[ வெள்ளிக்கிழமை, 18 ஏப்ரல் 2014, 12:30.43 AM GMT ]
இதன் போது தமிழ் தேசிய கூட்டமைப்பு மேற்கொண்டிருந்த தென்னாபிரிக்க விஜயம் தொடர்பில் கலந்துரையாடப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் தற்போதைய அரசியல் சூழ்நிலைகள் தொடர்பிலும் பேச்சுவார்த்தைகள் இடம்பெறவுள்ளன.
இந்த பேச்சுவார்த்தைகளில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.
இதன் போது குறிப்பாக அரசாங்கத்தினால் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுள்ள சூழ்ச்சிகள் தொடர்பில் கலந்தாலோசனை செய்யப்படவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
2ம் இணைப்பு
கூட்டம் ஒத்திவைப்பு
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்களுக்கான கூட்டுக் கூட்டம் ஒன்றை நாளை சனிக்கிழமை யாழ்ப்பாணம் அல்லது வவுனியாவில் நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்ட போதிலும் நேற்றிரவு கடைசி நேரத்தில் அதனை ஒத்தி வைக்கத் தீர்மானம் எடுக்கப்பட்டது.
இனி, அந்தக் கூட்டத்தை எப்போது, எங்கு நடத்துவது என்பது குறித்து அடுத்து வரும் நாட்களில் தீர்மானித்து அறிவிக்கப்படும் எனக் கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.
இனிப் பெரும்பாலும் அந்தக் கூட்டம் திருகோணமலையிலேயே நடக்கும் எனச் சில வட்டாரங்கள் தெரிவித்தன.
திடீரென இந்தக் கூட்டத்தைக் கூட்டுவதற்கு கூட்டமைப்பின் தலைமைப்பீடம் எடுத்த முடிவு பல சர்ச்சைகளை ஏற்படுத்தியமையை அடுத்தே இந்தக் கூட்டத்தை ஒத்திவைக்கும் முடிவு எடுக்கப்பட்டதாகவும் அறிய வந்தது.
ஏற்கனவே யாழ்ப்பாணத்திலும் வவுனியாவிலும் இத்தகைய கூட்டுக் கூட்டம் இரண்டு தடவைகள் நடத்தப்பட்டன. இனி, அந்தத் தொடரில் அடுத்த கூட்டத்தை திருகோணமலையில் அல்லது அம்பாறையில் கூட்டுவது என அப்போது தீர்மானிக்கப்பட்டிருந்ததாம்.
ஆனால், அந்தத் தீர்மானத்துக்கு மாறாக, திடீரென மீண்டும் யாழ்ப்பாணத்திலேயே அத்தகைய கூட்டத்தைக் கூட்டும் முடிவு தமிழ்க் கூட்டமைப்பின் தலைமையால் எடுக்கப்பட்டிருக்கின்றது என்று கிழக்கு உறுப்பினர்கள் பொருமியிருக்கின்றனர்.
இத்தகைய சர்ச்சைகளின் பின்னணியிலேயே மேற்படி கூட்டுக் கூட்டத்தை நாளை சனிக்கிழமை நடத்தாமல் ஒத்திவைக்கும் தீர்மானம் எடுக்கப்பட்டதாகத் தெரிகிறது.
இந்தக் கூட்டம் இனிப் பெரும்பாலும் மே தினத்துக்கு முன்னர் திருகோணமலையில் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
http://www.tamilwin.com/show-RUmsyEScLXjqy.html
கிழக்கின் நிலைமைகளை புரிந்து கொண்டு கூட்டமைப்பின் தலைமைகள் கடமையாற்ற முன்வரவேண்டும்: இரா.துரைரெட்ணம்
[ வெள்ளிக்கிழமை, 18 ஏப்ரல் 2014, 03:31.05 AM GMT ]
இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில்,
ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில் முன்மொழியப்பட்ட மனித உரிமைகள் பிரேரணை தொடர்பான தீர்மானம் அதிகப்படியான நாடுகளின் ஆதரவுடன் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்டுள்ள அதேவேளையில், தமிழ் மக்களுக்கான நிரந்தர அதிகாரப் பகிர்வைப் இலங்கை அரசிடம் இருந்து பெற்றுத்தர வேண்டிய கடப்பாடு சர்வதேச நாடுகளுக்கு உண்டு. இதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைமைகள் முன்னின்று உழைக்கின்றன.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களும், புலம்பெயர் தமிழர்களும் எடுத்துக்கொண்ட தொடர்முயற்சிகளும், போராட்டங்களும், வெகுஜன பிரசாரங்களும், மக்களின் எழுச்சிகளும் வடக்கு கிழக்கு மாகாண மக்களின் வாக்குரிமை பலத்தின் விளைவுகளும், ஆணைகளும் உலகத்தின் பார்வைகளை ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் தமிழ் மக்களுக்கு உலகளாவிய ரீதியில் ஓர் அங்கிகாரத்திற்கான பார்வையை ஏற்படுத்திக் கொடுத்துள்ளதுபோல் நீண்டகாலமாக இலங்கை அரசால் மறுக்கப்படுகின்ற அதிகாரப் பகிர்வை பெற்றுத்தர முனைய வேண்டும்.
இலங்கை அரசு ஜி.ஜி பொன்னம்பலம் கேட்ட ஐம்பதற்கு ஐம்பது, செல்வா பண்டா ஒப்பந்தம் ,சிறிமா சாஸ்திரி ஒப்பந்தம், திம்பு பேச்சுவார்தை, இலங்கை இந்திய ஒப்பந்தம், பிரேமதாச புலிகள் ஒப்பந்தம், சந்திரிகா,புலிகள் ஒப்பந்தம், நோர்வேயின் அனுசரணையுடன் ரணில் பிரபா ஒப்பந்தம், சுனாமிக் கட்டமைப்பு முதலான தமிழ் மக்களுக்கான பல்வேறு ஒப்பந்தங்களை செய்தபோதும் அதிகாரப் பகிர்வை கடந்த அறுபது ஆண்டுகாலமாக வழங்காமல் தடுப்பதற்கான வழிமுறைகளை யே தொடர்ந்து கையாண்டு வருகின்றது.
சிங்கள அரசின் இந்த மெத்தனப்போக்கே தமிழர்களின் விரக்தி நிலைக்கும் நம்பிப்கையீனத்துக்கும் காரணமானது. எனவே இவைகளை முறியடித்து அதிகாரப்பங்கீட்டை உரியமுறையில் பெறுவதற்கு சர்வதேசத்தின் ஆதரவுடன் முறையான திட்டமிட்ட நல்லிணக்கத்துடனான கருத்துப் பரிமாற்றத்தை உறுதியான முறையில் தமிழ் தேசியத் தலைமைகள் முன்னெடுப்பது தமிழ் மக்கள் மத்தியில் ஒரு நம்பிக்கையை தோற்றுவிக்கும்.
தமிழ் தேசியக் கூட்டமைப்புத் தலைமைகள் வடகிழக்கில் மாவட்ட, மாகாணச் சூழ்நிலைகளைப் புரிந்து கொண்டு செயலாற்ற வேண்டும். வட மாகாணத்தைப் பொறுத்தவரையில் தமிழ் அரசியல் தலைமைகளே தங்கள் பிரதேசத்தின் திட்டமிடலையும் அமுலாக்கலையும் நடைமுறைப்படுத்துகின்றனர்.
மேலும் வடமாகாணத் தமிழர்கள் அனேகமானோர் மேலைத்தேய நாடுகளில் தொழில்புரிவதால் பொருளாதார முதலீடுகள் அதிகரித்துக் காணப்படுகின்றன. இராஜதந்திரிகளின் பார்வையும் அதிகமாக வடக்கு நோக்கி நகர்ந்துள்ளன. ஆனால் கிழக்கைப் பொறுத்தவரையில் தமிழ் அரசியல் தலைமைகளுக்கும் மேற்படி விடயங்களுக்கும் எவ்வித வாய்புகளும் வசதிகளும், சந்தர்ப்பங்களும் இல்லை என்பதை எமது தமிழ்த் தேசியத் தலைமைகள் நன்கு புரிந்து கொண்டு செயலாற்ற வேண்டும்.
ஏனெனில் கிழக்கைப் பொறுத்தவரையில் கிழக்குத் தமிழ்மக்கள் ஏனைய இனங்களின் ஆதிக்கத்திற்குள் முடக்கப்படுகின்றனர்.இதனால் கிழக்குத் தமிழ்மக்கள் தொடர்ச்சியாகப் பாதிப்புக்களையே எதிர்நோக்கி வருகின்றனர்.
கிழக்கு மாகாணசபையில் உள்ள ஒருசில இனவாதிகளினுடாகத் தமிழ் மக்களின் உரிமைகளைப் பறித்தெடுக்கின்ற முயற்சிகள் அண்மைக்காலமாக அதிகரித்து வருகின்றன. கிழக்கைப் பொறுத்தவரையில் தமிழ் மக்களின் வாழ்வியல் அரசியல் ரீதியாக, கல்வி ரீதியாக உயர்கல்வி ரீதியாக ,பொருளாதார ரீதியாக, தொழில்வாய்ப்பு ரீதியாக அபிவிருத்தி ரீதியாக, பண்பாட்டு ரீதியாக நலிவடைந்து செல்ல்லும் நிலை திட்டமிட்டுத் தோற்றுவிக்கபபட்டுள்ளது.
எமது நிலங்கள் கூட இன்று பறிபோய் கொண்டிருக்கின்றன. கிழக்கைப் பொறுத்தவரையில் அண்ணளவாக 39 வீதம் தமிழ்மக்களும், 36 வீதம் முஸ்லீம் மக்களும் 23வீதம் சிங்கள மக்களும், ஏனையவர்களும் வாழ்கின்றனர் இந்த யதார்த்தத்தை புரிந்துகொண்டு செயலாற்ற வேண்டிய கடமையும், பொறுப்பும், நிதானமும் தமிழ் தேசியக் கூட்டமைப்புத் தலைமைக்கு இருக்கவேண்டும்.
கிழக்கின் யதார்த்;தத்தை புரிந்துகொண்டு இணக்கப்பாட்டுடன் செயல்பட வேண்டிய இடத்தில் இணக்கப்பாட்டுடனும் எதிர்த்து நின்று காரியமாற்ற வேண்டிய இடத்தில் எதிர்த்து நின்று காரியமாற்றுவதும் காலத்தின் கட்டாயத் தேவையாக உள்ளது.
இதேவேளை எமது உரிமைகள் தொடர்பாக எந்தவித விட்டுக் கொடுப்புக்களுக்கும் நாம் தயார் இல்லை இவ்விடயத்தில் அறுபது ஆண்டுகால வலியைச் சுமந்து நிற்பவர்கள் நாம் ஆயுத போராட்ட காலத்தில் ஒவ்வொரு குடும்பங்களும் ஏதோ ஒரு வகையில் ஈடுகொடுக்க முடியாத இழப்புக்களை சந்தித்து இன்னும் நிற்கதி நிலையில் பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் பரிதவிக்கின்றன.
தமிழ் மக்களின் அதிகாரப் பகிர்வு தொடர்பாக தீர்க்கமான முடிவெடுக்கும் பொறுப்பு இந்தியாவிற்கும் உளளது. காரணம் விரும்பியோ விரும்பாமலோ நிற்பந்தம் காரணமாக இலங்கை இந்திய ஒப்பந்தமூடாக உருவாக்கப்பட்ட மாகாணசபையின் கீழ் தேர்தலில் போட்டியிட்டு வடகிழக்கு மக்கள் அதிகமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு வாக்களித்தன்மூலம் வடமாகாணத்தி;ல் ஆளும்தரப்பினராகவும், கிழக்கில் எதிர்தரப்பினராகவும் செயல்பட்டு வருகின்றோம்.
மாகாணசபைகளுக்கு அதிகாரங்கள் பெறுவது தொடங்கி சுயநிர்ணைய உரிமைகளைப் பெறுவது வரைக்கும் எமது அரசியல் போராட்டம் நீண்டு கொண்டேபோகும்.
பல முரண்பாட்டுக்கு மத்தியில் விரும்பியோ விரும்பாமலோ வடகிழக்கை இணைத்து காட்டியது இந்திய அரசு. இதை உணர்ந்து கொள்ள வேண்டும். ஆனால் இதை சிங்கள அரசு சட்ட ரீதியாக பிரித்தது.
ஆயினும் தமிழ் மக்களின் உரிமைகள் தொடர்பாக இந்தியா தட்டிக்கழிக்காது சர்வதேச ரீயாக தீர்வொன்றைப் பெற்றுத்தருவதற்கு ஒத்தழைக்க வேண்டிய கடப்பாடு உண்டு. இந்திய அரசு எம் இலட்சியங்களை வெற்றியடையச் செய்வதோடு சிங்கள இனவாத அரசின் தவறானசெயல் திட்டத்தினை நாம் தோற்கடிக்க எமக்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும். <காலத்தின் நிற்பந்தம் காரணமாகத் தமிழ் தேசியக் கூட்டமைப்பை பொறுத்தவரையில் ஐக்கிய இலங்கைக்குள் ஒன்றிணைந்த தீர்வினையே எதிர்பார்த்து நிற்கின்றது. . இது மறுக்கப்பட்டபோதுதான் தமிழர்களாகிய நாங்கள் மாற்றுத் தீர்வை நாடவேண்டிய சூழ்நிலை ஏற்படுகின்றது.
இதனால் உலகநாடுகளின் அவதானிப்பு அவசியம் என உணரப்பட்டதன் விளைவாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெளிநாடுகளின் மேற்பார்வையின் கீழ் தீர்வு அவசியம் என்பதில் உறுதியாகநிற்கின்றது. .இதற்குக்காரணம் இலங்கை அரசின் செயற்பாடே ஆகும்.
எனவே இலங்கை அரசு மாற்றான் தாய் மனப்பான்மையுடன் தமிழ்த் மக்களைப் பார்க்காது இதய சுத்தியுடன் காலம்தாழ்த்தாது நியாயமான தமிழர்களுடைய அபிலாசைகளையும்,
உரிமைகளையும், வடகிழக்கை இணைத்து வழங்கவும். இப்பகுதியில் உள்ள ஏனைய இனங்கள் தொடர்பகவும் அவர்களுடன் பேசி அவர்களுக்கான தீர்வையும் முன்வைக்க வேண்டும்.
உரிமைகளையும், வடகிழக்கை இணைத்து வழங்கவும். இப்பகுதியில் உள்ள ஏனைய இனங்கள் தொடர்பகவும் அவர்களுடன் பேசி அவர்களுக்கான தீர்வையும் முன்வைக்க வேண்டும்.
என குறிப்பிடப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyEScLXjq3.html
தெரிவுக்குழுவில் பங்கேற்க மாட்டோம்! சர்வதேச அனுசரணையுடன் பேசத் தயார்! கூட்டமைப்பு திட்டவட்டம்
[ வெள்ளிக்கிழமை, 18 ஏப்ரல் 2014, 05:44.11 AM GMT ]
தேசிய பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் கலந்துரையாட தயாராக இருக்கின்றோம். எனினும் தீர்வு காண்பதற்கு இலங்கை அரசு நியமித்துள்ள நாடாளுமன்ற தெரிவுக் குழுவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இணைய வேண்டும் என்று அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்திருந்தார்.
இவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும், இலங்கை அரசுக்கும் இடையிலான பேச்சின்போது தலைமை தாங்கியவரும், கடந்த பெப்ரவரி மாதம் தென்னாபிரிக்காவுக்குச் சென்ற அரசதரப்புக் குழுவுக்குத் தலைமை தாங்கியிருந்தவருமாவார்.
இலங்கை அரசின் சிரேஷ்ட அமைச்சரான டியூ குணசேகரவும் அதே கருத்தைப் பிரதிபலித்திருந்தார்.
இவ்விரு அமைச்சர்களின் கருத்துகள் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு என்னவென்று அதன் ஊடகப் பேச்சாளரும் பேச்சுக் குழுவின் உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் கருத்து கூறுகையிலேயே இவ்வாறு தெரிவித்திருந்தார்.
சர்வதேச அனுசரணையுடன் அரசுடன் பேசுவதற்கு நாம் எப்போதும் தயாராக இருக்கின்றோம். ஆனால் அரசு நியமித்துள்ள நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் நாம் ஒருபோதும் பங்கேற்கமாட்டோம்.
தெரிவுக்குழுவின் ஊடாகவே தீர்வு என சூளுரைக்கும் அரசு அதை தென்னாபிரிக்க அரசிடம் திட்டவட்டமாகக் கூறியிருக்கலாமே?
தென்னாபிரிக்கா அரசு தெரிவித்த கருத்துகளுக்கு ஒப்புக்கொண்டுவிட்டு இங்கு வந்து வீரவசனம் பேசுவது நாகரிகமற்ற செயல்.
தமிழர்களை ஏமாற்றுவது போன்று சர்வதேச சமூகத்தையும் இலங்கை அரசு ஏமாற்ற முயற்சிப்பது நாட்டுக்கே பாதகம் என்பதை அரசு புரிந்து கொள்ள வேண்டும் என்று மேலும் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyEScLXjr0.html
Geen opmerkingen:
Een reactie posten