சேவை என்ற போர்வையில் “கே.பி” பின்னால் அணிதிரளும் அயோக்கியர் கூட்டம்
இந்த வகையில் முன்னை நாள் புலிப் பிரமுகரும், சர்வதேச கிரிமினலும் இன்றைய உளவாளியுமான கே.பி என்ற குமரன் பத்மநாதன் அனாதரவான சிறுவர்களின் இல்லங்கள் என்று வன்னிப்பகுதியில் ஏற்படுத்திவருகிறார்.
ஒரு புறத்தில் இலங்கை அரச பாசிசம் இராணுவக் குடியிருப்புக்கள், இராணுவப் பொருளாதாரம்,இராணுவ கெடுபிடி நிர்வாக அமைப்பு திட்டமிட்ட பல்தேசிய நிறுவனங்களின் பொருளாதார சுரண்டல் நிலப்பறிப்பு, பாலியல் வன்முறைகள் படுகொலைகள் சமூக நெறிமுறைப் பிறழ்வு போன்றவற்றினூடாகத் திட்டமிட்ட இனச்சுத்திகரிப்பை நடத்தி வருகிறது.
மறுபுறத்தில் கே.பி போன்றவர்கள் சேவை என்ற தலையங்கத்தில் போராட்ட உணர்வுள்ளவர்களையும், மக்கள் பற்றுள்ளவர்களையும் சேவை என்ற பெயரில் உள்வாங்கி லாவகமாக விடுதலை உணர்வை மாற்றும் முயற்சிகளை மேற் கொள்கின்றனர்.
இலங்கையிலும் புலம்பெயர் நாடுகளிலும் வாழ்கின்ற பலர் இந்தச் ‘சேவை’ வலைக்குள் விழுந்து இலங்கை அரசின் இனச் சுத்திகரிப்பிற்கு மறைமுக அங்கீகாரம் வழங்கி வருகின்றனர்.
கே.பி, நெர்டோ என்ற அமைப்பைத் தோற்றுவித்து நடத்தி வருகிறார். புலம் பெயர் தமிழர்கள் பலர் மற்றும் காலம் காலமாக துறைசார் அயோக்கியர்களாகவும் சூழ்நிலை அயோக்கியர்களாகவும் இருந்தவர்களும் தற்போது இலங்கை அரச உளவாளியான கே.பி உடன் இந்த அமைப்பிற்குச் சேவை என்ற பெயரில் இணைந்து செயற்படுகின்றனர்.
கே.பி, நெர்டோ என்ற அமைப்பைத் தோற்றுவித்து நடத்தி வருகிறார். புலம் பெயர் தமிழர்கள் பலர் மற்றும் காலம் காலமாக துறைசார் அயோக்கியர்களாகவும் சூழ்நிலை அயோக்கியர்களாகவும் இருந்தவர்களும் தற்போது இலங்கை அரச உளவாளியான கே.பி உடன் இந்த அமைப்பிற்குச் சேவை என்ற பெயரில் இணைந்து செயற்படுகின்றனர்.
தன்னார்வத் தொண்டு நிறுவனங்களை உள்ளூர் உளவாளிகள் கூட உருவாக்கலாம் என்பதற்கு நெர்டோ ஒரு சிறந்த உதாரணம். இலட்சக்கணக்கான மக்கள் படுகொலை செய்யப்படுவதற்கு நேரடிக்காரணமாகவிருந்த கே.பி இன் இரத்தக் கறைபடிந்த கரங்களைக் குழந்தைகளின் கண்ணீரால் கழுவ முற்படுவது சேவையல்ல. மீண்டும் ஒரு காட்டிக்கொடுப்பு. விடுதலை உணர்வு கொண்ட மக்களின் வீரியத்தை அழிக்கமுற்படும் கடைந்தெடுத்த அயோக்கியத்தனம்
நெர்டோ நிறுவன செயலர் கே.பி. என்று அழைக்கப்படும் திரு.செல்வராசா-பத்மநாதன் அவர்களால் கிளிநொச்சியில் ஆண் சிறுவர்களுக்கான செஞ்சோலை சிறுவர் இல்லம் 16-04-2014 அன்று காலை 10.30 மணியளவில் திறந்துவைக்கப்பட்டது.
இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் வணிகத்துறை பீடாதிபதி பேராசிரியர் திரு.கே.தேவராஜா
”மற்றும் விருந்தினர்களாக”01.கிளிநொச்சி வலயக் கல்விப் பணிப்பாளர் கந்தசாமி முருகவேள்,
02.கனடாவில் இருந்து திரு திருமதி இராஜதுரை
03.யாழ். சிறீ நதியா ஜீவலர்ஸ் உரிமையாளர் என்.சத்யரூபன்
04.யாழ். ஹரிகணன் அச்சக உரிமையாளர் எஸ்.ராஜ்குமார்
05.ஒட்டுசுட்டானில் உள்ள புறமோர்ட்டர்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கிறேசன் பெர்ணான்டோ
06.ஓட்டுசுட்டானில் உள்ள புறமோர்ட்டர்ஸ் நிறுவனத்தின் பொது முகாமையாளர் இந்திக யாகண்டவெல
07.யாழ். சேர்வீஸ் நிலைய உரிமையாளர் ரி.புஸ்பகரன்
08.யாழ். கோண்டாவிலைச் சேர்ந்த செல்வி எஸ்.ஞானலோஜினி
09.யாழ். கோண்டாவிலைச் சேர்ந்த போட்டோ சிறீ உரிமையாளர் எஸ்.மீரா
10.லண்டனில் இருந்து திரு கதிரவேலு கோமலேஸ்வரன்
11.யாழ்ப்பாணத்தில் இருந்து இ.தயாபரன்
12.கிளிநொச்சி மாவட்ட அருட்தந்தை எம்.கான்ஸ்போவர்
13.கிளிநொச்சியினைச் சேர்ந்த சிவத்தமிழ் வித்தகர் அமுத லக்ஸ்மி காந்த குருக்கள் ஆகியோர் கலந்துகொண்டார்
வருகை தந்தோரை கே பி வரவேற்றர் நிகழ்வுகளை கனடா .ரிசி அவர்கள் தொகுத்து வழங்க மங்கல விளக்கு தீபங்கள் ஏற்றப்பட்டதை தொடர்ந்து தேசியக்கொடி, நெர்டோ கொடி, செஞ்சோலை கொடி ஆகியவற்றை முறையே
திரு.கே.தேவராஜா, திரு.இராசதுரை, திரு.சரத் சந்திரன் ஆகியோர் ஏற்றினர். இதனைத் தொடர்ந்து நெர்டோ நிறுவனத்தின் செயலர் கே பி எனப்படும் செல்வராசா பத்மநாதன் அவர்களால் ஆண் சிறுவர்களுக்குரிய செஞ்சோலை சிறுவர் இல்லத்தின் கல்வெட்டு திரைநீக்கம் செய்யப்பட்டு சிறுவர் இல்லம் திறந்துவைக்கப்பட்டது.
இந்த இகழ்வில் கலந்து கொண்டவர்களிந்தும் இவ் அமைப்புக்கு உதவி என்ற போர்வையில் பங்களிப்பு செய்தவர்களினதும் நோக்கம் பின்புலம் தமிழர் நலன்சார் நிலைப்பாடு என்பன மிகுந்த சர்சையை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது
http://www.jvpnews.com/srilanka/66311.html
புலிகள் தலைவா் இன்னொரு மறைவிடத்தை துளையிட்டும் படையினர்
இதனால் நுழைவாயில் அடைக்கப்பட்டிருக்கின்றது. எனினும், இடையில் படையினர் துளையிட்டு பார்த்துள்ளனர். மேலும் இதனுள்ளிருந்து துர்நாற்றம் ஆரம்பத்தில் வீசியதாகவும் படையினர் கூறியுள்ளனர்
தமீழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மாறுமொரு வீட்டினைப் படையினர் கண்கொண்டு பிடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. முல்லைதீவு ஆனந்தபுரம் பகுதியிலேயே இந்த வீடு கண்டுபிடிக்கப்பட்டதாக படையினர் தெரிவிக்கின்றனர்.
குறித்த கிராமத்திற்குள் முற்றாக இடிந்த நிலையிலுள்ள குறித்த வீட்டின் பின்புறத்திலிருந்து ஆரம்பிக்கும் பதுங்கு குழி சுமார் 300மீற்றர் தொடக்கம் 400மீற்றர் வரையில் நிலத்திற்குக் கீழ் கொங்கிறீற்றால் அமைக்கப்பட்டுள்ளது.
மேலுள்ள வீடு செங்கல்லினால் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வீட்டிலிருந்தபோதே இறுதி யுத்தத்தின் போது தேசிய தலைவர் சுற்றிவளைக்கப்பட்டதாக படைத் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
தற்போது இந்தப்பகுதியில் மக்கள் மீள்குடியேற்றத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த வீட்டை சென்று பார்க்க முடிகின்றது. எனினும், உள்ளே சென்று பார்ப்பதற்கு இன்னமும் அனுமதிக்கப்படவில்லை.
இவ் விடயம் தொடர்பில் ஞாயிறு மாலை வரை மக்களின் கருத்துக்களை பெற முயற்சித்த போதும் அச்சம் காரணமாக வெளிப்படையாக கருத்துக் கூற மறுத்தாலும் இவ்வாறான புலிகளின் தலைவரின் வீடு என ஒரு வீட்டை படையினர் கைப்பற்றியதாகவும் அது நிலத்திற்கு கீழ் உள்ளது என அவர்கள் கூறுவதை அவதானிக்க முடிகிறதாக பெயர் குறிப்பிட முடியாத கிராம வாசி தெரிவித்தார்.
http://www.jvpnews.com/srilanka/66304.html
Geen opmerkingen:
Een reactie posten