இலங்கைக்கு அனுப்பப்படும் வெளிநாட்டு ஊடகவியலாளர்களுக்கு வழங்கப்படும் விசாக்கள் தொடர்பில் கால எல்லையேதும் விதிக்கப்பட்டிருப்பதாக தமக்கு தெரியாதென வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் சங்கம் இன்று தெரிவித்துள்ளது.
கொழும்பிலுள்ள பி.பி.சி ஊடகவியலாளர்களான சார்ல்ஸ் ஹவிலன்டனுக்கு ஒரு வருட விசா நீடிக்க மறுக்கப்பட்டதாக செய்தி வந்ததையடுத்து வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் சங்கம் இவ்வாறு கூறியுள்ளது.
வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் சங்கம் விடுத்துள்ள முழு அறிக்கை
இலங்கைக்கு தொழில் நிமித்தம் அனுப்பப்படும் வெளிநாட்டு ஊடகவியலாளர்களுக்கு வழங்கப்படும் விசாக்கள் மீது எவ்வாறான கால எல்லையும் இருப்பதாக வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் சங்கம் அறியவில்லை.
ஆயினும் வெளிநாட்டு ஊடகவியலாளர்களுக்கு வழங்கப்படும் விசாக்கள் பற்றி அடுத்த வாரமளவில் ஊடக அமைச்சு அறிவிக்குமென அதிகாரிகள் குறிப்பிடுவதை அவதானித்துள்ளோம். நாம் அதை ஆவலுடன் எதிர்ப்பார்த்துள்ளோம்.
இதேவேளை இலங்கை அதிகாரிகளால் கடைப்பிடிக்கப்படும் கொள்கைகளை வெளியுறவு அமைச்சின் இணையதளத்தில் காணலாம்.
இதில் ஒரு வெளிநட்டு ஊடகவியலாளர் எவ்வளவு காலம் இலங்கையில் தங்கலாம் என்பது தொடர்பில் எதுவும் குறிப்பிடப்படவில்லை.
http://www.jvpnews.com/srilanka/66265.html
Geen opmerkingen:
Een reactie posten