[ வெள்ளிக்கிழமை, 11 ஏப்ரல் 2014, 06:30.45 AM GMT ]
விபூசிகாவுக்காக ஒரு முறைப்பாடும், அவரது தாயாருக்காக மற்றொரு முறைப்பாடும் ஆணைக்குழுவில் நேற்றுப் பதிவு செய்யப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட விபூசிகா மற்றும் தாயார் ஜெயக்குமாரி இருவரும் ஒரு நாள் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்ததுடன், தாயார் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் குறித்த முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
விபூசிகாவின் எதிர்கால வாழ்க்கை கருதி அவரை, அவரது தாயாருடன் இணைந்து வாழ்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என்று விபூசிகா சார்பில் செய்யப்பட்டுள்ள முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பொய்யான குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட அவரது தயாரான ஜெயக்குமாரியை விடுவிக்க வேண்டும் என்று கோரி மற்றொரு முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கிளிநொச்சி தருமபுரத்தில் கடந்த மாதம் 13 ம் திகதி இடம்பெற்றதாக கூறப்படும் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தை அடுத்து 13 வயதான விபூசிகா மற்றும் அவரது தாயார் ஜெயக்குமாரி இருவரும் பயங்கரவாத தடுப்புப் பிரிவுப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
தாயாரான ஜெயக்குமாரி பூஸா முகாமிலும், மகள் விபூசிகா கிளிநொச்சி மகாதேவா ஆச்சிரம நன்னடத்தைப் பிரிவு கூடத்திலும் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmsyESVLXmp5.html
புலம்பெயர் தமிழரைக் குறி வைக்கும் இலங்கை: நடவடிக்கை எடுக்குமாறு கனடியத் தமிழர் பேரவை கோரிக்கை
[ வெள்ளிக்கிழமை, 11 ஏப்ரல் 2014, 07:36.40 AM GMT ]
கடந்த மாதம் ஐ.நாவின் மனிதவுரிமைக் கூட்டத்தில் அமெரிக்கா, கனடா, பிரித்தானியா மற்றும் பல நாடுகள் கொண்டு வந்த இலங்கைக்கு எதிரான தீர்மானத்துக்கு ஆதரவாகக் கனடியத் தமிழர் பேரவையும் மற்றும் பல அமைப்புகளும் மும்முரமாகச் செயற்பட்டன.
இத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதன் எதிரொலியாகப் புலம்பெயர் நாடுகளில் அந்நாட்டுச் சட்டங்களுக்கு அமையச் செயற்படும் தமிழர் அமைப்புகளையும், தனிப்பட்ட நபர்களையும் இலங்கை அரசு தடை செய்துள்ளது.
இலங்கை அரசின் இத் தன்னிச்சையான முடிவு மற்றும் அதன் ஜனநாயக விரோதப் போக்குத் தொடர்பாகவும் புலம்பெயர் நாடுகளில் தமிழரின் குரலை ஒடுக்கு முகமாகவும் ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானத்தை ஏற்றுப் பன்னாட்டு விசாரணைக்குத் தாம் ஒத்துழைக்கப் போவதில்லை என்ற அறிவிப்புத் தொடர்பாகவும் பல சந்திப்புகளை நேற்று ஒட்டாவாவில் கனடாவின் முக்கிய கட்சிகளின் உயர்மட்டத் தலைவர்களுடன் கனடியத் தமிழர் பேரவை மேற்கொண்டது.
ஒட்டாவாவில் நேற்று ஆளும் கட்சி மற்றும் எதிர்க் கட்சிகள் ஆகியவற்றுடன் கனடியத் தமிழர் பேரவையின் தலைவர் திரு. இராஜ் தவரட்ணசிங்கம், செயலாளர் செல்வி வாணி செல்வராசா, நிறைவேற்று இயக்குனர் திரு டன்ரன் துரைராசா மற்றும் தேசியப் பேச்சாளர் திரு டேவிட் பூபாலபிள்ளை ஆகியோர் இச் சந்திப்புகளிற் பங்கேற்றனர்.
இச் சந்திப்பின்போது, கனடாவில் ஜனநாயக ரீதியாகச் செயற்படும் பொது அமைப்புகளையும் தனிப்பட்டோரையும் இலங்கை தடை செய்தமையைத் தாம் ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் இவ்விடயம் தொடர்பில் சகல கட்சிகளும் கலந்து ஆலோசனை செய்த பின்னர் தமது காத்திரமான முடிவை அறிவிப்போம் எனவும் தெரிவித்துள்ளனர்.
கனடிய வெளிவிவகார அமைச்சின் உயர் மட்ட அதிகாரிகளைச் சந்தித்துக் கனடியத் தமிழர் பேரவையினர் இவ்விடயம் தொடர்பாக உரையாடினர்.
இது தொடர்பாக தாம் ஆழ்ந்த கவனம் செலுத்துவதாகவும் கனடிய சட்டங்களுக்கு உட்பட்டுச் செயற்படும் அமைப்புகள் மற்றும் தனிப்பட்டோர் அச்சம் கொள்ளத் தேவையில்லை எனவும் சனநாயக முறையிற் தமது பணிகளைத் தொடரலாம் எனவும் திட்டவட்டமாகத் தெரிவித்தனர்.
இதேவேளை இலங்கை அரசு விதித்த தடையானது அது அந்த நாட்டுக்கு வெளியே எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது எனவும் மேலும் தெரிவித்துள்ளனர். தாம் இதற்கு எத்தகைய நடவடிக்கையை எடுக்கலாம் என்பது பற்றி ஆலோசித்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmsyESVLXmq0.html
Geen opmerkingen:
Een reactie posten