தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 22 april 2014

தொடர்ந்தும், நீதி மறுக்கப்பட்டால், தமிழர்களுக்கான போர்க் களம் மீண்டும் திறக்கப்படும்!


தாக்குதலால் உயிரிழந்த நபர்: கொதித்தெழுந்த ஊர்மக்கள்
[ திங்கட்கிழமை, 21 ஏப்ரல் 2014, 03:14.13 PM GMT ]
மட்டக்களப்பு, ஆரையம்பதி பிரதேசத்தில் கடந்த 15 திகதி இரவு தாக்கப்பட்டு படுகாயமடைந்த நிலையில் கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நபர், உயிரிழந்ததை தொடர்ந்து, தாக்குதல் நடத்தியோரின் வீடுகள் மீது இரவு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
கடந்த 15ஆம் திகதி இரவு ஆரையம்பதி திருநீற்றுகேணி கிழக்கை சேர்ந்த கிருஷ்ணகுமார் பிரகாஷ் (வயது 26) என்ற இளம் குடும்பஸ்தர், கடைக்கு சென்று வீடு திரும்பும் வழியில் சிலர் பொல்லுகளால் தாக்குதல் நடத்தி உள்ளனர்.
இத்தாக்குதல் சம்பவத்தில் படுகாயமடைந்த அவரை, ஊர் மக்கள் ஆரையம்பதி வைத்தியசாலையில் அனுமதித்து, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு வைத்திய சாலையில் சேர்த்துள்ளனர்.
எனினும், இவர் பலத்த தாக்குதலுக்கு உள்ளனதால் மேலதிக சிகிச்சைக்காக கண்டி வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
கண்டி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இவர் சிகிச்சைக்குப் பலனின்றி நேற்று இரவு உயிரிழந்துள்ளார். தற்போது இவரின் சடலம் கண்டி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலைியல், உயிரிழந்தவர் மீது தாக்குதல் நடத்தியவர்கள் தலை மறைவனதால் ஆத்திரமுற்ற மக்கள் அவர்களின் வீடுகளை தாக்கி சேதப்படுத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.
முன்விரோதம் காரணமாகவே இத்தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இந்த சம்பவம் தொடர்பில் காத்தான்குடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தொடர்ந்தும், நீதி மறுக்கப்பட்டால், தமிழர்களுக்கான போர்க் களம் மீண்டும் திறக்கப்படும்!
[ திங்கட்கிழமை, 21 ஏப்ரல் 2014, 11:37.33 PM GMT ]
பாண்டவர்களுக்கு ஆட்சி உரிமை கிடையாது என்றார்கள் கௌரவர்கள். நூற்றுவர்களான தங்களுக்கு அடிபணிந்து வாழ்வதே அவர்களது விதி என்றுரைத்தார்கள். கௌரவர்களது ராஜ்ஜியம் பெரியது, அதன் சேனை பெரியது. எனவே, கௌரவர்களுடன் மோதி, பாண்டவர்களால் வெற்றி பெற முடியாது என்றார்கள்.
நாடு கேட்டு முழக்கமிட்ட பாண்டவர்கள், தமக்கான நிலத்தையாவது தரும்படி கேட்டார்கள். மறுத்தார்கள் கௌரவர்கள். சில கிராமங்களைக் கேட்டார்கள், அதுவும் கௌரவர்களால் நிராகரிக்கப்பட்டது. ஒரு வீடு கூடத் தரமுடியாது என்று இறுமாப்புடன் பதிலளித்தார்கள்.
வேறு வழியே இல்லாமல், பாண்டவர்கள் யுத்த களத்தில் கௌரவர்களை எதிர்கொண்டார்கள். வீரர்கள் மோதிக்கொண்டார்கள். வில்லாளாகள் மோதிக்கொண்டார்கள். யானைகள் மோதிக்கொண்டன. நிலம் எங்கும் இரத்தச் சகதியானது. பேராசை கொண்ட கௌரவர்கள் மாண்டு போன போது, அவர்களிடமிருந்த அனைத்தையுமே யுத்தம் அபகரித்துக்கொண்டு போய்விட்டது. நீதி மட்டுமே, அதன் பின்னரும் நிலைத்து நின்றது.
இது ஒரு இதிகாசத்தின் உள்ளடக்கம் மட்டுமல்ல, இதில், வாழ்க்கையின் தத்துவமும் அடங்கியே இருக்கின்றது. நீதி ஒருநாள் வெல்லும் என்ற சத்திய வாக்குறுதியும் உள்ளது. அது பொய்த்து விட்டால், சத்தியம் பொய்த்து விடும். தர்மம் தோற்று விடும். கடவுள் நம்பிக்கையும் தகர்ந்து விடும்.
இப்போது, பாண்டவர் நிலையில்தான் ஈழத் தமிழர்கள் மறுக்கப்பட்ட நீதிக்காகக் காத்திருக்கின்றார்கள். அந்தக் காத்திருப்பும் அதிக காலம் நீடிக்கப் போவதில்லை. வடக்கே, மதுராவில் ஆட்சி மாற்றம் நிகழ்ந்து விட்டால், பாண்டவர்களுக்குத் தேரோட்டியாகக் கண்ணன் மீண்டும் வருவான்.... மீண்டும் வருவான்.... அதுவே உலகத் தமிழர்களது தியானமாகவும் உள்ளது.
ஆனாலும், 'இன்னொரு ஈழப் போர் சாத்தியமா...?' என்ற அபயஸ்வரங்களும் கேட்கத்தான் செய்கின்றது. பாண்டவர் காலத்தில் எழுந்த அதே சந்தேகம் இப்போதும் சிலரிடம் எஞ்சி இருக்கவே செய்கின்றது. சிங்கள தேசத்தின் பிரமாண்டமான படையணிகளையும், அவர்களது கொடூர வக்கிரங்களையும் கண்டு, தமிழ்த் தேசத்தின் சில மனிதாகள் அச்சமுறத்தான் செய்கின்றார்கள்.
ஆனால், இறுதிப் போர்க் களத்தில், சிங்கள தேசத்துடன் கைகோர்த்து நின்ற 23 நாடுகளில் பல நாடுகள் இப்போது அவர்களுடன் இல்லை. சிங்களத்தின் இனவெறிக்கு நச்சு நீர் பாய்ச்சி, செந்தமிழீழத்தைச் சுடுகாடாக்கிய காங்கிரஸ் கட்சியும் இப்போது தன் இறுதி நாட்களை எண்ணி வருகின்றது.
இந்தியாவின் ஆட்சி மாற்றத்தில், தமிழகத்தின் பங்கும் பெரிதாக இருக்கப் போகின்றது. மத்திய ஆட்சியில் வைகோ மட்டுமல்ல, தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்களது பங்கேற்பும் தமிழீழ மக்களது நீதிக்கான போராட்டத்தின் கதவை அகலத் திறக்கவே போகின்றது.
தமிழீழம் இன்னொரு பிறப்பு எடுக்கப் போகின்றது. இந்திய தேசம், தன்மீதான அத்தனை கறைகளையும் வங்கக் கடலில் கழுவும் காலத்தில், ஈழத் தமிழர்களுக்கான நீதி தேடலும் சாத்திமாகிவிடும்.
தொடர்ந்தும், தமிழீழ மக்களுக்கு நீதி மறுக்கப்பட்டால், தமிழர்களுக்கான போர்க் களம் மீண்டும் திறக்கப்படும். அன்னை இந்திரா காந்தி அவர்களது முடிவுக்கே இந்தியா வரவேண்டிய நிலை உருவாகும்.
ஈழத் தமிழர்களது போராட்டத்திற்கு எந்த நாடுமே களம் இறங்கிப் போராடத் தேவையில்லை. ஒரு கரையோரத் தளம் ஒன்றிற்கான அனுமதி வழங்கினாலேயே போதும். சிங்களக் கடற்படையை, தமிழீழக் கடற்படை சிதறடிப்பதற்கு. தமிழீழ வான் படைக்கு, ஒரு சிறிய ஓடு தளத்திற்கான அனுமதி கிடைத்தால் போதும், சிங்கள இனவாதம் மீண்டும் பதுங்கு குழிக்களுக்குள் இருந்தே நடுங்குவதற்கு.
தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டார்கள் என்று யார் சொன்னது...? அவர்கள் பதுங்கியிருக்கிறார்கள், பாய்வதற்காக... அவர்கள் மீண்டும் தங்களது கடலை வெல்வார்கள்... ஆகாயத்தையும் வெல்வார்கள்... அதன் பின்னர், எங்கள் தரையில் எந்தவொரு சிங்களச் சிப்பாயும் நிலை கொண்டிருக்க முடியாது.
அதற்கான காலத்தை நோக்கியே சிங்கள அரசு தனது தேசத்தை வழிநடாத்துகின்றது. தொடரும் சிங்களக் கொடூரங்களும், நீதி மறுத்தல்களும் எங்கள் தேசத்தை மீட்கும் சக்தியையும், அதற்கான களத்தையும் எமக்கு மீண்டும் வழங்கும். அதுவே காலத்தின் கட்டாயம்!;
அது பொய்த்துவிட்டால், சத்தியம் பொய்த்துவிடும். தர்மம் தோற்றுவிடும். கடவுள் நம்பிக்கையும் தகர்ந்துவிடும்.
- கரிகாலன்

Geen opmerkingen:

Een reactie posten