தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 22 april 2014

அவுஸ்திரேலியாவிலிருந்து நாடுகடத்தப்படவர்களுக்கு குற்றப் புலனாய்வு பிரிவினரால் அச்சுறுத்தல்!


பாதுக்க பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி உள்ளிட்ட அதிகாரிகளுக்கு எதிராக விசாரணை - இந்தியரைத் தாக்கிய இராணுவச் சிப்பாய் கைது
[ செவ்வாய்க்கிழமை, 22 ஏப்ரல் 2014, 01:39.04 AM GMT ]
பாதுக்க பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி உள்ளிட்ட அதிகாரிகளுக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
வெள்ளைக் கடலாமை ஒன்றை கொள்ளையிட்டு விற்பனை செய்ய முயற்சித்த பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காமல் சம்பவத்தை மூடி மறைத்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
வெள்ளைக் கடலாமையை கொள்வனவு செய்ய வந்த நபர்கள் பொலிஸ் உத்தியோகத்தர்களை தாக்கி> உத்தியோகபூர்வ கைத்துப்பாக்கியையும் அபகரித்துச் சென்றுள்ளனர்.
எனினும் இந்த சம்பவத்தை நிலையப் பொறுப்பதிகாரி மூடி மறைத்துள்ளார்.
எனவே இந்த சம்பவம் தொடர்பில் துணை பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரின் கீழ் விசாரணை நடத்தப்பட உள்ளது.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய புலனாய்வுப் பிரிவு கான்ஸ்டபிள்களின் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளது.
இந்தியரைத் தாக்கிய இராணுவச் சிப்பாய் கைது
இந்தியரைத் தாக்கிய இராணுவச் சிப்பாய் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த இந்தியர், கிங்தொட்ட பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவரை திருமணம் செய்து கொண்டுள்ளார்.
அதே ஊரைச் சேர்ந்த இராணுவச் சிப்பாயுடன் முரண்பாடு ஏற்பட்டதாகவும், இராணுவச் சிப்பாய் இந்தியரை கடுமையாக தாக்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
தாக்குதலில் காயமடைந்த இந்தியர் கராபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் காலி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
அவுஸ்திரேலியாவிலிருந்து நாடுகடத்தப்படவர்களுக்கு குற்றப் புலனாய்வு பிரிவினரால் அச்சுறுத்தல்
[ செவ்வாய்க்கிழமை, 22 ஏப்ரல் 2014, 01:55.33 AM GMT ]
அவுஸ்திரேலியாவிலிருந்து இலங்கைக்கு IOM மூலம் பதிவு செய்து, இலங்கைக்கு சென்ற புகலிடக் கோரிக்கையாளர்களிடம், இலங்கை குற்றப் புலனாய்வு பிரிவினர் பணம் கேட்டு அச்சுறுத்துவதாக தெரிவிக்கப்படுகிறது.
இவ்விடயம் தொடர்பில் மேலும் அறிய வருவதாவது,
மட்டக்களப்பை சேர்ந்த ஒருவர் அவுஸ்திரேலியாவுக்கு கடந்த வருடம் படகு மூலம் சென்றுள்ளார். தற்போது அவர் அங்கிருந்து IOM உதவியுடன் விமானம் மூலம் மீண்டும் நாடு திருப்பியுள்ளார்.
மட்டக்களப்பு பிரதேசத்தில் அமைந்துள்ள அவரது வீட்டுக்குச் சென்ற புலனாய்வுப் பிரிவினர், வீட்டில் இருந்து அவரை விசாரணை செய்ய வேண்டும் உடன் வரவும் என அழைத்து, அவரிடம் ஒரு தொகை பணம் கேட்டுள்ளனர்.
இது குறித்து பாதிக்கப்பட்டவர் தெரிவிக்கையில்,
தற்போது தனது வீட்டை விட்டு வெளியில் தங்கி இருக்க வேண்டிய நிலை ஏற்ப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் இருந்து வரும் போது விமான நிலையத்தில் IOM தன்னை பாரம் எடுப்பதற்கு முன்னர், விமான நிலையத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர்தான் தன்னை IOM பாரம் எடுத்ததாக
தெரிவித்தார்.
ஆனால் அவுஸ்த்ரேலிய அரசாங்கமானது IOM மூலம் இலங்கை செல்பவர்களுக்கு எந்தவிதமான அச்சுறுத்தல்களும் இல்லை என தெரிவித்த போதும், அங்கு சென்றவர்கள் பலவிதமான முறையில் அச்சுறுத்தி பாரிய அளவில் தாக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Geen opmerkingen:

Een reactie posten