தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 19 april 2014

வெற்றி நினைவுச்சின்னம், அபிவிருத்தி என்பன போரின் காயங்களை குணப்படுத்தாது- உலக பொதுக்கொள்கை நிறுவகம்!

விடுதலைப் புலிகள் குறித்து அவதானத்துடன் இருக்க வேண்டும்: சிங்கள ஊடகம்
[ சனிக்கிழமை, 19 ஏப்ரல் 2014, 04:53.16 AM GMT ]
தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பில் அவதானத்துடன் இருக்க வேண்டுமென தினமின பத்திரிகையின் ஆசிரியர் தலையங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
புலிகள் தொடர்பில் கடும் அவதானத்துடன் இருக்க வேண்டிய காலம் உருவாகியுள்ளது.
கோபி, தேவியன், அப்பன் ஆகியோர் தொடர்பிலான சம்பவம் இதனையே வெளிப்படுத்துகின்றது.
இலங்கையில் புலிச் செயற்பாடுகள் ஸ்தம்பிதம் அடைந்துள்ள போதிலும் சர்வதேச ரீதியில் புலிகளின் செயற்பாடுகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
கடும்போக்குடைய தமிழ் அரசியல்வாதிகள் வடக்கு இராணுவ முகாம்களை பற்றி பேசியதும், ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியதும் பாரிய திட்டமொன்றின் முதல் கட்டமே.
இந்த திட்டங்களை தோற்கடிக்காவிட்டால் பிரிவினைவாதத்திற்கு அடிமையாக நேரிடும்.
கனடா, சுவிட்சர்லாந்து, ஜெர்மன், பெல்ஜியம், நெதர்லாந்து உள்ளிட்ட பல நாடுகள் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு அடைக்கலம் வழங்கி வருகின்றன.
1980கள் முதல் தமிழீழ விடுதலைப் புலிகளுக் அதிகளவில் வெளிநாட்டு நிதி கிடைக்கப்பெற்றுள்ளது.
வெளிநாட்டு தமிழர்களிடம் பெற்றுக் கொள்ளும் கப்பப் பணம் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் பணம் ஆகியவற்றை புலிகள் ஆயுத கொள்வனவிற்காக பயன்படுத்தினர்.
சில நாடுகள் இலகு ரக விமானங்ளைக் கூட புலிகளுக்கு வழங்கியுள்ளன.
நெடுங்கேணி சம்பவமானது நகத்தினால் கிள்ளி எறியக் கூடிய நிலையிலேயே தீர்க்கப்பட வேண்டும். மாறாக கோடரியால் வெட்டக் கூடிய வகையில் வளர்த்துவிடக் கூடாது.
மனித உரிமை, ஜனநாயகம் போன்ற பல்வேறு வழிகளில் விமர்சனங்கள் எழக்கூடும். எனினும் இவை ஒன்றும் நாட்டின் தேசிய பாதுகாப்பை உறதி செய்யாது.
கோலாலம்பூரில் நடைபெற்ற பாதுகாப்பு மாநாட்டில் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ச சில பலம்பொருந்திய நாடுகள் புலிகளுக்கு ஆதரவளிப்பதாக தெரிவித்திருந்தார்.
புலிகள் பாரியளவில் பிரச்சாரத்திற்காக பணத்தைச் செலவிடுகின்றனர்.
முப்பதுக்கும் மேற்பட்ட நாடுகள் தமிழீழ விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கி வருவதாக கோத்தபாய சுட்டிக்காட்டியுள்ளார்.
இது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டியது அவசியமாகின்றது.
சர்வதேச பொலிஸாருடன் இணைந்து முக்கிய புலிச் செயற்பாட்டாளர்களை கைது செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
டொலர்களுக்கு அடிபணியாது அனைவரும் பயங்கரவாதத்திற்கு எதிராக போராட வேண்டியது அவசியமானது என ஆசிரியர் தலையங்கத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyESdLXjv0.html
வெற்றி நினைவுச்சின்னம், அபிவிருத்தி என்பன போரின் காயங்களை குணப்படுத்தாது- உலக பொதுக்கொள்கை நிறுவகம்
[ சனிக்கிழமை, 19 ஏப்ரல் 2014, 05:46.08 AM GMT ]
இலங்கையில் வெற்றிக்கான நினைவுச்சின்னத்துக்கு பதிலாக போரினால் உயிரிழந்த அனைவருக்கும் நினைவுச்சின்னம் உருவாக்கப்படவேண்டும் என்று பேர்லினில் இயங்கும் உலக பொதுக்கொள்கை நிறுவகம் கோரியுள்ளது.
இந்த நிறுவகத்தின் ஜெரிட் கேட்ஸ் என்பவர் இலங்கையின் வடக்கு கிழக்கில் மேற்கொண்ட பயணத்தின் பின்னர் இந்தக் கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
வன்னியில் ஏ கே 47 துப்பாக்கியை ஏந்திய வண்ணம் இலங்கை படைவீரர் ஒருவரின் நினைவுச்சின்னம் அமைக்கப்பட்டுள்ளது. ஒரு கையில் துப்பாக்கியும் ஒரு கையில் இலங்கைக் கொடியையும் ஏந்திய நிலையில் இந்த நினைவுத்தூபி அமைக்கப்பட்டுள்ளது. இத் தூபி 2009 ம் ஆண்டு விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரின் பின்னர் இலங்கை படையினரால் அமைக்கப்பட்டுள்ளது.
எனினும் அந்த நினைவுத்தூபியில் பெயர் பலகை ஆங்கிலத்திலும் இலங்கையின் முதன்மை மொழியாக உள்ள சிங்களத்தில் மாத்திரம் உள்ளது. தமிழுக்கு அதில் இடமில்லை. இதனைத்தவிர போரினால் பாதிக்கப்பட்ட வன்னியில் அபிவிருத்தி திட்டங்கள் என்ற பெயரில் பல நட்சத்திர ஹோட்டல்கள் மற்றும் நிர்மாணங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
எனவே சிங்கள மக்களை பொறுத்தவரையில் அங்கு போர்க்குற்றச்சாட்டுக்களுக்கான ஏதுக்களை காணக்கூடிய சந்தர்ப்பம் இல்லை என்று ஜெரிட் கேட்ஸ் குறிப்பிட்டுள்ளார்.
வடக்குகிழக்கில் போரின் தாக்கங்கள் இன்னமும் அன்றாட வாழ்க்கையில் பல்வேறு வழிகளில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. புதிய பாதைகள், முதலீடுகள்,  ரயில் பாதைகள் என்று நிர்வாக கட்டமைப்புக்கள் ஏற்படுத்தப்படுகின்றன.
எனினும் பொதுமக்களுடன் இணைந்து செயற்படக்கூடிய பொலிஸாருக்கு பதிலாக இன்னமும் படையினர் சோதனை சாவடிகளையும் நடமாட்டங்களையும் காணமுடிகிறது.
இந்தநிலையில் கணவர்மாரை இழந்த பெண்கள், அவர்களின் பிள்ளைகள், விடுதலைப் புலிகளால் பலாத்காரமாக இயக்கத்தில் இணைக்கப்பட்டவர்களின் உறவினர்கள், படையினரால் பாதிக்கப்பட்டவர்கள் என்று பலரும் வேறு வழிகளில் இன்றி கசப்பான வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர்.
இந்த பிரச்சினையானது, இலங்கையின் சமூகங்களுக்கு இடையில் பாரிய இடைவெளியை ஏற்படுத்தி வருகிறது. எனவே பிரிந்து போயுள்ள இந்த சமூகங்களை ஒன்றிணைக்க பொதுவான மொழி ஒன்றை தெரிவுசெய்ய வேண்டியுள்ளது.
போருக்கு பின்னர் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முகமாக பொதுவான மொழியின் மூலம் பிரிந்து போயுள்ள சமூகங்களுக்கு இடையில் பாலத்தை ஏற்படுத்த முடியும் என்று ஜெரிட் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தநிலையில் சிங்களவர்கள் மற்றும் இலங்கை அமைச்சர்களால் மேற்கத்தைய முதலாளித்துவம் என்று அழைக்கப்படுகின்றவர்களாலோ அல்லது தமிழ் புலம்பெயர்ந்தோரோராலோ சுமத்தப்படுகின்ற மனித உரிமைகள் குற்றச்சாட்டுக்களுக்கு மத்தியில் சமூகங்களுக்கு இடையில் உறுதித்தன்மையை ஏற்படுத்த முடியாது.
இந்த சமூகப் பிரிவினையை தோற்கடிக்க, இலங்கை அரசாங்கமும் தமிழ் தலைவர்களும் தமது அரசியல் அடையாளங்களை கைவிடவேண்டும்.
வன்னியில் அமைக்கப்பட்டுள்ள நினைவுச்சின்னத்தின் பெயர் பலகையில் குறிப்பிடப்பட்டுள்ள வசனங்கள், இலங்கைப் படையினர் மேற்கொண்டதாக கூறப்படும் அனைத்து குற்றச் செயல்களையும் ஏற்றுக்கொண்டது போல அமைந்துள்ளது.
போரில் வெற்றி பெற்றமையை கொண்டு இலங்கையின் ராஜபக்ச அரசாங்கம், படையினர் குற்றம் இழைத்தார்கள் என்பதையும் தாண்டி சிங்கள மக்கள் மத்தியில் தமது வாக்குப்பலத்தை அதிகரிக்கச் செய்திருக்கிறது.
அதேநேரம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் மக்களால் தெரிவு செய்யப்பட்ட தமது உறுப்பினர்களை கொண்டு விடுதலைப் புலிகளின் வரலாற்றை மீளமைக்காமல் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும் என்று ஜெரிட் கேட்டுள்ளார்.
இதற்கு அண்மையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை, சிங்கள மற்றும் முஸ்லிம் மக்கள் விடுதலைப் புலிகளால் தாக்கப்பட்டமை தொடர்பில் பேசப்பட வேண்டும் என்று வலியுறுத்தியமையை ஜெரிட் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதேநேரம் இலங்கை அரசாங்கம் போர் வெற்றிக்காக நினைவுச்சின்னம் அமைப்பதை தவிர்த்து போரினால் கொல்லப்பட்ட அனைத்து மக்களுக்கும் காணாமல் போனவர்களுக்கும் என்று நினைவுச்சின்னத்தை அமைக்க வேண்டும்.
அண்மையில் கொழும்பில் இடம்பெற்ற கண்காட்சி ஒன்றில் சிங்களவர்களும், தமிழர்களும் தமது மதங்களின் பொதுவான கடவுள்களை பல்வேறு வேற்றுப் பெயர்களால் வணங்கி வருகின்றமை சுட்டிக்காட்டப்பட்டது. எனவே இதனைக்கொண்டு புதிய சமூக இணைப்புக்கள் ஏற்படுத்தப்பட வேண்டும்.
ஜெனீவாவுக்கு அப்பால் இலங்கைக்குள்ளேயே சமூகங்களுக்கு இடையில் வாதவிவாதங்கள் ஏற்படுத்தப்பட்டு அதற்குள் இணக்கங்கள் காணுவதற்கு வாய்ப்புக்கள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட வேண்டும்.
அதேநேரம் தென்னாபிரிக்காவின் உண்மையை கண்டறியும் குழுவின் அனுபவங்களை பகிர்ந்து கொள்வதன் மூலம் இலங்கைக்கு பயன்கள் ஏற்படும்.
இதேவேளை இந்தியா, இலங்கைக்கு எதிரான ஜெனீவா யோசனையின் போது வாக்களிக்காமல் விட்ட செயற்பாடு இலங்கையில் அதிகாரப்பகிர்வை அந்த நாடு வலியுறுத்துவதற்கான வசதிகயை ஏற்படுத்திக் கொடுத்திருப்பதாக ஜெரிட் கருத்துரைத்துள்ளார்.
எனவே பழைய தவறுகளை ஏற்றுக்கொள்ளல், மற்றும் நல்லிணக்கம் என்பன ஏற்படுத்தப்படுவதன் மூலமே இலங்கையின் காயங்களை குணப்படுத்த முடியும்.
அதனை விடுத்து போர்வெற்றி நினைவுச்சின்னங்களும் பொருளாதார அபிவிருத்தியும் மாத்திரம் நாட்டின் காயங்களை குணப்படுத்த உதவாது என்று பெர்லின் உலக பொது கொள்கை நிறுவகத்தின் ஜெரிட் கேட்ஸ் குறிப்பிட்டுள்ளார்
http://www.tamilwin.com/show-RUmsyESdLXjv3.html

Geen opmerkingen:

Een reactie posten