[ ஞாயிற்றுக்கிழமை, 13 ஏப்ரல் 2014, 02:09.49 PM GMT ] [ valampurii.com ]
இந்தக் கேள்விக்குப் பதில்; வீதி திருத்தம் என்றோ, துரையப்பா ஸ்ரேடியத்தில் இசை நிகழ்ச்சி என்றோ பதிலளிக்க முடியுமா என்ன?
இப்போது நாட்டில் என்ன நடக்கிறது? என்ற கேள்வியானது ரோந்துப் பணியில் மீளவும் படையினர் ஈடுபட்டுள்ளமை, கிளிநொச்சி தர்மபுரத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகக் கூறப்படும் கதை, அதனைத் தொடர்ந்து தாயும் மகளும் கைது இப்படியாக ஒவ்வொரு நாளும் நடந்த நாடகம், திடீர் என மூவர் சுட்டுக் கொலை என்ற கட்டத்தில் தொடருமா? முற்றுமா? என்பது தெரியாமல் உள்ளது.
இந்தச் சம்பவங்கள் நிஜமானதுதானா? என்று கேட்பவர்கள், விண்டவர் கண்டிலர்; கண்டவர் விண்டிலர் என்ற தத்துவத்தைக் கூறிக் கொள்கின்றனர்.
விண்டவர் கண்டிலர்; கண்டவர் விண்டிலர் என்பதற்குப் பொருள் தெரியவில்லை என்று விழித்தால், உள்ளது இல்லதாகாது; இல்லது உள்ளதாகாது என்ற சற்காரிய வாதத்தைக் கூறி முடிக்கின்றனர்.
ஐயா! விளக்கம் கேட்டதற்கு இன்னும் கடுமையான பொருள் கூறுவது முறையோ! என்று நாம் முணுமுணுத்தால்; கைதுகள் உண்மை, தேடுதல் வேட்டைகள் உண்மை, மூவரைச் சுட்டுக் கொன்றது உண்மை, தர்மபுரத்தில் சுட்டது உண்மையா? என்பதுதான் புரியாப் புதிர் என்கின்றனர்.
இங்கு தான் சற்காரிய வாதம் பொருள் தருகிறது என்கின்றனர். இத்தகையதோர் நிலைமையால் தான் ஐயா! இங்கு என்ன நடக்கிறது என்ற கேள்வி எழுகிறது.
இந்தக் கேள்விக்கான பதிலை எப்படிக் கூறுவது. முன்பு நாங்கள் உரிமைக்காகப் போராட்டம் நடத்தினோம். அப்போதெல்லாம் அவர்கள் போர் வேண்டாம் என்றனர்.
2009 மே மாதம் போர் முடிந்து போயிற்று. போருக்குப் பின் எங்களின் நிலைப்பாடு அமைதி என்றானது. ஆனால் போர் வேண்டாம் என்றவர்கள் இப்போது போர் வேண்டும் என்று கூறுகின்றனர்.
போர் வேண்டும் என்பதற்குள் ஆழமான கருத்துமுண்டு. அதாவது வடக்கில் போர்ச் சூழல் நிலவுவதான நிலைமை இருக்கவேண்டும்.
அதேநேரம் அந்தப் போர்ச் சூழலில் புலிகள் மீள வருவதாக, மீளச் சுடுவதான கதைகள் இருக்க வேண்டுமே தவிர, அந்தக் கதையாவும் கற்பனை என்பதாகவும் இருத்தல் அவசியம்.
அப்படியானால் போர்ச் சூழலை எப்படி ஏற்படுத்துவது என்ற கேள்வி எழும்.
அட! இதுகூடத் தெரியாதா? பள்ளி வாழ்க்கையில் துள்ளித் திரியும் போது, நீ புலி; நான் ஆமி என்று நாங்களே பிரிந்து நின்று விளையாடினோமல்லவா? அதுபோல விளையாடுவது என்று பெரியவர்கள் முடிவெடுத்தால் யார் என்ன செய்வது?
ஜெனிவாத் தீர்மானத்தின் காரம் போக்க அவசர தேவையாக வடக்குக் கிழக்கில் ஒரு யுத்த சூழ்நிலையை உருவாக்க வேண்டும்.
அதற்கான ஒரு ஏற்பாடுதான் இதுவெனினும், சுட்டுக் கொலை என்பதைச் சுட்டுக் கொல்லாத வரை இந்த நாட்டில் பிரச்சினைகள் வெவ்வேறு வடிவங்களில் ஏற்படவே செய்யும்.
http://www.tamilwin.com/show-RUmsyESXLXlry.html
சொத்துக்களை அபகரிக்கவே புலம்பெயர்ந்தவர்கள் மீதான தடை!- மார்க் கார்னியு
[ சனிக்கிழமை, 12 ஏப்ரல் 2014, 11:46.36 PM GMT ]
கனடாவின் முதல் விண்வெளி வீரரும், லிபரல் கட்சியின் உறுப்பினருமான மார்க் கார்னியு இதனைத் தெரிவித்துள்ளார்.
கனடாவில் உள்ள தமிழ் அமைப்புக்கள் அமைதிக்கான செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றன.
ஆனால் இறுதி யுத்தத்தில் பாரிய குற்றங்களை மேற்கொண்ட இலங்கை அரசாங்கம், அதனை மறைப்பதற்காக ஏனைய தரப்பினர் மீது குற்றச்சாட்டுகளை முன்னெடுத்து வருகின்றன.
தற்போது புலம்பெயர்ந்த மக்களின் இலங்கையில் உள்ள சொத்துக்களை அபகரிக்க திட்டமிட்டுள்ளது.
அத்துடன் சர்வதேச விசாரணைக்கும் ஒத்துழைக்க மறுத்து வருகிறது.
இது கண்டனத்துக்குரிய விடயம் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyESWLXmxz.html
Geen opmerkingen:
Een reactie posten