தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 19 april 2014

சிறுமியை துஸ்பிரயோகம் செய்து தொலைபேசியில் வீடியோ எடுத்த ஆசிரியர் கைது!

தனியார் கல்வி நிலையமொன்றில் சிறுமியொருவரை துஸ்பிரயோகம் செய்து அதனை, கைத் தொலைபேசியில் வீடியோ எடுத்த ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியகல்லாற்றில் தனியார் கல்வி நிலையமொன்றில் 11வயது சிறுமி ஒருவரை துஷ்பிரயோகம் செய்து அதனை தனது கையடக்க தொலைபேசியில் வீடியோ படம் எடுத்ததாக கூறப்படும் ஆசிரியர் ஒருவரை பொதுமக்கள் பிடித்து தங்களிடம் இன்று ஒப்படைத்தாக களுவாஞ்சிக்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட ஆசிரியர் மட்டக்களப்பு பிள்ளையாரடிப் பகுதியைச் சேர்ந்தவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த ஆசிரியரின் கையடக்க தொலைபேசியை கைப்பற்றியுள்ளதாகவும், இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் களுவாஞ்சிக்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmsyESdLXio1.html

Geen opmerkingen:

Een reactie posten