[ புதன்கிழமை, 16 ஏப்ரல் 2014, 08:07.12 AM GMT ]
தென்னாபிரிக்க அரசாங்கத்தின் அழைப்பை ஏற்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் கடந்த வாரம் அங்கு விஜயம் செய்திருந்தனர்.
தமது விஜயம் பயனுள்ளதாகவும் ஆக்கபூர்வமானதாகவும் அமைந்ததாக கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு அரசியல் தீர்வு வழங்கப்பட வேண்டும் என நாங்கள் தென்னாபிரிக்க அரசாங்கத்திற்கு அறிவித்துள்ளோம்.
அத்துடன் வடக்கில் இராணுவ அச்சுறுத்தலை எதிர்நோக்காது வாழ வேண்டும் எனவும் நாங்கள் தென்னாபிரிக்காவிடம் தெரியப்படுத்தினோம்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை மீண்டும் ஒரு முறை தவறாக வழிநடத்த முடியாது.
இலங்கையில் தென்னாபிரிக்கா மேற்கொள்ளும் நகர்வுகளுக்கு அரசாங்கம் எவ்வாறான ஆதரவை வழங்கும் என்பதை நாங்கள் அவதானிப்போம் என்றார்.
தென்னாபிரிக்கா சென்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இலங்கைக்கான அந்நாட்டின் சிறப்பு பிரதிநிதி சிறில் ரம்போஷா, தென்னாபிரிக்க வெளிவிவகார அமைச்சர் மற்றும் ஏனைய அதிகாரிகளை சந்தித்தனர்.
தென்னாபிரிக்காவின் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் செயற்பாடுகள் தொடர்பில் ஆர்வத்தை வெளிப்படுத்திய இலங்கை அரசாங்கத்தின் பிரதிநிதிகள் அண்மையில் அந்நாட்டு பிரதநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தனர்.
ஐ.நா மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்பட்ட தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் தென்னாபிரிக்கா கலந்து கொள்ளவில்லை.
இலங்கை தானகவே நீடித்த தீர்வை அடைய ஐ.நா மனித உரிமை பேரவை அந்நாட்டுக்கு ஆதரவு வழங்க வேண்டும் என தென்னாபிரிக்கா மனிதஉரிமைகள் பேரவையில் தெரிவித்திருந்தது.
http://www.tamilwin.com/show-RUmsyESaLXkr3.html
துப்பாக்கியும் தோட்டாக்களும் தாருங்கள்: கோத்தபாயவிடம் ஞானசார தேரர் கோரிக்கை
[ புதன்கிழமை, 16 ஏப்ரல் 2014, 07:40.43 AM GMT ]
பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர், தனது பாதுகாப்புக்காக துப்பாக்கி மற்றும் தோட்டக்களை வழங்குமாறு கோரி பாதுகாப்பு அமைச்சிடம் விண்ணப்பம் ஒன்றைச் சமர்ப்பித்துள்ளார்.
தனது உயிர் பாதுகாப்புக்காக கைத்துப்பாக்கி ஒன்றையும் 50 தோட்டக்களையும் வழங்குமாறு அவர் தனது விண்ணப்பத்தில் கேட்டுள்ளார்.
பௌத்த சாசனத்தை பாதுகாக்கவும் அதனை நிலைபெற செய்யும் நோக்கிலும் ஏற்படுத்தப்பட்டுள்ள பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் தனக்கு அந்நிய மதங்கள் மற்றும் அரசின் முக்கிய அமைச்சர்கள் சிலரால் மரண அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது எனவும் சில சந்தர்ப்பங்களில் தன்னை கொலை செய்ய முயற்சிக்கப்பட்டுள்ளதாகவும் ஞானசார தேரர் கூறியுள்ளார்.
இதனால் தனக்கு கைத்துப்பாக்கியும் அதற்கான 50 தோட்டக்களும் வழங்குமாறு அவர் கேட்டுள்ளார்.
அதேவேளை ஞானசார தேரரின் கோரிக்கை தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளதாக தெரியவருகிறது.
http://www.tamilwin.com/show-RUmsyESaLXkr2.html
Geen opmerkingen:
Een reactie posten