தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 22 april 2014

புலிகளின் மீளெழுச்சி பிரசுர அச்சடிப்பு! கணணி ஆசிரியர் யாழில் கைது! கிளிநொச்சியில் நால்வர் கைது


முதலமைச்சர் விக்னேஸ்வரனை தேர்தலுக்கு முன்னர் இந்தியா வருமாறு அழைப்பு!
[ செவ்வாய்க்கிழமை, 22 ஏப்ரல் 2014, 01:38.29 AM GMT ]
வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனை இந்தியாவுக்கு அவசரமாக அழைத்துப் பேசும் முயற்சியில், இந்திய வெளிவிவகார அமைச்சும், காங்கிரஸ் கட்சியும் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் வாக்காளிக்காது போனாலும், இலங்கையிலுள்ள தமிழர்கள் பற்றிய கரிசனை மற்றும், இலங்கை தொடர்பான கொள்கைகளை சமப்படுத்த உதவும் என்பதற்காக வடக்கு மாகாண முதல்வரை கூடிய விரைவில் இந்தியாவுக்கு அழைப்பதற்கு இந்திய வெளிவிவகார அமைச்சு முயற்சித்து வருகிறது.
தமிழ்நாட்டில், காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு குறைந்துள்ளைதை உணர்ந்து, நாளை மறுநாள் நாடாளுமன்றத் தேர்தல் நடக்கவுள்ள நிலையில், தேர்தலுக்கு முதல் நாள் புதுடெல்லி வருமாறு மாநில காங்கிரஸ் பிரிவு, விக்னேஸ்வரனுக்கு மீண்டும் அழைப்பை விடுத்துள்ளது.
எனினும், வடக்கு மாகாண முதல்வர் தமது பயணத்தை இன்னமும் முடிவு செய்யவில்லை.  அத்துடன் அவர் இந்தியாவில் சில தலைவர்களைச் சந்திப்பதில் ஆர்வம் கொண்டுள்ளார்.
குறிப்பாக தமிழநாடு முதல்வர் ஜெயல்லிதாவை சந்திக்க அவர் விரும்புகிறார்.  எனினும், அவரைச் சந்திப்பதற்கான நேரம் இன்னமும் ஒதுக்கப்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
விக்னேஸ்வரன் இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டால், இலங்கை தொடர்பான எமது கொள்கைகளை சமப்படுத்த உதவும் என்றும், ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் வாக்காளிக்காது போனாலும், இலங்கைத் தமிழர்களைக் காக்க நாம் பாடுபடுகிறோம் என்று கூறுவதற்கு உதவும் என்றும் மூத்த இந்திய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் தேர்தலுக்கு முன்னர் வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன் பயணம் மேற்கொள்வது, இலங்கைத் தமிழர்களின் நலனின் அக்கறை கொண்டுள்ளது என்பதை காட்டுவதற்கு உதவும் என்று காங்கிரஸ் நம்புகிறது என்றும் இந்திய ஊடகம் தெரிவித்துள்ளது.
புலிகளின் மீளெழுச்சி பிரசுர அச்சடிப்பு! கணணி ஆசிரியர் யாழில் கைது! கிளிநொச்சியில் நால்வர் கைது
[ செவ்வாய்க்கிழமை, 22 ஏப்ரல் 2014, 01:48.04 AM GMT ]
விடுதலைப் புலிகளின் மீளெழுச்சி தொடர்பில் பிரசுரங்களை அச்சிட்டதாக குற்றம் சுமத்தி கணணி ஆசிரியர் ஒருவர் யாழ்ப்பாணத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் கடந்த 19ம் திகதி இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த ஆசிரியரிடம் இருந்து மடிக்கணணி ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மானிப்பாய் பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்ட இவர் விடுதலைப்புலிகளின் முன்னாள் உறுப்பினர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தநிலையில் அவர் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது
இதேவேளை கிளிநொச்சியில் போலி றப்பர் முத்திரைகளை வைத்திருந்தனர் என்ற குற்றச்சாட்டின் பேரில் நான்கு இளைஞர்கள் நேற்று மாலை கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

Geen opmerkingen:

Een reactie posten