[ ஞாயிற்றுக்கிழமை, 13 ஏப்ரல் 2014, 01:29.19 PM GMT ]
இந்த முகவர் அரசாங்கத்திற்கு எதிரான செயற்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடி அதற்கு தேவையான பணத்தை வழங்க வந்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
குறித்த நபர் கடந்த 30 வருடங்களுக்கு முன்னர் இருந்து பிரித்தானியாவில் வசித்து வருவதாகவும் லண்டனில் உள்ள புலிகளின் ஆதரவாளர்கள் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இரகசியமான தொடர்புகளை கொண்டுள்ளதாகவும் அரச சார்பான அந்த சிங்கள இணையத்தளம் கூறியுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyESXLXlq6.html
கோபி மரணம்: ஜெயக்குமாரி மற்றும் 60 பேரை விடுதலை செய்யுமாறு கோரிக்கை
[ சனிக்கிழமை, 12 ஏப்ரல் 2014, 04:59.11 PM GMT ]
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு புத்துயிர் அளித்ததாக இராணுவத்தினரால் அறிவிக்கப்பட்ட கோபி என்றழைக்கப்படும் செல்வநாயகம் கஜீபன் என்ற நபர் நேற்று முன்தினம் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டதையடுத்து இந்தக் கோரிக்கையினை அவ்வமைப்பு விடுத்துள்ளது.
தடுத்து வைக்கப்பட்டுள்ள ஜெயகுமாரி மற்றும் 60 பேர், கோபி என்ற நபருடன் தொடர்புடையவர்கள் என்று கூறி பயங்கரவாத தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
இச்சட்டத்தில் சந்தேகப்படுவர்களை எந்தவித ஆதரமும் இன்றி 18 மாதம் சிறையில் அடைக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜெயகுமாரி மற்றும் 60 நபர்களுக்கும் கோபியுடன் எந்த வித சம்பந்தமும் இல்லை, மக்களின் இடையில் பயத்தை ஏற்படுத்தவும், வெளியுலக தொடர்பை துண்டிக்கவுமே கைது செய்து உள்ளனர்.
இப்போது கோபி இறந்த பின்பும் இவர்களை சிறையில் வைத்திருப்பது எந்த வித நியாயமும் இல்லை.
பயங்கரவாத தடுப்பு சட்டம் நியாயமற்ற சட்டம் ஆகும். எனவே அதை இரத்து செய்வதுடன், அச்சட்டத்தில் கைது செய்தவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.
ஜெயகுமாரி மற்றும் ஏனைய 60 பேரையும் சித்திரவதைகளுக்கு பெயர்போன பூசா தடுப்பு மையத்தில் அடைத்துள்ளதால், அவர்கள் நலனில் அக்கரை உள்ளது.
இப்போது இவர்கள் விடுதலை செய்யவில்லை என்றால் அதில் ஈடுபட்ட அனைத்து பயங்கரவாத புலனாய்வு துறை அதிகாரிகளுக்கு பயணம் செய்ய தடை விதிக்க வேண்டும் என சர்வதேச சமூகத்திடம் கேட்டு கொள்கிறோம் அவ்வமைப்பு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyESWLXmw7.html
Geen opmerkingen:
Een reactie posten