தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 15 april 2014

வசமாக மாட்டிக்கொள்வாரா சோனியா ? இந்திய இராணுவம் வன்னி சென்றது அம்பலமாகுமா ?

இலங்கையில் போர் உச்சக்கட்டத்தை அடைந்தவேளை, அங்கே இந்திய இராணுவச் சிப்பாய்கள் சென்று இலங்கை இராணுவத்திற்கு உதவினார்கள் என்ற செய்திகளை நாம் மக்கள் வாயிலாக கேட்டு அறிந்து இருக்கிறோம். ஆனால் அது உண்மையான விடையம் என்பது தற்போது இந்திய நீதிமன்றத்திலேயே நிருபணமாகவுள்ளது. 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு எதிரான இறுதி யுத்தத்தின்போது இந்திய படையினர் பங்கேற்றதாக இந்திய உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்திய நாடாளுமன்றத்திலும், ஜனாதிபதியிடமும் அனுமதி கோராமல், இந்திய படையினரை 2009 ஆம் ஆண்டு இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தில் ஈடுபடுத்தியதாக அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

டெல்லியைச் சேர்ந்த சட்டத்தரணியான ராம்சங்கர் என்பவரே இவ்வாறு வழக்குதாக்கல் செய்துள்ளார். இலங்கையில் 2008 மற்றும் 2009 ஆம் ஆண்டுகளில் இடம்பெற்ற யுத்தத்தை "சீக்கியர்" ஒருவர் வழி நடத்தியதாக அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு மேலாக இலங்கை சென்ற இந்தியப் படையில் இருந்ததாக கூறப்படும், ஒருவர் சாட்சிசொல்ல இருப்பதாகவு கூறப்படுகிறது. இந்தியப் படைகளை நேரடியாக கண்ட சாட்சிகளும், ஆதாரங்களும் தம்மிடம் இருப்பதாகவும் மனுதாரர் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு இந்திய இராணுவம், வான்படை மற்றும் கடற்படை ஆகியோர் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு நாட்டோடு யுத்தத்தை முறையாகப் பிரகடனப்படுத்தாமல், இராணுவத்தை அனுப்ப முடியாது. இது இந்திய அரசியல் அமைப்புச் சட்டமாகும். விடுதலைப் புலிகளோடு இந்திய அரசாங்கம் ஒரு யுத்தத்தை அறிவிக்கவில்லை. ஆனால் இந்திய இராணுவம், வான்படை மற்றும் கடற்படை ஆகியோர் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே யாருடைய அனுமதியில் இவர்கள் அங்கே சென்றார்கள் ? என்று இந்திய உச்சநீதிமன்றில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. இதுதொடர்பாக விசாரணைகள் 17ம் திகதி நடைபெறவுள்ளது. இதில் மேல் குறிப்பிட்டுள்ள விடையங்கள் நிரூபிக்கப்பட்டால், சோனியாவின் காங்கிரஸ் அரசு மீது பெரும் குற்றம் சுமத்தப்படலாம். ஏற்கனவே மரண அடிவாங்கி தேர்தலில் படு தோல்வியடையும் நிலையில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு மேலும் ஒரு பெருத்த தலையிடி உருவாகியுள்ளது.

http://athirvu.com/target_news.php?getnews=news&action=fullnews&showcomments=1&id=6681

Geen opmerkingen:

Een reactie posten