தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 16 april 2014

தமிழ் மக்களின் அபிலாசைகளை வெல்ல தமிழ் கூட்டமைப்பு தலைமைத்துவ சவாலை சந்திக்கும்!- கேர்னல் ஹரிகரன்

அரசாங்கத்துக்கு எதிரான இணையத்தளங்கள் தடை செய்யப்பட்டமை கண்டனத்துக்குரியது!– ராதிகா குமாரசுவாமி
[ செவ்வாய்க்கிழமை, 15 ஏப்ரல் 2014, 11:49.23 PM GMT ]
கொழும்பு டெலிகிராப் மற்றும் சிறிலங்கா கார்டியன் உள்ளிட்ட அரசாங்கத்துக்கு எதிரான பிரபல இணையத்தளங்கள் தடை செய்யப்பட்டமைக்கு, ஐக்கிய நாடுகளின் சிறுவர் மற்றும் யுத்தம் தொடர்பிலான விசேட துணை செயலாளர் ராதிகா குமாரசுவாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
குறித்த இரண்டு இணையத்தளங்களும் கடந்த சில மாதங்களாக இலங்கையில் தடை செய்யப்பட்டுள்ளன.
இதற்கு இலங்கையில் இயங்கும் டயலொக் தொலைபேசி சேவையின் தலைவர் ஜயந்த தனபாலவே பின்னணியில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில் இது தொடர்பில் கொழும்பு டெலிகிராப் இணையத்தளத்துக்கு கருத்து வெளியிட்டுள்ள ராதிகா குமாரசுவாமி, இந்த தடை விதிப்பு கண்டனத்துக்குரிய விடயம் என்று குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyESZLXkpz.html
தமிழ் மக்களின் அபிலாசைகளை வெல்ல தமிழ் கூட்டமைப்பு தலைமைத்துவ சவாலை சந்திக்கும்!- கேர்னல் ஹரிகரன்
[ செவ்வாய்க்கிழமை, 15 ஏப்ரல் 2014, 11:30.47 PM GMT ]
இலங்கையில் தமிழ் மக்களின் அபிலாசைகளை வெற்றி கொள்வதற்கு, தமிழ் தேசிய கூட்டமைப்பு கடுமையான தலைமைத்துவ சவால்களை சந்திக்க வேண்டிவரும் என்று   ஓய்வு பெற்ற இந்திய புலனாய்வுத் தலைவர் கேர்னல் ஹரிகரன் தெரிவித்துள்ளார்.
வடமாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட்டமை மிகப்பெரிய ஜனநாயக முன்னெடுப்பாக இருந்த போதும், இதில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பெற்ற வெற்றியானது, தமிழ் தேசியம் தொடர்பில் கூட்டமைப்பு அடைய வேண்டிய இலக்கின் ஒரு சிறிய முன்னேற்றம் மாத்திரமே.
இந்தத் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பை தமிழ் மக்கள் பாரிய வெற்றியைப் பெற வைத்ததன் மூலம், தமிழ் தேசிய கூட்டமைப்பை தமிழ் தேசியத்தின் பிரதிநிதிகளாக தாங்கள் தெரிவு செய்கிறோம் என்பதை இலங்கை அரசாங்கத்துக்கு உணர்த்தி இருக்கிறார்கள்.
இறுதி யுத்தத்தில் வெற்றி பெற்ற ஜனாதிபதி, தமிழ் மக்களை காப்பாற்றவே விடுதலைப் புலிகளுக்கு எதிராக போரிட்டதாக அறிவித்த போது, அவர் தமிழ் மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றுவார் என்று கருதப்பட்டது.
ஆனால் மகிந்த ராஜபக்ச அதனை நிறைவேற்றவில்லை.
மாறாக அவர் தம்மை, தம்மை சூழ உள்ளவர்களையும் வலுப்படுத்திக் கொண்டதுடன், வடக்கில் தேவையற்ற இராணுவ பிரசன்னத்தை ஏற்படுத்தி, மக்களை வெறுப்படையச் செய்துள்ளார்.
இவ்வாறான நிலையில் வடமாகாண சபையை முழுமையாக வெற்றி பெற்றாலும் கூட தமிழ் தேசிய கூட்டமைப்பால் எதனையும் செய்ய முடியாது.
தமிழ் தேசிய கூட்டமைப்பு சுயமாக இயங்க வேண்டுமாக இருந்தால்,  13ம் திருத்தச் சட்டம் முழுமையாக இலங்கை அமுலாக்கப்பட வேண்டும்.
ஆனால் இந்தியா வழங்கிய தீர்வு ஒன்றை இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அமுலாக்குவார் என்பது நிச்சயமில்லை.
அத்துடன் அரசாங்கத்துடன் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு சிறந்த உறவு காணப்பட வேண்டும்.
இவ்வாறான விடயங்கள் நடைபெறுவதற்கு மிக நீண்ட காலம் தேவைப்படும்.
இந்த நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்களின் அபிலாசைகளை முழுமையாக நிறைவேற்றுவதற்கு மிகப்பெரிய தலைமைத்துவ போராட்டத்தில் ஈடுபட வேண்டி ஏற்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyESZLXko6.html

Geen opmerkingen:

Een reactie posten