geen opmerkingen:
Een reactie posten