[ வியாழக்கிழமை, 10 ஏப்ரல் 2014, 05:02.19 AM GMT ]
இந்திய பொதுத்தேர்தலில் போட்டியிடும் அரவிந்த் கெஜ்ரிவாலின் தலைமையிலான ஆம் அத்மிகட்சியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனை தவிர்ப்பதற்காக இலங்கை - இந்திய கடற்படையின் கூட்டு ரோந்தை பரிந்துரைக்க வேண்டும் என்று இந்த தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழகத்துக்கான தேர்தல் விஞ்ஞானம் நேற்று வெளியிடப்பட்ட சிறிது நேரத்தில், இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது இது தொடர்பில் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இலங்கைப்படையினர் தமிழக மீனவர்கள் என்று தெரிந்துக்கொண்டே துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்கின்றனர்.
இந்தநிலையில் எவ்வாறு ஆம் ஆத்மி கட்சி இதனை தவறுதலான அடையாள துப்பாக்கி பிரயோகம் என்று கூறமுடியும் என்று செய்தியாளர்கள் கேட்டனர்.
இதற்கு பதிலளித்த ஆம் ஆத்மி கட்சியின் கொள்கைக்குழு உறுப்பினர் ஜெயராம், இது எதிர்காலத்தை மையமாகக்கொண்டு உருவாக்கப்பட்டது என்று குறிப்பிட்டார்.
தேர்தல் விஞ்ஞாபனத்தின் தமிழ் மொழியாக்கம் மேலோட்டமாக செய்யப்பட்டுள்ளமையால், அந்த பந்தியை விஞ்ஞாபனத்தில் இருந்து விலக்கிக்கொள்வதாக ஜெயராம் உறுதியளித்தார் என்று இந்திய செய்தி ஒன்று கூறுகிறது.
http://www.tamilwin.com/show-RUmsyESULXnvz.html
தென்னாபிரிக்க சமாதான முயற்சிகள் சாத்தியமற்றவை: சுரேஷ் பிறேமச்சந்திரன்
[ வியாழக்கிழமை, 10 ஏப்ரல் 2014, 05:50.28 AM GMT ]
எனவே படையினரின் கெடுபிடிகள், மீள்குடியேற்றத் தடைகள், கைதுகள் என மக்களை அச்சத்திற்குள்ளாக்கும் செயற்பாடுகள் தொடர்பாக விளக்கமளிப்பதற்கான பயணமாகவே தமிழ்தேசிய கூட்டமைப்பின் தென்னாபிரிக்காவிற்கான பயணம் அமைய உள்ளதாக கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான சுரேஷ் பிறேமச்சந்திரன் கூறியிருக்கின்றார்.
தென்னாபிரிக்கா நாட்டுக்கான பயணத்தினை தமிழ்தேசிய கூட்டமைப்பு மேற்கொள்ளவுள்ள நிலையில் இந்த விடயம் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
விடயம் தெடர்பாக மேலும் அவர் குறிப்பிடுகையில்,
கடந்த 2 வருடங்களுக்கு முன்னதாக மேற்படி தென்னாபிரிக்க சமாதான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு பின்னர் அவை கிடப்பில் போடப்பட்டன. இந்நிலையில் அண்மையில் இலங்கையில் நடைபெற்ற கொமன் வெல்த் மாநாட்டில் தென்னாபிரிக்க ஜனாதிபதியிடம் இலங்கை ஜனாதிபதி, மேற்படி சமாதான முயற்சிகளை மீள முன்னெடுக்குமாறு கேட்டிருந்தார்.
இதற்கமைய தென்னாபிரிக்க ஜனாதிபதி தமிழ்தேசிய கூட்டமைப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தி பின்னர் தென்னாபிரிக்கா சென்று சமாதான முயற்சிகளுக்கென குழு ஒன்றினை உருவாக்கியிருக்கின்றார்கள். இந்நிலையில் அண்மையில் நிமால் சிறிபால டிசில்வா தலமையிலான குழு, தென்னாபிரிக்கா
சென்று பேச்சுவார்த்தை நடத்தியிருந்தது. அதனையடுத்து எமக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கின்றது. எனவே தமிழ்தேசிய கூட்டமைப்பின் குழு தென்னாபிரிக்கா பயணமாக உள்ளது. இதன்போது படையினரின் கெடுபிடிகள், மீள்குடியேற்ற தடைகள், கைதுகள், போர்காலத்தில் இடம்பெற்று இன்றுவரை தொடர்கின்ற பிரச்சினைகள், உள்ளிட்ட வடகிழக்கு தமிழர் தாயகத்தில் போரின் பின்னர் உள்ள மோசமான அமைதியற்ற நிலைமை தொடர்பாக தென்னாபிரிக்க அரசாங்கத்திற்கு நாம் தெளிவுபடுத்தவுள்ளோம். மேலும் தமிழர் தாயகத்தில் மக்கள் சுதந்திரமாக வாழ முடியாத நிலை தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில்
சமாதான முயற்சிகள் சாத்தியமற்றவை என்பதையும் தெளிவுபடுத்த உள்ளோம்.
சென்று பேச்சுவார்த்தை நடத்தியிருந்தது. அதனையடுத்து எமக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கின்றது. எனவே தமிழ்தேசிய கூட்டமைப்பின் குழு தென்னாபிரிக்கா பயணமாக உள்ளது. இதன்போது படையினரின் கெடுபிடிகள், மீள்குடியேற்ற தடைகள், கைதுகள், போர்காலத்தில் இடம்பெற்று இன்றுவரை தொடர்கின்ற பிரச்சினைகள், உள்ளிட்ட வடகிழக்கு தமிழர் தாயகத்தில் போரின் பின்னர் உள்ள மோசமான அமைதியற்ற நிலைமை தொடர்பாக தென்னாபிரிக்க அரசாங்கத்திற்கு நாம் தெளிவுபடுத்தவுள்ளோம். மேலும் தமிழர் தாயகத்தில் மக்கள் சுதந்திரமாக வாழ முடியாத நிலை தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில்
சமாதான முயற்சிகள் சாத்தியமற்றவை என்பதையும் தெளிவுபடுத்த உள்ளோம்.
மேலும் தென்னாபிரிக்க தேசிய காங்கிரஸ் போராட்டப் பாதையிலிருந்து வந்தவர்கள் என்ற அடிப்படையில் எமக்குள்ள பிரச்சினைகளை அவர்களால் புரிந்து கொள்ள முடியும் என நாங்கள் நம்புகின்றோம். அந்தவகையில் முதலில் தமிழர் தாயகத்தில் அமைதியான சூழலை உண்டாக்க தென்னாபிரிக்கா உதவவேண்டும்.
அதற்காக கோரிக்கையினை தென்னாபிரிக்க பயணத்தில் வலியுறுத்த இருக்கின்றோம் என்றார்.
யாழ்.குடாநாட்டு நிலமைகள் தொடர்பாக, யாழ்.கோப்பாய் வடக்கு பகுதியில் நேற்று முன்தினம் படையினரால் திடீர் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது. அதிகாலை 4 மணிக்கு தோட்டத்திற்குச் சென்ற விவசாயிகளிடம் அடையாள அட்டை காண்பிக்குமாறு கேட்கப்பட்டுள்ளது. அடையாள அட்டை கொண்டு வந்திருக்காத விவசாயிகள் அச்சுறுத்தப்பட்டிருக்கின்றார்கள்.
இவ்வாறான தொடர்ச்சியான சுற்றிவளைப்புக்களும், சுற்றிவளைப்பு கைதுகளும் தொடர்ச்சியாக இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது. இவை வெறுமனே கோபி மற்றும் இரு நபர்களுடைய புகைப்படங்களை அடிப்படையாக கொண்டே மேற்கொள்ளப்படுகின்றது. ஆனால் உன்மையில் அவர்கள் இருக்கின்றார்களாக என்பது கூட தெரியாது.
மறுபக்கம் வீடு வீடாகச் சென்று படையினர் குடும்ப விபரங்களை திரட்டும் நடவடிக்கையினையும் முன்னெடுத்துள்ளார்கள். இதற்கு அவர்கள் கூறும் காரணம் குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்கள் மறைந்திருக்கலாம் என்பதே. நாம் கேட்கின்றோம். குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்கள் வடக்கில் மட்டுமா மறைந்திருப்பார்கள்.
எனவே இவ்வாறான போலியான காரணங்களை நாங்கள் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. இவ்விடயத்தில் முப்படைகளின் தளபதியான ஜனாதிபதி தலையிட்டு இவ்வாறான செயற்பாடுகளை உடனடியாக நிறுத்த வேண்டும். இது இவ்வாறு நடைபெற்றுக் கொண்டிருக்கையில் மறுபக்கம் தமிழ் யுவதிகளை படையில் இணைத்துக் கொள்ளும் நடவடிக்கையும் நடக்கின்றது.
போர் நடைபெற்ற காலப்பகுதியில் கூட வீடு வீடாகச் சென்று படையில் இணைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படாத நிலையில் தற்போது மேற்கொள்ளப்படுகின்றது. அதற்கு மறுத்தால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுகின்றது. முல்லைத்தீவில் போரினால் பாதிக்கப்பட்ட ஒரு குடும்பத்தில் இரு பெண் பிள்ளைகளை படையில் இணையுமாறு, கேட்கப்பட்டிருக்கின்றது. அதற்கு சகோதரன் மறுப்பு தெரிவித்த நிலையில் சகோதரனை படையி னர் கைது செய்து கொண்டு சென்றிருக்கின்றன. இதுவே இங்குள்ள நிலை. இவ்வாறான நிலை தொடர்ந்தால் தமிழ் மக்களுடைய முழமையான பாதுகாப்பை மையப்படுத்தியதான ஒரு பொறிமுறையின் தேவையினை சர்வதேசத்திடம் தொடர்ந்தும் கேட்போம்.
ஜெனீவா தீர்மானத்தை நாங்கள் முழுமையாக நிராகரித்து விட்டோம். இனிமேல் நடப்பதற்கு நாம் பொறுப்பாளிகள் அல்ல. என அரசாங்கப் பேச்சாளர் குறிப்பிட்டிருக்கின்றார். ஆனால் இலங்கை அரசாங்கம் ஜ.நா சபையில் உறுப்புரிமை பெற்றிருக்கின்றது. அதன் பிரகடனங்களை ஏற்றுக்கொண்டிருக்கின்றது.
16 அமைப்புக்களை தடைசெய்யும் போதும் கூட ஜ.நாவின் பிரகடனத்தையே முதன்மைப்படுத்தியிருக்கின்றார்கள். எனவே ஜெனீவாவில் நிறைவேற்றப்பட்டிருக்கும் சர்வதேச விசாரணை என்ற தீர்மானம் உள்நாட்டில் நடத்துவதற்கு அரசாங்கம் ஒத்துழைக்க வேண்டும். அல்லாது போனால் அது வெளி நாட்டில் நடத்தப்படும்.
அதற்கான சாட்சிகள் வெளிநாட்டில் உள்ளன. பாதிக்கப்பட்ட மக்கள், போரில் பங்குபற்றிய படையினர் மற்றும் பாதிக்கப்பட்ட பெண்கள் வெளிநாடுகளில் உள்ளனர். பாதிக்கப்பட்ட 40 பெண்கள் தமக்கு இழைக்கப்பட்ட அநீதி தொடர்பான சாட்சியத்தை முன்னதாக வழங்கியிருக்கின்றார்கள். மேலும் திருகோணமலை மாணவர் படுகொலை, மூதூர் படுகொலை என பலவற்றிற்க்கு சாட்சிகள் இருக்கின்றன. எனவே வெளிநாட்டில் நடத்தப்பட்டால் எதிர்காலத்தில் அதனால் இலங்கை அரசாங்கம் பல நெருக்கடிகளை எதிர்கொள்ளும் நிலை உருவாகும் என்றார்.
http://www.tamilwin.com/show-RUmsyESULXnv0.html
சர்வதேசத்தின் கோரிக்கைகளை இலங்கை செவிமடுக்க வேண்டும்: பிரித்தானியா
[ வியாழக்கிழமை, 10 ஏப்ரல் 2014, 03:47.45 AM GMT ]
சர்வதேச சமூகம் ஐக்கிய நாடுகள் சபையின் ஊடாக இலங்கைக்கு செய்தியை அனுப்பியிருக்கிறது.
இந்தநிலையில் அந்த சர்வதேச சமூகம் எதனை எதிர்ப்பார்க்கிறது, எதனை கேட்கிறது என்று இலங்கை ஆராய வேண்டும் என்று அமைச்சர் பிரித்தானிய நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் உரையாற்றும்போது குறிப்பிட்டார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் நடத்தப் போகும் மனித உரிமைகள் தொடர்பான விசாரணைகள் மூலம் இலங்கைக்கு நன்மைகளே கிடைக்கவுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
மனித உரிமைகள் பேரவையின் சர்வதேச விசாரணைகளை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்று இலங்கை அறிவித்துள்ள நிலையிலேயே பிரித்தானிய அமைச்சர் தமது கருத்துக்களை முன்வைத்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyESULXnu7.html
Geen opmerkingen:
Een reactie posten