தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 19 april 2014

கையடக்கத் தொலைபேசிப் பாவனை! மாணவர்களை நல்வழிப்படுத்த மதகுருமார்கள் முன்வருவார்களா?

நீர்கொழும்பு நகரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது
[ சனிக்கிழமை, 19 ஏப்ரல் 2014, 12:04.48 PM GMT ]
நீர்கொழும்பு நகருக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பை மேலும் பலப்படுத்த பாதுகாப்பு தரப்பினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
நீர்கொழும்பில் கடந்த தினங்களில் பாரிய கொள்ளைச் சம்பவங்கள் இடம்பெற்றன.
முக்கியமாக இரண்டு வர்த்தக நிலையங்களுக்கு ஆயுதங்களுடன் புகுந்த நபர்கள் பணத்தையும் தங்க ஆபரணங்களையும் கொள்ளையிட்டுச் சென்ற சம்பவங்கள் இவற்றில் பிரதான சம்பவங்களாகும்.
இந்த நிலைமையை கவனத்தில் கொண்டு நீர்கொழும்பு நகருக்குள் துப்பாக்கிகளுடன் பொலிஸாரை கடமையில் ஈடுபடுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் நீர்கொழும்பு சுற்றுலா வலயம் அமைந்துள்ள பிரதேசத்திலும் இவ்வாறு ஆயுதம் தாங்கிய பொலிஸாரை கடமையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக நீர்கொழும்பு உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஜயந்த லியனகே தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmsyESdLXjx5.html
கையடக்கத் தொலைபேசிப் பாவனை! மாணவர்களை நல்வழிப்படுத்த மதகுருமார்கள் முன்வருவார்களா?
[ சனிக்கிழமை, 19 ஏப்ரல் 2014, 12:36.09 PM GMT ] [ valampurii.com ]
கையடக்கத் தொலைபேசிப் பயன்பாடு எங்களிடம் மிகவும் அதிகம் என்பதை திரும்பத் திரும்ப நாம் சொல்வது அவ்வளவுக்கு நல்லதல்ல. எனினும் சில விடயங்களைத் திரும்பத் திரும்பச் சொல்லித்தானாக வேண்டும் என்ற சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது.
தமிழர்களைப் பெறுத்தவரை எங்கள் கலாசாரத்தை சீரழிக்கச் செய்ததில் கையடக்கத் தொலைபேசிக்கு பெரும் பங்குண்டு.
மாணவர்கள் மத்தியில் கையடக்கத் தொலைபேசிப் பயன்பாடு எப்போது ஊடுருவியதோ அன்றிலிருந்து எங்கள் மாணவர்களின் கற்றல் செயற்பாடென்பது கவனக்குறைவுக்குட்பட்டுவிட்டது.
இதன் காரணமாக எங்களின் கல்வி அடைவு மட்டம் வீழ்ச்சிப் போக்கிற்குட்பட்டது என்பதற்கு அப்பால், மாணவர்களின் நடத்தைக் கோலங்களிலும் பெரும் மாற்றம் ஏற்பட்டது என்பதை ஏற்றுத்தானாக வேண்டும்.
கிழக்கு மாகாணத்தில் பாடசாலை மாணவி ஒருவர் கையடக்கத் தொலைபேசி மூலமாகத் தகவல் கொடுத்து தனது தாயையும், தந்தையையும் கொன்ற சம்பவம் மறப்பதற்குரியதல்ல.
இவ்வாறாக மாணவர்கள் மத்தியில் கையடக்கத் தொலைபேசிப் பயன்பாடு பலவழிகளி லும் பாதகமாக அமைவதால், மாணவர்கள் கையடக்கத் தொலைபேசிப் பயன்பாட்டை அறவே கைவிட வேண்டும் அல்லது அவசியமானதும் அவசரமானதுமான தேவைகளுக்காக மட்டும் பயன்படுத்த வேண்டும் என்ற கட்டுப்பாடு கொண்டுவருவது அவசியம்.
எதுவாயினும் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் தொடர்பில் மிகவும் விழிப்பாக இருப்பது சாலச்சிறந்தது.
தங்கள் பிள்ளைகளுக்குத் தனியான கையடக்கத் தொலைபேசி என்றில்லாமல் வீட்டில் இருக்கக்கூடிய ஒரு கையடக்கத் தொலைபேசியை குடும்ப உறுப்பினர்கள் பயன்படுத்துதல் என்ற ஒழுங்கு முறைக்குள் நிலைமையைக் கொண்டு வருவது வில்லங்கங்களில் இருந்து எங்கள் பிள்ளைகளைக் காப்பாற்றுவதற்கான வழிமுறையாகும்.
இவை எல்லாவற்றுக்கும் மேலாக கையடக்கத் தொலைபேசிகளின் பயன்பாட்டைக் குறையுங்கள் என்ற போதனைகளை ஆலயங்கள், தேவாலயங்கள் அனைத்திலும் மதகுருமார்கள் போதிக்கவேண்டும். இதனை ஒரு நற்சிந்தனையாகக் கூறிவருவது கூடப் பயன்தரும்.
இதற்காக எங்கள் மதகுருமார்கள் கையடக்கத் தொலைபேசிகளைப் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் அல்லது குறைக்க வேண்டும்.
மதகுருமார்கள் கையடக்கத் தொலைபேசியில் உரையாடுவது, பூசை வழிபாடு நடைபெறும் சந்தர்ப்பங்களில் கையடக்கத் தொலைபேசிகளை தம்முடன் வைத்திருப்பது போன்ற விடயங்களைத் தவிர்ப்பது கட்டாயமானது.
ஒரு மதகுரு கையடக்கத் தொலைபேசியில் சதா உரையாடிக் கொண்டிருப்பாராக இருந்தால் அவரிடம் இருக்கக் கூடிய தெய்வீக ஞானம் குறையத் தொடங்கும்.
மனம் பக்குவத்தை இழக்கும். நடுநிசியிலும் யாருடனாவது கதைக்க வேண்டும் அல்லது குறுஞ் செய்தி அனுப்ப வேண்டும் போல் இருக்கும். இது மனக் குழப்பத்தை உண்டு பண்ணக் கூடியது.
எனவே எங்கள் மத குருமார்கள் மற்றவர்களுக்கு-மாணவர்களுக்கு முன்னுதாரணமாக நடந்து கொள்ளும் வகையில் கையடக்கத் தொலைபேசிப் பாவனைக்குக் கட்டுப்பாட்டு விதிக்க முன்வரவேண்டும்.
எங்களிடம் இருக்கக்கூடிய முன்னுதாரணப் பஞ்சமும் எங்கள் பிள்ளைகளின் பிறழ்வுக்குக் காரணம் என்பதால், முன்னுதாரணமாக நடந்து எங்கள் பிள்ளைகளை வழிப்படுத்த, மதகுருமார்கள் முன்வர வேண்டும் என்பது சர்வமத குருமார்களிடமும் விடப்படும் தாழ்மையான கோரிக்கையாகும்.
http://www.tamilwin.com/show-RUmsyESdLXjx6.html

Geen opmerkingen:

Een reactie posten