யாழில் உள்ளவர்கள் தாங்கள் சுத்தமான தமிழர்கள் என கூறமுடியாது
[ புதன்கிழமை, 16 ஏப்ரல் 2014, 11:21.24 PM GMT ]
யாழ்பாணத்தின் 52 ஆவது படையணி கடந்த காலத்தில் வறணி பிரதேசத்தில் நிலைக் கொண்டிருந்தது.
யுத்தத்தின் பின்னர் பொது மக்களை மீள் குடியமர்த்துவதற்காக இந்த காணியை மீண்டும் வழங்கியதாக யாழ். பாதுகாப்பு படையணியின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க தெரிவித்தார்.
குறித்த காணியில் இதுவரையில் 39 வீடுகள் அமைக்கப்பட்டுள்ளதுடன் 41 காணிகள் பொது மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
யாழ். வைத்தியசாலைக்கு தேவைப்படும் இரத்தத்தை இராணுவமே வழங்குவதாக குறிப்பிட்ட மஹிந்த ஹத்துருசிங்க,
எங்கள் இரத்தம்தான் இங்குள்ள பெரும்பாலான தமிழர்களிடம் உள்ளது. இனி இவர்களால் ஒரு போதும் தாங்கள் சுத்தமான தமிழர்கள் என கூற முடியாது. சிங்களவர்களின், எங்கள் இராணுவ வீரர்களின் இரத்தம் அவர்களிடம் உள்ளது. அந்தளவிற்கு இங்கு நாங்கள் கடமையாற்றியுள்ளோம். எனக் குறிப்பிட்டார்.
http://www.tamilwin.com/show-RUmsyESaLXkuz.html
aasisa pulikalin vaalkal thirunthaamal azhivar!!tamilar poraaddam azhiya kaaranam pulikal enraaal pulikal azhiya kaaranam ivarkal!!nasamaai pona ivarkalai nampi naadum possu,uyirum possu!
inam kandu ivarkalai azhiththaal tamilan thalai nimirvaan! illaiyel ivarkal paathaiyaal azhivaan!
விடுதலைப் புலிகளின் தலைவர் ஆதலும், தலைவர் ஆக்கலும்!
[ புதன்கிழமை, 16 ஏப்ரல் 2014, 11:36.04 PM GMT ]
முதலில். தலைவராக்குதல் முயற்சி இந்திய காங்கிரஸ் ஆட்சியாளர்களாலேயே மேற்கொள்ளப்பட்டது.
விடுதலைப் புலிகள் தனிப் பலமாக உருவாகுவதைத் தடுப்பதற்காக, அவர்களுக்கு எதிராக மாற்று அணிகள் களமிறக்கப்பட்டனர்.
ஆயுதபாணிகளாக்கப்பட்டு, விடுதலைப் புலிகளை அழித்தொழிப்பதற்கான தயார்படுத்தலுடன் தமிழீழத்தில் கரையிறக்கப்பட்ட மாற்றுக் குழுக்களுடான இந்திய முயற்சி விடுதலைப் புலிகளால் நிர்மூலமாக்கப்பட்டது.
விடுதலைப் புலிகள் வசம் இருந்த யாழ். குடாநாட்டைக் கைப்பற்றும் முயற்சியில் ‘ஒப்பரேசன் லிபரேசன்’ படை நடவடிக்கையை மேற்கொண்டிருந்த சிங்களப் படைகள் மீது முதலாவது கரும்புலித் தாக்குதலை மேற்கொண்டார்.
கப்டன் மில்லர் மேற்கொண்டதனைத் தொடர்ந்து, சமாதானப் படை என்ற பெயரில் தரையிறங்கிய இந்தியப் படையினரால் விடுதலைப் புலிகளது தலைவரை அகற்றும் முயற்சிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டது.
அது முடியாத நிலையில், தமிழர்களுக்கான மாற்றுத் தலைமை ஒன்றை உருவாக்கும் முயற்சியில் இந்திய ஆட்சியாளர்கள் இறங்கினார்கள்.
அதற்காகத் தயார்படுத்தப்பட்ட வரதராஜப்பெருமாள் இணைந்த வட – கிழக்கு மாகாணத்தின் முதலமைச்சர் ஆகினார். ஆனாலும், விடுதலைப் புலிகளது போர்க்கள வியூகத்தினால் வெளியேற்றப்பட்ட இந்தியப் படைகளுடன் வரதராஜப்பெருமாளும் இந்தியா திரும்ப வேண்டியதாகி விட்டது.
அதன் பின்னரும், தனிப் பெரும் சக்தியாக வளர்ந்த விடுதலைப் புலிகள் அமைப்பின் உள்ளேயே அதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
விடுதலைப் புலிகளின் இரண்டாம் கட்டத் தலைவரான மாத்தையா என்றழைக்கப்பட்ட கோபாலசாமி மகேந்திரராஜா மூலமாக மேற்கொள்ளப்பட்ட அந்த முயற்சியும் விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டது.
விடுதலைப் புலிகள் அமைப்பினால், கைது செய்யப்பட்டு, விசாரணையின் பின்னர் மாத்தையாவுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது.
இதனுடன், இந்திய ஆட்சியாளர்களின் நேரடி முயற்சிகள் நிறுத்தப்பட்டு, அதன் நோக்கங்கள் சிங்கள ஆட்சியாளாகளின் நோக்கங்களுடன் இணைக்கப்பட்டது.
விடுதலைப் புலிகளை முற்றாக அழிப்பதன் மூலம் தமிழ்த் தேசிய எழுச்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம் என்பதே அவர்களது கூட்டு இலக்காகியது. அதற்காக, 2000 வருடங்களுக்கு முற்பட்ட இயேசு நாதர் காலம் ஆராய்ச்சிக்குட்படுத்தப்பட்டது.
யூதாஸ் கரியோனாக கருணா ஆசையூட்டல் மூலம் பிரித்தெடுக்கப்பட்டான். அவன் மூலமாக, தமிழீழ மக்கள்மீதான இன அழிப்புக்கு வேண்டிய தகவல்கள் திரட்டப்பட்டது.
ஆசையூட்டப்பட்ட கருணாவால், காட்டிக் கொடுக்க மட்டுமே முடிந்தது. தமிழீழ மக்கள் அனைவருமே கருணாவை அச்சத்துடனும், அருவெறுப்புடனும் பார்த்ததால் அடுத்த கட்டம் ஆராயப்பட்டது.
அந்த இடத்திற்குத் தேர்ந்தொடுக்கப்பட்டவர் கே.பி. என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதன். கே.பி. விடுதலைப் புலிகளது ஆயுத முகவராக இருந்த காலத்தில், தனக்கான ஒரு குழுவைப் புலம்பெயர் நாடுகளில் அமைத்திருந்தார்.
அதனால், தமிழீழ தேசியத் தலைவர் அவர்களால் இடைநிறுத்தப்பட்டிருந்த காலத்தில், அவர் சிங்கள உளவுப் பிரிவினருடன் விடுதலைப் புலிகள் பற்றிய தகவல்களைப் பகிர்ந்துகொண்டார்.
கருணாவைப் பிரித்ததன் மூலம் கிழக்கை அபகரித்துக் கொண்ட சிங்கள ஆட்சியாளாகள், கே.பி.யைப் பயன்படுத்தி கடலை முற்றுகையிட முனைவதைப் புரிந்து கொண்ட தேசியத் தலைவர் அவர்கள், கே.பி.யை அரவணைத்து, சிங்கள தேசத்தின் அடுத்த முயற்சியை முறியடிக்கத் திட்டமிட்டார்.
ஆனாலும், அவரால் கே.பி.யின் போக்கினை மாற்ற முடியவில்லை. விடுதலைப் புலிகளது தலைமைப் பொறுப்பை கே.பி.க்கு வழங்குவதன் மூலம் அவரது வலையமைப்பு மூலம் புலம்பெயர் தமிழர்களது தமிழ்த் தேசிய நிகழ்ச்சி நிரலை மாற்றி அமைப்பதற்கு சிங்களப் புலனாய்வு அமைப்பு முடிவு செய்தது.
அதன்படி, முள்ளிவாய்க்கால் போர் முடிவுக்குப் பின்னர், கே.பி. தன்னை விடுதனைப் புலிகளது புதிய தலைவராக அறிவித்துக்கொண்டார்.
புலம்பெயர் தமிழர்களது தமிழ்த் தேசிய நிகழ்ச்சி நிரலை மாற்றி அமைக்க, கே.பி.யால் உருவாக்கப்பட்ட ‘நாடு கடந்த தமிழீழ அரசு’ என்ற அமைப்புக்குப் பொறுப்பாளராக அமெரிக்க சட்டத்தரணி விசுவநாதன் உருத்திரகுமாரன் அவரால் நியமிக்கப்பட்டார்.
சிங்கள ஆட்சியாளர்களது இந்தத் தெரிவையும் தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால், இலங்கைத் தீவுக்கு அழைத்துச் செல்லப்பட்ட கே.பி. அவர்கள், சிங்கள தேசத்தின் விருந்தினராக, கொழும்பிலேயே தங்க வைக்கப்படடுள்ளார்.
இதன் பின்னர், விடுதலைப் புலிகளது தளபதிகளில் ஒருவரான ராம் சிங்கள ஆட்சியாளர்களால் களத்தில் இறக்கப்பட்டார்.
யுத்தத்தின் இறுதி நாட்களில், தன்னை அழைத்த தேசியத் தலைவர் அவர்கள், தனக்கு அந்தப் பணியையும், பதவியையும் வழங்கியதாகத் தெரிவித்து அரங்கத்திற்கு வந்தார். அதுவும் தமிழர்கள் மத்தியில் எடுபடாத காரணத்தால், அவர் மீண்டும் காணாமல் போய்விட்டார்.
தற்போது, இன்னும் ஒரு காட்சி சிங்கள ஆட்சியாளர்களால் ஆரம்பிக்கப்பட்டு, அது முடித்தும் வைக்கப்பட்டுள்ளது.
கோபி எனப்படும் செல்வநாயகம் கஜீபன் விடுதலைப் புலிகளது புதிய தலைவர் என அறிவித்த சிங்கள அரசு, அது தொடர்பாகப் பல கைதுகளை நடாத்தியது. தேடல் நடவடிக்கைகள் தொடர்ந்தன.
இந்த நிலையில், கோபியும், அவரது இரண்டு சகாக்களும் தனது படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டு விட்டதாக சிங்கள அரசு அறிவித்துள்ளது.
ஆனால், கோபி என்ற செல்வநாயகம் கஜீபன், தேவியன் என்ற சுந்தரலிங்கம் கஜீபன், அப்பன் என்ற நவரட்ணம் நவநீதன் ஆகியோர் பல காலமாக கொக்காவில் முகாமில் பணியாற்றி வந்துள்ளனர் என்ற செய்தியும் தற்போது வெளிவந்துள்ளது.
அதாவது, சிங்கள அரசு, சர்வதேசங்களின் கவனத்தை வேறு திசையில் திருப்புவதற்காக, தானே உருவாக்கிய விடுதலைப் புலிகளது புதிய தலைவர் என்ற கதாபாத்திரத்தைத் தானே முடித்து வைத்துள்ளது.
அதே காரணங்களுக்காக, புலம்பெயர் தேசங்களிலும் புதிய புலிகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
சிங்கள ஆட்சியாளர்கள் விடுதலைப் புலிகள் என்று பட்டியலிட்ட 324 பேரில், சிங்கள தேசத்திற்கு விசுவாசமானவர்களும் உள்ளடக்கப்பட்டுள்ளார்கள்.
கே.பி.யின் விசுவாசிகளாக அறிவிக்கப்பட்ட இவர்கள், இப்போதும் கே.பி.யுடன் தொடர்பில் இருப்பவர்கள். கே.பி.யால் வழிநடாத்தப்படுகின்றவர்கள்.
எனவே, தமிழ்த் தேசிய தளத்தில், தலைவர் ஆதலும், தலைவர் ஆக்கலும் இதனுடன் முடிவுக்கு வரப் போவதில்லை. அது, தமிழீழத்தின் விடிவு வரை தொடரவே போகின்றது.
- இசைப்பிரியா
http://www.tamilwin.com/show-RUmsyESaLXku0.html
Geen opmerkingen:
Een reactie posten