ராஜிவ் காந்தியின் கொலை தொடர்பில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள 7 பேரை விடுதலை செய்யும் அதிகாரம் தமிழக அரசாங்கத்துக்கு இருக்கிறதா? இல்லையா? என்பது தொடர்பிலான விசாரணை நிறைவடைந்துள்ளதாகவும், இதன் இறுதி தீர்ப்பு எதிர்வரும் 25ம் திகதி வழங்கப்படும் என்றும் பிரதம நீதியரசர் தெரிவித்திருந்தார்.
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் கொலை வழக்கு கைதிகளின் விடுதலை தொடர்பில் முன்கூட்டியே தகவல் வழங்கியமைக்காக, இந்திய பிரதம நீதியரசர் சதாசிவத்துக்கு எதிராக தமிழக தேர்தல்கள் ஆணையகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சி இந்த முறைப்பாட்டை தெரிவித்தள்ளது.
எனினும் அரசியல் தொடர்புள்ள வழக்கு ஒன்று தொடர்பில் இவ்வாறு முன்கூட்டியே அறிவிப்பது முறையில்லை என்று தெரிவித்து, இந்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
http://www.jvpnews.com/srilanka/66297.html
Geen opmerkingen:
Een reactie posten