[ ஞாயிற்றுக்கிழமை, 13 ஏப்ரல் 2014, 02:17.40 PM GMT ]
நீதி வேண்டும் உலகம் எமக்காக போராடும் போது, எமது பங்கை நாம் செய்யத் தவறினால், எமது சந்ததி எம்மை மதிக்குமா அல்லது மன்னிக்குமா? என் வருந்திய வேளை சிங்கள அரசின் அறிக்கை வெளியானது.
பதினாறு அமைப்புக்களையும், அவற்றைச் சார்ந்த நானூற்றி இருபத்தி நான்கு உறுப்பினர்களையும் பயங்கரவாதிகள் என சித்தரிக்கும் சிங்கள அரசின் பட்டியலில், தேவை காரணமாக சிலர் சேர்க்கப்பட்டதும், அதிலும் மேலான காரணத்திற்காக பலர் நீக்கக்கப்பட்டதும் ஆச்சரியமானதல்ல. ஆனால், இந்த அறிக்கையும் பட்டியலும், சிங்கள அரசின் பதட்ட நிலையை தெளிவாகக் காட்டியதுதான் ஆச்சரியமானது.
எமக்குத் தேவையான அடையாளத்தை முள்ளிவாய்க்கால் தந்து ஐந்து ஆண்டுகளாகியும் தேச மீட்புக்கான எதையுமே செய்யாது, மற்றவர்களையும் செய்யவிடாது, புலம்பெயர் மக்களின் உணர்வுகளை கட்டிப்போட்ட இந்த அணிகளும், அதன் தலைமைகளும் பயங்கரமான கில்லாடிகளேயன்றி அவர்கள் பயங்கரவாதிகள் அல்ல என்ற உண்மையைக்கூட இந்த சிங்கள அரசால் புரிய முடியவில்லையா? ஆண்டுக்கு ஒரு மகாநாடும், வருடத்திற்கு இரண்டு இராப்போசனமும் நடாத்துவதே தேச மீட்புக்கான அரசியல் போராட்டம் என் நம்பி செயற்படும் அந்த அப்பாவிகள் பயங்கரவாதிகளா?
சிங்கள அரசின் பட்டியலில் குறிப்பிட்ட அமைப்புக்களும், சங்கங்களும் அதில் அங்கம் வகிக்கும் தமிழர்களும் பயங்கரவாதிகளென்றால்; அவர்களுக்கு தஞ்சம் கொடுத்த நாடுக்களையும், அந்த அமைப்புகளை சட்டபூர்வமாக இயங்க அனுமதி வழங்கிய அரசுகளையும் மனிதமே இல்லா சிங்கள அரசு அவமதிப்பதாக உங்களுக்குத் தோன்றவில்லையா?
ஐ.நா சபையின் மனித உரிமை மீறலுக்கான சர்வதேச விசாரணை தீர்மானமாகியது கண்டு கலங்கி, தடுமாறி நிற்கும் சிங்கள அரசு, போர்க்குற்ற விசாரணைக்கான தீர்மானம் ஐ.நா வில் நிறைவேறும் போது என்ன செய்யப் போகிறார்கள்? ஓடி ஒழிவார்களா அல்லது ஓலமிட்டு ஒப்பாரி வைப்பார்களா?
வெளிநாட்டு தமிழர்களை பயமுறுத்தி விரட்டிவிட்டு, வாழ்வாதமற்று வாழத் துடிக்கும் எம் ஈழம்வாழ் உறவுகளை தனிமைப்படுத்தி, அடக்குமுறை மூலம், பயங்கரவாதம் என்ற போர்வையிலே அவர்களை அழிக்க சிங்கள அரசு வகுத்த திட்டத்தில் ஒன்றே இந்த அறிக்கையும், பட்டியலுமாகும். இதில், எதுவுமே பலிக்காது என்பதை இந்தக் கொடியவர்கள் அறியும் நாள் வெகு தொலைவில் இல்லை. கலியுக காலம் என்றாலும் அதற்கும் ஓர் எல்லை உண்டல்லவா.
தாம் தமிழர் என்பதை அடியோடு மறந்து, ஆங்கிலத்தில் பேசி, சிங்களத்தில் சிரித்து, சிங்களவரோடு சிங்களவராய் வாழ்ந்த கொழும்புத் தமிழர்களுக்கு சிங்கள அரசுகள் கற்பித்த பாடத்தை யாரால் மறக்க முடியும்? தமிழராய் பிறந்,த ஒரே காரணத்திற்காக, இனக்கலவரம் என்ற போர்வையிலே, சிங்கள காடையரின் உதவியுடன், காலத்துக்குக் காலம், சிங்கள அரசும், அதன் படைகளும் நடாத்திய இனஅழிப்பின் எதிரொலியே இன்று நாம் காணும் ஈழம்வாழ் உறவுகளின் இணையில்லா ஒற்றுமை.
வெளிநாட்டில் செயற்படும் புலம்பெயர் தமிழர்களையும், அவர்களின் அமைப்புக்களையும் எதிரியாகப் பார்க்கும் இந்த அர்சும் எமக்குள் ஓர் புரிந்துணர்வை/ ஒற்றுமையை கொண்டு வருவது நிட்சயம். புலத்தில் வாழும் இலட்சியவாதிகளும், தன்மானத் தமிழர்களும் இணைந்து செயற்படுவதை யாரால் தடுக்க முடியும்? நன்றி.
கலாநிதி ராம் சிவலிங்கம்
sivalingham@sympatico.ca
sivalingham@sympatico.ca
http://www.tamilwin.com/show-RUmsyESXLXlrz.html
மெல்பேர்ணில் அகதிகளுக்கு ஆதரவாக இடம்பெற்ற கவனயீர்ப்புப் பேரணி
[ ஞாயிற்றுக்கிழமை, 13 ஏப்ரல் 2014, 02:24.07 PM GMT ]
அவுஸ்திரேலியா அரசு புகலிடக் கோரிக்கையாளர்களை நடாத்தும் முறையை எதிர்த்தும், அவர்கள் தொடர்பில் அவுஸ்திரேலிய அரசின் கொள்கையையும் அணுகுமுறையையும் விமர்சித்தும் அகதிகளுக்கு ஆதரவாக இப்பேரணி நடாத்தப்பட்டது.
இன்று நண்பகல் 1.30 மணியளவில் மெல்பேர்ண் நூல்நிலையம் முன்பாகப் பொதுக்கூட்டத்துடன் தொடங்கிய இந்நிகழ்வில், ஆயிரக்கணக்கானோர் பங்கு பற்றியிருந்தனர்.
குருத்தோலை ஞாயிறான இன்று விக்ரோறிய மாநிலத்தின் கிறிஸ்தவ மத அமைப்புக்கள் பலவும் முழுமூச்சாக இப்பேரணிக்குத் தமது ஆதரவை நல்கி திரண்டிருந்தன.
நண்பகல் 1.45 மணிக்கு பெருமளவான தேவாலயங்களில் அகதிகளுக்கு ஆதரவாக மணியொலிகள் எழுப்பப்பட்டன.
கிறிஸ்தவ அமைப்புக்கள் அகதிகள் தொடர்பில் தமது கரிசனையையும், அவுஸ்திரேலிய அரசின் அகதிகள் மீதான அணுகுமுறை தொடர்பாக தமது விமர்சனத்தையும் வெளிப்படையாக அறிவித்து இப்போராட்டத்தில் கலந்துகொண்டன.
வழமைபோல் அகதிகள் விடயத்தில் தீவிரமாகப் போராடிவரும் இடதுசாரி அமைப்புக்கள், பொதுநல அமைப்புக்கள், மனிதவுரிமை அமைப்புக்கள் என்பனவும் இப்பேரணியிற் கலந்துகொண்டன.
அவுஸ்திரேலியாவின் மூன்றாவது பெருங்கட்சியான கிறீன் கட்சியின் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டு தமது உரையை வழங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
மெல்பேர்ண் நகரின் முதன்மை வீதி வழியாகச் சென்ற இப்பேரணியில் பத்தாயிரம் வரையானோர் பதாகைகளை ஏந்திவந்ததோடு, அகதிகளுக்கு ஆதரவாகவும் அவுஸ்திரேலிய அரசுக்கு எதிராகவும் முழக்கமிட்டனர்.
http://www.tamilwin.com/show-RUmsyESXLXlr0.html
Geen opmerkingen:
Een reactie posten