தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 17 april 2014

அமெரிக்கா கூறுவதை ஒரே இரவில் செய்து விட முடியாது!- இராணுவப் பேச்சாளர்!!



இராணுவ உறவுக்காக அமெரிக்கா இலங்கைக்கு நிபந்தனை
[ வியாழக்கிழமை, 17 ஏப்ரல் 2014, 08:05.33 AM GMT ]
இலங்கையில் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் என்ற நிறைவேற்றப்படும் போது அந்த நாட்டுடன் முழுமையான இராணுவ தொடர்புகள் ஆரம்பமாகும் என்று ஐக்கிய அமெரிக்கா தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் தெற்காசிய பிராந்திய உதவி இராஜாங்க செயலாளர் நிஷா பிஸ்வால் ஹவாட் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றிய போது, இந்தக் கருத்தை வெளியிட்டார்.
இலங்கையில் போர் முடிவடைந்துள்ளது. எனினும் அந்த நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டியது சவாலாகும் என்று நிஷா குறிப்பிட்டார்.
ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக யோசனை நிறைவேற்றப்பட்ட நிலையில் நீதி மற்றும் நல்லிணத்தை அமெரிக்கா எதிர்ப்பார்ப்பதாக நிஷா தெரிவித்தார்.
தெற்காசியாவில் அமெரிக்காவின் வெளிநாட்டுக் கொள்கை என்ற தலைப்பில் உரையாற்றிய அவர், ஆசிய நாடுகளுடன் உறவை மேம்படுத்திக் கொள்ள அமெரிக்கா விருப்பம் கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இலங்கை நம்பிக்கை தரும் அர்ப்பணிப்புகளை மேற்கொள்ள வேண்டும் - அமெரிக்கா
ஐக்கியம், நல்லிணக்கம் மட்டுமல்லாது பொறுப்புக்கூறல் தொடர்பில் ஆக்கபூர்வமான அர்ப்பணிப்புகளை மேற்கொண்டால், மீண்டும் இலங்கையுடன் விரிவாக பாதுகாப்பு தொடர்புகளை வலுப்படுத்துவது தொடர்பில் கவனம் செலுத்தப்படும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.
மத்திய மற்றும் தெற்காசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்க செயலாளர் நிஷா தேசாய் பிஸ்வால் இதனை கூறியுள்ளார்.
இலங்கை அரசாங்கம், நாட்டில் நடைபெற்ற சிவில் யுத்தத்தை அதிஷ்டவசமாக வெற்றி கொண்ட போதும் நாட்டில் ஐக்கியம் மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகிறது.
ஜெனிவா மனித உரிமை பேரவையில் கடந்த மார்ச் மாதம் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைய பொறுப்புக்கூறல் மற்றும் நீதித்துறை சுதந்திரத்தை உறுதிப்படுத்த நம்பிக்கை தரும் வகையிலான அர்ப்பணிப்புகளை இலங்கை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் எனவும் பிஸ்வால் வலியுறுத்தியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyESbLXkw5.html
அமெரிக்கா கூறுவதை ஒரே இரவில் செய்து விட முடியாது!- இராணுவப் பேச்சாளர்
[ வியாழக்கிழமை, 17 ஏப்ரல் 2014, 08:33.04 AM GMT ]
அமெரிக்கா கூறுவது போல் நல்லிணக்க செயற்பாடுகளை ஒரே இரவில் மேற்கொள்ள முடியாது என இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய தெரிவித்தார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறினார்.
பயங்கரவாதம் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட பின்னர் 12 ஆயிரம் பேருக்கு புனர்வாழ்வு பயிற்சிகள் வழங்கப்பட்டன.
இவர்களில் மூன்று பேர் மீண்டும் ஆயுதப் போராட்டத்திற்கு தயாராகினர் எனவும் அவர் குறிப்பிட்டார்.
எவ்வாறாயினும் நெடுங்கேணி காட்டில் கொல்லப்பட்டவர்கள் விடுதலைப் புலி சந்தேக நபர்களாக என்பதை இராணுவப் பேச்சாளர் உறுதியாக கூறவில்லை.
இலங்கையின் இறுதிக்கட்டப் போரில் இந்திய இராணுவம் சம்பந்தப்பட்டதா என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த இராணுப் பேச்சாளர், அந்த விடயம் தற்போது நீதிமன்ற செயற்பாட்டில் இருப்பதால் அது பற்றி கருத்து வெளியிடுவது பொருத்தமற்றது என்றார்.
http://www.tamilwin.com/show-RUmsyESbLXkw6.html

Geen opmerkingen:

Een reactie posten