யாழ்.இந்து கல்லூரிக்கு அருகில் “தமிழீழம் மலரும்” துண்டுப்பிரசுரம் ஒட்டியவர் கைது
குறித்த இளைஞன் நேற்று (17.04.14) இரவு அவ்விடத்தில் தமிழீழம் மலரும் என துண்டுப் பிரசுரத்தினை ஓட்டினார் என்ற குற்றச்சாட்டிலேயே நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இந்த இளைஞன் ஒட்டிய துண்டுப்பிரசுரமும் அங்கிருந்த அகற்றப்பட்டுள்ளதுடன், இளைஞன் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
2 இணைப்பு
துண்டுப்பிரசுர விவகாரம்: மற்றுமொருவர் கைது
யாழ்.இந்து கல்லூரிக்கு அருகில் அநாமதேய துண்டுப்பிரசுரத்தினை ஒட்டியவர் என்ற குற்றச்சாட்டில் யாழ்.இணுவில் பகுதியினைச் சேர்ந்த மன்மதராசா வேணுகாந்தன் (24) என்ற மேலும் ஒரு இளைஞன் நேற்று (17) இரவு கைது செய்யப்பட்டதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.
யாழ்.கொக்குவில் பகுதியினைச் சேர்ந்த ஜெயதாஸன் கஜானன் (24) என்ற இளைஞன்; நேற்று (17) கைது செய்யப்பட்டிருந்தார்.
யாழ்.இந்துக் கல்லூரிக்கு அருகில் தமிழீழம் மலரும் என்ற தலைப்பில் துண்டுப் பிரசுரத்தினை ஒட்டினார் என்ற குற்றச்சாட்டிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேற்படி துண்டுப்பிரசுரமும் அங்கிருந்த பொலிஸாரினால் அகற்றப்பட்டதுடன் கைது செய்யப்பட்ட இருவரும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
http://www.jvpnews.com/srilanka/66008.html
மன்னாரில் மீனவர்களுக்கு கடற்படையினரின் சோதனை மீண்டும் பாஸ்
மன்னார் மாவட்டத்தில் மீண்டும் மீனவர்களுக்கு கடற்தொழிலில் ஈடுபடுவதற்கான பாஸ் நடை முறைப்படுத்தப்படவுள்ளதாகவும், இதனால் மீனவர்கள் மீண்டும் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட மீனவ கூட்டுறவுச சங்கங்களின் சமாச தலைவர் என்.எம்.ஆலம் தெரிவித்தார்.
மன்னார் மாவட்ட மீனவர்கள் கடந்த காலங்களில் மீன் பிடிப்பதற்கு தொழிலுக்குச் செல்லுவதற்காக பாஸ் நடைமுறைப்படுத்தப்பட்டது.கடற்படையினர் கடற்கரையில் சோதனைகளை மேற்கொள்ளும் போது பாஸ் உள்ள மீனவர்கள் மாத்திரமே கடலுக்குச் செல்லக்கூடிய நிலை காணப்பட்டது.
பின் பாஸ் நடைமுறை விளக்கிக்கொள்ளப்பட்ட நிலையில் மீனவர்கள் சுதந்திரமாக கடற்தொழிலில் ஈடுபட்டு வந்தனர். தற்போது மீன்டும் பாஸ் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக மன்னார் மாவட்ட கடற்தொழில் திணைக்களம் அறிவித்துள்ளது.கடந்த காலங்களில் எவ்வாறு பாஸ் நடைமுறைப்படுத்தப்பட்டதோ அதே போன்று மீண்டும் பாஸ் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவித்துள்ளனர். இதனால் மன்னார் மாவட்ட மீனவர்கள் கடந்த யுத்த காலத்தில் அனுபவித்த பிரச்சினைகளை மீண்டும் அனுபவிக்கும் நிலை ஏற்படும் என அவர் மேலும் தெரிவித்தாh
http://www.jvpnews.com/srilanka/66004.html
Geen opmerkingen:
Een reactie posten