தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 20 april 2014

மண் முனைப் பாலம் மறைக்கப்படாத சில உண்மைகள்… அம்பலம்…

படுவான்கரை மக்களின் நீண்ட கோரிக்கையாக மண்முனைப்பாலம் இருந்தது அதன்காரணமாக 1978ம் ஆண்டு அப்போது இந்துகலாச்சார அமைச்சராக இருந்த செல்லையா இராசதுரையின் முயற்சியால் இப்பாலத்திற்கான நிதிஒதுக்கப்பட்டு அடிக்கல்லும் நடப்பட்டது, ஆனால் நாட்டில் ஏற்பட்ட போர் காரணமாக பாலவேலைகள் நிறுத்தப்பட்டது,

2004 டிசம்பர் 26ம்திகதி ஏற்பட்ட சுணாமி கடற்கோள்அனர்த்தம் காரணமாக மட்டக்களப்பில் பல வெளி நாடுகள் உதவிக்காக முன்வந்தன,
அந்த நாடுகளில் ஜரோப்பிய ஒன்றியம் ஓட்டமாவடிப்பாலத்தையும் ஜப்பான்நாடு கல்லாறு, ஓந்தாச்சிமடம், கல்லடி ஆகிய மூன்று பாலங்களுடன் இன்னும் ஒருபாலம் கட்டமுடியும் எனகூறியது,
அதில் மண்டூர்பாலம் அல்லது மண்முனைப்பாலம் என இழுபறி ஏற்பட்டது, இழுபறியை தீர்கும் முகமாக மட்டக்களப்பு கச்சேரியில் 2008 நவம்பர் மாதம் மட்டக்களப்பு அரசஅதிபர் திருமதி ருபி கேதீஷ்வரன் தலைமையில் ஜப்பான் தூதுவர் ஜப்பான் அதிகாரிகள் மற்றும் மண்டுர் குறுமண்வெளி பட்டிப்பளை பகுதி பொதுமக்கள் நூறுபேர் கலந்துகொண்டு பலவாதப்பிரதி வாதங்கள் ஏற்பட்டு அங்கு சமூகம் கொடுத்த பலபொதுமக்களும் மண்முனைப்பாலத்தை முதன்மைப்படுத்தியதால் எந்தவித அரசியல் அழுத்தமும் இன்றி மண்முனைப்பாலம் கட்டுவதாக ஜப்பான் அதிகாரிகள் ஒப்புதல் கொடுத்தனர்,
இந்த காலப்பகுதியில் மட்டக்களப்பு தமிழ்தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களாக கனகசபை, தங்கேஷ்வரி, ஜெயானந்தமூர்த்தி, அரியநேத்திரன் ஆகிய நால்வர் இருந்தனர் ஆனால் அவர்கள் அனைவரும் மட்டக்களப்பிற்கு செல்லமுடியாதவாறு அரசபடைகளும் அவர்களுடன் இயங்கிய கருணா பிள்ளையான் ஒட்டுக்களுக்களும் கொழும்பில் இவர்களை முடக்கிவைத்தன,
2010 ஏப்ரல் 22ம் திகதி பாராளுமன்ற பொதுத்தேர்தல் இடம்பெறும் வரை தமிழ்தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் மட்டடக்களப்புக்கு சுதந்திரமாக நடமாடமுடியவில்லை, அதன்பின்புதான் 2011 செப்டம்பர் ஜப்பான் தூதுவரும் இலங்கை அரசும் மண்முனைப்பாலத்திற்கான உடன்படிக்கையில் கைச்சாத்திட்டனர், இந்நிலையில் 2012ல் கிழக்குமாகாண சபை தேர்தல் அறிவிப்பும் தேர்தல் பிரசார நடவடிக்கைகளும் தொடங்கின, பிரதி அமைச்சர் கருணா தமது சகோதரியின் பிரசாரத்திற்காக 2012 செப்டம்பர் 03 மகிழடித்தீவுப் பக்கம் பட்டிப்பளைபிரதேச செயலாளர் வில்வரெட்ணத்தைக்கொண்டு மகிளடித்தீவு, முதலைக்குடா கிராம முன்னேற்றசங்க உறுப்பினர்களை கட்டாயப்படுத்தி அடிக்கல் நடப்பட்டது
இதன்பின் பிள்ளையான் தமதுபிரசாரத்திற்காக 2012 அக்டோபர் 06ம் திகதி அமைச்சர் பசீல் ராசபக்ஷ அழைத்து எழுவான்கரைப்பக்கம் கல்நட்டார் இதில் ஜப்பான் தூதுவர் கலந்து கொண்டார், மொத்தமாக மூன்று அரசியல் பிமுகர்கள் வௌ;வேறு தினங்களில் அடிக்கல் நட்டது உலக சரித்திரத்தில் மண்முனைப்பாத்திற்கு மட்டுமே என்பது கின்னஷ் புத்தகத்தில் பதிக்கவேண்டிய ஒன்றுதான்
உண்மையில் மண்முனைப்பாலம் எந்த அரசியல்வாதிகளின் செல்வாக்கு மூலமாக வரவில்லை சுணாமியின் காரணமாகவே மண்முனைப்பாலம் வந்தது. மண்முனைப்பாலம் கிடைத்தமைக்கு நன்றி சொல்வதானால் முதல் நன்றி சுணாமிக்கும் இரண்டாவது நன்றி ஜப்பான் நாட்டிற்கும் சொலவதுதான்சரி,MainmuniMainmuni01Mainmuni02Mainmuni03Mainmuni04Manmunai_BridgeManmunai_Bridge05Manmunai_Bridge04Manmunai_Bridge03Manmunai_Bridge02Manmunai_Bridge01Manmunai_Bridge06Manmunai_Bridge07Manmunai_Bridge08Manmunai_Bridge09
http://www.jvpnews.com/srilanka/66268.html

Geen opmerkingen:

Een reactie posten