தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 18 april 2014

இலங்கை அரசின் தடையை அடுத்து 16 வெளிநாட்டு அமைப்பிற்கு சர்வதேச விசாரணை

வடக்கில் விடுதலைப் புலிகள் மீள உருவாகி இருப்பதாக தெரிவித்து வடக்கில் நடத்தப்பட்ட சோதனைகள் மற்றும் தாக்குதல்கள் தொடர்பில், வெளிநாடுகளின் தூதுவர்களுக்கு இலங்கை அரசாங்கம் விளக்கமளிக்கவுள்ளது.

அடுத்த வாரம் வியாழக்கிழமை இது தொடர்பில் கொழும்பில் மாநாடு ஒன்று நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கை அரசாங்கத்தினால் தடை விதிக்கப்பட்ட 16 புலம்பெயர்ந்த அமைப்புகள் தொடர்பில் சர்வதேச நாடுகள் விசாரணைகளை நடத்தி இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் வடமாகாணத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் மீள உருவாகி வருவதாக அரசாங்கம் தெரிவித்திருந்த கருத்துக்கள் தொடர்பிலும் பல நாடுகள் விசாரணைகளை நடத்தி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயங்கள் தொடர்பில் இலங்கையின் வெளிவிவகார அமைச்சு மற்றும் பாதுகாப்பு அமைச்சுடன் வெளிநாடுகளின் தூதரகங்கள் தொடர்பு கொண்டு தகவல்களை கேட்டறிந்துக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 http://www.jvpnews.com/srilanka/65995.html

Geen opmerkingen:

Een reactie posten