தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 16 april 2014

ஈழத் தமிழர் பிரச்சினை பற்றி மோடி பேசாதது ஏமாற்றம்!- பழ.நெடுமாறன் !

ஈழத் தமிழர் பிரச்னைகுறித்து பாஜக பிரதமர் பதவி வேட்பாளர் மோடி எதுவும் கூறாதது ஏமாற்றமளிக்கிறது என்று உலகத் தமிழர் பேரியக்கத் தலைவர் பழ.நெடுமாறன் கூறினார்.
திருநெல்வேலி மாவட்டம், பாபநாசத்தில் தினமணி செய்தியாளரிடம் நேற்று செவ்வாய்க்கிழமை அவர் கூறியதாவது:
பாஜக தனது தேர்தல் அறிக்கையில் ஈழத்தமிழர் பிரச்சினை குறித்தோ, ராஜபக்ச மீது சர்வதேச நீதி விசாரணை வேண்டும் என்பதையோ, மீனவர்கள் சுட்டுக் கொல்லப்படுவது குறித்தோ எதுவும் குறிப்பிடவில்லை.
இப்பிரச்சினைகளை பா.ஜ.க. தலைமை அடியோடு புறக்கணித்துவிட்டது.
 தமிழ்நாட்டுக்குப் பிரசாரம் செய்ய வந்த மோடியும் இந்த பிரச்சினை குறித்து எதுவும் நேரடியாகப் பேசவில்லை.
இது உலகத் தமிழர்கள் அனைவருக்கும் ஏமாற்றத்தை அளித்திருக்கிறது என்றார் பழ.நெடுமாறன்.
http://www.tamilwin.com/show-RUmsyESaLXkq0.html

Geen opmerkingen:

Een reactie posten