[ ஞாயிற்றுக்கிழமை, 13 ஏப்ரல் 2014, 12:00.43 AM GMT ]
யாழ்ப்பாணம் கச்சேரியில் இடம்பெற்ற 510 மாணவர்களுக்கான மஹாபொல புலமைப் பரிசில்களை வழங்கும் நிகழ்வில் உரையாற்றும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தற்போது யுத்தம் நிறைவடைந்து அமைதியான சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது.
ஒரு காலத்தில் தாமும் போராளியாக செயற்பட்டு பின்னர் அரசியலில் இருந்து வருகிறேன்.
வன்முறைகளால் எதனையும் சாதிக்க முடியாது.
ஆனால் பேச்சுவார்த்தைகளை நடத்தி பெற்றுக் கொள்ள வேண்டிய அனைத்து விடயங்களையும் பெற்றக் கொள்ள முடியும்.
எனவே குழப்பங்களுக்கு இளைஞர்கள் துணை போக கூடாது என்று அவர் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyESXLXmx1.html
பயங்கரவாதிகளுடன் தொடர்புகளைப் பேணுவோரின் சொத்துக்கள் அரசுடமையாக்கப்படும்: கோத்தபாய
[ ஞாயிற்றுக்கிழமை, 13 ஏப்ரல் 2014, 03:18.13 AM GMT ]
அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்றின் ஊடாக இவ்வாறு சொத்துக்கள் அரசுடமையாக்கப்பட உள்ளது.
பயங்கரவாதிகளுடன் தொடர்புகளைப் பேணி வரும் நபர்களின் தராதரத்தைப் பாராது சொத்துக்களை அரசுடமையாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சியும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
தடை செய்யப்பட்ட அமைப்புக்கள் அல்லது பயங்கரவாதிகளுடன் தொடர்புகளைப் பேணினால் சட்டத்தை உச்ச அளவில் அமுல்படுத்த நேரிடும்.
தடை செய்யப்பட்ட அமைப்புக்களுடன் தொடர்புகளைப் பேணி வரும் அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyESXLXlo0.html
Geen opmerkingen:
Een reactie posten