தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 10 april 2014

வடக்கில் தொடரும் சுற்றி வளைப்புக்கள் - 65 பேர் கைது - தேற்றாத்தீவில் மீட்கப்பட்ட சிசு, குழந்தை காப்பகத்தில் ஒப்படைப்பு

புலிகள் இல்லை என்கிறார் பொலிஸ்மா அதிபர் - இருக்கின்றனர் என்கிறார் கோத்தபாய!
[ வியாழக்கிழமை, 10 ஏப்ரல் 2014, 07:29.32 AM GMT ]
ஜெனிவா சர்வதேச விசாரணை மற்றும் நாட்டுக்குள் அரசாங்கம் மீது மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள விரக்தி போன்றவற்றால், ராஜபக்ஷ அரசாங்கம் குழப்பமான நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. 
அரசாங்கம் விழுந்துள்ள அதளபாதாளத்தில் இருந்து மீள ஒரே வழி மீண்டும் விடுதலைப் புலிகளை உருவாக்குவதே என அரசாங்கம் எண்ணி வருகிறது.

இந்த நிலையில், தற்போது ஏற்பட்டுள்ள நிலைமையில் இருந்து கடந்து செல்ல எதிராளிகளை கொலை செய்யவும் மக்களை ஒடுக்கி அடக்கவும் விடுதலைப் புலிகள் அமைப்பு இருக்கின்றது என்று காட்டும் அத்தியவசியம் அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ளதாக சிங்கள இணையத்தளம் ஒன்று குறிப்பிட்டுள்ளது.

அண்மையில் நடைபெற்ற புலனாய்வுப் பிரிவின் மீளாய்வுக் கூட்டத்தில் விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் நாட்டில் இல்லை என பொலிஸார் கூறியிருந்தனர்.

ஆனால் விடுதலைப் புலிகளின் நாட்டில் மீண்டும் செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளனர் என பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ அதே கூட்டத்தில் கூறியுள்ளதாக அந்த இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கடந்த வாரம் பாதுகாப்பு அமைச்சில் நடைபெற்ற புலனாய்வுப் பிரிவுகளின் மீளாய்வுக் கூட்டத்தில் முப்படை தளபதிகள், பொலிஸ் மா அதிபர், அதிரடிப்படை அதிகாரிகள் என உயர் பாதுகாப்பு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

அத்துடன் ஜனாதிபதி, பிரதமர், சபாநாயகர், பாதுகாப்புச் செயலாளர் ஆகியோரின் பாதுகாப்பு பிரிவுகளை ஒன்றிணைத்து ஏற்படுத்தப்பட்டுள்ள புதிய புலனாய்வுப் பிரிவினான உயர் புலனாய்வுப் பிரிவு அழைக்கப்படும் பிரிவின் அதிகாரிகளும் இதில் கலந்து கொண்டனர்.

கூட்டம் ஆரம்பிக்கும் முன்னர் அதாவது, கோத்தபாய ராஜபக்ஷ கூட்டத்திற்கு வருதற்கு முன்னர், மேற்படி உயர் பாதுகாப்பு பிரிவினர் சிகப்பு நிற முத்திரை பதிக்கப்பட்ட ஆவணம் ஒன்றை கூட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு விநியோகித்தனர்.

அதில் சில முக்கிய விடயங்கள் குறிப்பிடப்பட்டிருந்தன.

1: பதுளை, ஹட்டன், நோர்வூட் தோட்டங்களில் விடுதலைப் புலிகள் புதிதாக உறுப்பினர்களை சேர்த்து மிகவும் ரகசியமான முறையில் ஒன்றிணைந்து வருகின்றனர்.

2: விடுதலை செய்யப்பட்ட மூன்று விடுதலைப் புலி உறுப்பினர்கள் பதுளை ஸ்பிரிங்வெளி தோட்டத்தில் இளைஞர்களை இயக்கத்தில் சேர்க்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.

3: பதுளை மாவட்டத்தில் எதிர்காலத்தில் மிகவும் ஆபத்தான, அபாயமான நிலைமை ஏற்படும் எனவும் அந்த ஆவணத்தில் குறிப்பிட்டப்பட்டுள்ளது.

ஆங்கிலத்தில் அச்சிடப்பட்டிருந்த மிகவும் ரகசியமான தகவல்கள் என்ற இந்த ஆவணம் இராணுவப் புலனாய்வுப் பிரிவின் விசேட குழுவினால் தயாரிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

ஆவணம் விநியோகிக்கப்பட்ட பின்னர், கூட்டத்தில் வந்த பாதுகாப்புச் செயலாளர், ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் குறித்து பேசியதுடன் புலனாய்வுப் பிரிவுகளின் சகல பணிப்பாளர்களும் இந்த விடயங்கள் தொடர்பில் கூடிய கவனம் செலுத்த வேண்டும் எனக் கூறியுள்ளார்.

அதேவேளை கூட்டத்தில் பேசிய பொலிஸ் மா அதிபர் என். கே. இலங்ககோன், பதுளையில் பொலிஸார் இரவு பகலாக பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுவதாகவும் பாதுகாப்பு ரோந்து பணிகளிலும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அனைத்து பொலிஸ் நிலையங்களிலும் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் ஆனால் பதுளையில் இப்படியான ஆபத்தான நிலைமை இருப்பது பற்றிய தகவல்கள் தமக்கு கிடைக்கவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

பொலிஸ்மா அதிபர் இவ்வாறு கூறியதை அடுத்து, கடும் கோபமுற்ற பாதுகாப்புச் செயலாளர், தனக்கு அது பற்றிய காரணங்களை அறிந்து கொள்ளும் தேவையில்லை எனவும் தான் வழங்கிய அறிக்கை பின்பற்றுமாறும் கூறியுள்ளார்.

பொலிஸார் அலுவலகத்தில் இருந்து தகவல்களை திரட்டுவது போல் இராணுவத்தினர் தகவல்களை திரட்டுவதில்லை. அவர்கள் களத்தில் இறங்கி தகவல்களை திரட்டுவதாகவும் பாதுகாப்புச் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் பேசிய கோத்தபாய, அமெரிக்கா, பிரித்தானியா, கனடா, பிரான்ஸ் போன்ற நாடுகளில் உள்ள விடுதலைப் புலிகள் விரைவில் இலங்கைக்கு வரவுள்ளனர்.

அவர்கள் எமது துன்ப துயரங்களை அறிய வரப் போவதில்லை. விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களுக்கு ஒக்சிஜன் கொடுக்கவே அவர்கள் வருகின்றனர்.

இதனால் இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் வழங்கும் தகவல்களை பின்பற்றி செயற்படுங்கள்.

இன்னும் இரண்டு வாரங்களில் பதுளை நிலைமைகளை சாட்சியங்களுடன் அறிந்து கொள்ள முடியும் எனவும் கோத்தபாய கூறியுள்ளார்.

எவ்வாறாயினும் புலனாய்வுப் பிரிவுகளின் மீளாய்வுக் கூட்டத்தில் விநியோகிக்கப்பட்ட ரகசியமான புலனாய்வுத் தகவல்கள் எவ்வாறு திரட்டப்பட்டன என்ற விபரங்கள் கூட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு தெரியப்படுத்தப்படவில்லை எனவும் அந்த சிங்கள இணையத்தளம் கூறியுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyESULXnv5.html

சர்வதேச ஆபத்தை அரசாங்கம் கேட்டு வாங்கிக்கொண்டது: கயந்த கருணாதிலக்க
[ வியாழக்கிழமை, 10 ஏப்ரல் 2014, 06:33.46 AM GMT ]
அரசாங்கமே சர்வதேச ரீதியான ஆபத்தை நாட்டுக்கு வரவழைத்து கொண்டது என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து உள்நாட்டு விசாரணைகளை நடத்தியிருக்கலாம். அதற்கான சந்தர்ப்பம் இருந்தது.
அரசாங்கம், தான் நியமித்த கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்தவில்லை.
அரசாங்கத்தின் தவறு காரணமாகவே ஆபத்தை வரவழைத்து கொண்டது.
உண்மையில் அரசாங்கம் கேட்டு வாங்கி கொண்டது. அரசாங்கத்தின் தவறை சர்வதேசம் தனக்கு சாதமாக பயன்படுத்திக் கொண்டது.
போர் குறித்து மட்டுமல்ல, ரத்துபஸ்வல மக்கள் தண்ணீர் கோரி நடத்தி ஆர்ப்பாட்டம் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பான அறிக்கையையும் வெளியிடுமாறு ஜெனிவா யோசனையில் கோரப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் நாட்டுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எதனையும் அரசாங்கம் விரும்பாது.
சர்வதேசத்திடம் அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறியதன் காரணமாகவே நாட்டுக்கு தலைகுனிவு ஏற்பட்டுள்ளது.
நாட்டையும், நாட்டு மக்களின் வயிற்றையும் பாதுகாக்க வேண்டுமாயின் ஐக்கிய தேசியக் கட்சியின் அரசாங்கம் ஆட்சிக்கு வரவேண்டும்.
சர்வதேசத்தை ராஜதந்திர ரீதியில் முகாமைத்துவம் செய்ய அரசாங்கம் தவறியதால், நாடு பாதிப்புகளை எதிர்நோக்கியுள்ளது எனவும் கயந்த கருணாதிலக்க குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyESULXnv3.html

வடக்கில் தொடரும் சுற்றி வளைப்புக்கள் - 65 பேர் கைது - தேற்றாத்தீவில் மீட்கப்பட்ட சிசு, குழந்தை காப்பகத்தில் ஒப்படைப்பு
[ வியாழக்கிழமை, 10 ஏப்ரல் 2014, 06:00.49 AM GMT ]
வட,கிழக்கு மாகாணங்களில் தமிழீழ விடுதலைப் புலிகள் மீள் உருவாக்கம் பெறுவதற்கான முனைப்புக்கள் உள்ளதாக இலங்கையின் பொலிஸ் பேச்சாளர் குற்றம் சாட்டியுள்ளார்.
இதன்படி இரு மாகாணங்களிலும் இதுவரை 65 இளைஞர்கள் பயங்கரவாத குற்றத்தடுப்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.
கடந்த மாதத்தின் முற்பகுதியில் கிளிநொச்சி- தர்மபுரம் கிராமத்தில் விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் பயங்கரவாத குற்றத்தடுப்பு பொலிஸார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக குற்றம்சாட்டப்பட்டதன் பின்னர், வடகிழக்கு மாகாணங்களில் குறிப்பாக கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் கடுமையான தேடுதல் நடைவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, பலர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் இன்றைய தினம் பொலிஸ் பேச்சாளர் மேற்படி தகவலை
வழங்கியிருக்கின்றார்.
அவர் வழங்கியிருக்கும் தகவலின் பிரகாரம் வடகிழக்கு மாகாணங்களில் தமிழீழ விடுதலைப் புலிகள் மீள் ஒருங்கிணைவதற்கான ஏது நிலைகள் உருவாகியிருப்பதாகவும் அதற்கமைய 65 போர் கைது செய்யப்பட்டு, 5 போர் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் வடகிழக்கு மாகாணங்களில் தொடர்ச்சியாக படையினர் சுற்றிவளைப்பக்களும், சோதனை நடவடிக்கைகளும் இடம்பெற்று வருகின்றன.
கடந்த இரு தினங்களுக்கு முன்பாக யாழ்.கோப்பாய் பகுதியில் அதிகாலை 4 மணிக்கு திடீர் சுற்றிவளைப்பு சோதனை நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
தேற்றாத்தீவில் மீட்கப்பட்ட சிசு, குழந்தை காப்பகத்தில் ஒப்படைப்பு
மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேற்றாத்தீவு பகுதியில் துணியினால் சுற்றப்பட்ட நிலையில், செவ்வாய்க்கிழமை மாலை மீட்க்கப்பட்ட சிசுவை, குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்.
செவ்வாய்க்கிழமை மாலை தேற்றாத்தீவு தேவாலயத்துக்கு அருகில் வீதியின் ஓரத்தில் துணிகளினால் சுற்றப்பட்ட குழந்தையொன்றின் அழுகுரலைக்கேட்டு தேவாலயத்தில் நின்ற பெண்னொருவர், சிசுவை மீட்டு தனது வீட்டுக்கு கொண்டுசென்றுள்ளார்.
இது தொடர்பில் களுவாஞ்சிகுடி பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் குறித்த பெண்ணின் வீட்டுக்கு சென்ற பொலிஸார் குழந்தையினை மீட்டுள்ளனர்.
மீட்க்கப்பட்ட சிசு பிறந்து ஆறு நாட்களானது எனவும் பெண் சிசு எனவும் மிகவும் நல்ல உடல் நிலையில் இருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து நேற்று புதன்கிழமை மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் சிசு ஒப்படைக்கப்பட்டதுடன் சிசுவினை குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பில் குறித்த குழந்தையின் பெற்றோரை தேடிவருவதாகவும் மேலதிக விசாரணைகள் நடைபெற்றுவருவதாகவும் களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்.
http://www.tamilwin.com/show-RUmsyESULXnv1.html
Search operations at North - 65 arrested
[ Thursday, 10 April 2014, 08:59.57 AM GMT +05:30 ]
SriLanka police media spokesman today announced steps are been taken to reunion the LTTE movement in the Northern and Eastern parts of SriLanka.
TID officials have arrested 65 youths in these two provinces.
In early march LTTE members carried out shooting against TID officials near the Killinochchie – Dharmapuram area. Since that day military personals carry out various search operations in the Killinochchie, Mullaitivu districts, police media spokesman said.
According to the police sources steps are been taken to reunion LTTE movement in the North and Eastern parts of the island. 65 individuals were arrested over suspicious and 5 of them were released later on.
Military personals hold continuous search operations on the North and Eastern provinces.
On Monday security personals carried out sudden search operation in the Koppai area at 4.00 am.
http://eng.lankasri.com/view.php?22UOllaacf5YY44e24MC2022mmB3dddBBmA300C6AAee4oY55cca3lOO23

Geen opmerkingen:

Een reactie posten