தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 16 april 2014

சரவணபவன் எம்.பிக்கு கைத்தொலைபேசி ஊடாக கொலை மிரட்டல்!

கனடாவின் முடிவு மிகவும் கீழ்த்தரமானது!- இலங்கை அரசாங்கம்
[ புதன்கிழமை, 16 ஏப்ரல் 2014, 07:31.54 AM GMT ]
பொதுநலவாய அமைப்புக்கு கனடா வழங்கி வந்த நிதியை அந்நாடு நிறுத்த எடுத்துள்ள தீர்மானம் ராஜதந்திர ரீதியில் மிகவும் அநீதியான செயல் என அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
அத்துடன் நடைமுறையில் இருந்து வரும் சம்பிரதாயங்களின் அடிப்படையில் கனடாவின் தீர்மானம் மிகவும் கீழ் மட்டமான செயல் எனவும் அவர் கூறியுள்ளார்.
பொதுநலவாய அமைப்பின் தற்போதைய தலைமைத்துவத்தை வகித்து வரும் இலங்கையின் மனித உரிமை நிலைமைகளை கவனத்தில் கொண்டு அந்த அமைப்புக்கு வழங்கி வரும் 20 மில்லியன் டொலர் நிதியை நிறுத்துவதாக கனடா நேற்று அறிவித்தது.
2013ம் ஆண்டு பொதுநலவாய நாடுகளின் மாநாட்டை நடத்திய நாடு என்ற ரீதியில் மட்டுமல்லாது அந்த அமைப்பின் இன்றைய தலைமைத்துவத்தை வகிக்கும் இலங்கை, மனித உரிமை, அரசியல் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக் கூறல் சம்பந்தமாக அர்த்தமுள்ள நடவடிக்கை எடுக்க வேண்டிய பொறுப்பை கொண்டிருப்பதாக கனேடிய வெளிவிவகார அமைச்சர் ஜோன் பேர்ட் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், ஐ.நா மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்ட சூடு தனியும் முன்னர் கனடா, பொதுநலவாய அமைப்பின் ஊடாக இலங்கைக்கு அழுத்தத்தை கொடுத்துள்ளமையானது சர்வதேச ரீதியில் எடுத்துக்கொண்டால் இலங்கை நற்பெயருக்கு சேதத்தை ஏற்படுத்தாதா என கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்துள்ள அமைச்சர் ரம்புக்வெல்ல,
கனடாவின் நற்பெயர் சம்பந்தமாகவே கேள்வி எழுந்துள்ளது. அந்நாடு மறைத்து வைத்திருந்த நிகழ்ச்சி நிரலின் ஒரு பகுதியை தற்போது வெளியிட்டுள்ளது.
கனேடிய அரசாங்கம் தனது வாக்கு வங்கியை பாதுகாப்பதற்காக வேறு விடயங்களை வெளிக்கொண்டு வருகிறது எனவும் அமைச்சர் ரம்புக்வெல்ல குறிப்பிட்டுள்ளார்.
சரவணபவன் எம்.பிக்கு கைத்தொலைபேசி ஊடாக கொலை மிரட்டல்!
[ புதன்கிழமை, 16 ஏப்ரல் 2014, 07:10.40 AM GMT ]
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவனுக்கு தொலைபேசியூடாக கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது.
அவர் நேற்றிரவு யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த சமயமே குறித்த கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் இது குறித்து  தெரிவித்ததாவது,
குறித்த அழைப்பு எனது கையடக்கத் தொலைபேசிக்கு மேற்கொள்ளப்பட்டிருந்தது.
தமிழில் உரையாடிய ஒரு நபர், நீங்கள் தற்போது எங்கு சென்று கொண்டிருக்கிறீர்கள் என்று எனக்கு நன்றாகத் தெரியும்.
நீங்கள் எவ்வாறு போக வேண்டிய இடத்துக்குப் போய்ச் சேருகிறீர்கள் என்று பார்ப்போம் என்று அச்சுறுத்தும் பாணியில் பேசினார்.
077 9908892 என்ற இலக்கத்தில் இருந்தே அந்த அழைப்பு ஏற்படுத்தப்பட்டிருந்தது என்று தெரிவித்தார்.
தமக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமை தொடர்பில், வட மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜெயசுந்தர தொலைபேசியில் தொடர்பு கொண்டு முறையிட்டுள்ளதுடன், கொலை அச்சுறுத்தல் விடுக்கப் பயன்படுத்தப்பட்ட தொலைபேசி இலக்கமும் பொலிஸாரிடம் கையளிக்கப்பட்டுள்ளது என்றார்.
http://www.tamilwin.com/show-RUmsyESaLXkr0.html

Geen opmerkingen:

Een reactie posten