[ செவ்வாய்க்கிழமை, 22 ஏப்ரல் 2014, 12:08.35 AM GMT ]
அரசாங்க ஊடகம் ஒன்று அண்மையில் வெளியிட்டிருந்த செய்தி ஒன்றுக்கு பதில் வழங்கும் வகையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தமி;ழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சியில் உக்கிர மோதல் ஏற்பட்டுள்ளதாக அரச ஆதரவு ஊடகமான திவயின சிங்களப் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
கிளிநொச்சி தர்மபுரத்தில் வைத்து 13வயது சிறுமி ஒருவரை இலங்கை அரசாங்க படையினர் கைது செய்தார்கள்.
அவரது தாயை சந்திப்பதற்குக்கூட அனுமதிக்காமல் அவரை சிறுவர் முகாம் ஒன்றில் தடுத்து வைத்துள்ளனர்.
கோபி என்ற விடுதலைப் புலிகளின் சந்தேகநபரது மனைவியை கைது செய்த புலனாய்வு பிரிவினர் அவரைத் துன்புறுத்தி கருவை கலைத்துள்ளனர்.
இவ்வாறு தமிழர்களுக்கு கொடுமைகள் இழைக்கப்படுகின்ற நிலையில், சிறுவர்களை பாதுகாக்கும் நாடாக இலங்கையை ஏற்க முடியாது.
அதேநேரம் குறித்த பத்திரிகை, மகிந்த ராஜபக்ச என்ற மிகச் சிறந்த தலைவர் பெற்றிருப்பதால், சிறுவர்கள் அன்பாக கவனிக்கப்படுவதாக தெரிவித்திருந்தது.
இதன் மூலம் சிறுவர்கள் மீது அன்பு செலுத்திய ஏனைய நாட்டு தலைவர்களை அந்த ஊடகம் அவமதித்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உண்மையின் அன்பான தலைவர்கள் குறித்து அந்த ஊடகம் அறிந்திருக்கவில்லையா? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினுள் உக்கிர மோதல் என்கிறது திவயின
[ செவ்வாய்க்கிழமை, 22 ஏப்ரல் 2014, 01:17.08 AM GMT ]
தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் பங்கு பற்றுவதா இல்லையா என்பது தொடாபில் முரண்பாடு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சம்பந்தன், மாவை சேனாதிராஜா, சுமந்திரன் மற்றும் முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஆகியோர் தெரிவுக்குழுவில் பங்கேற்க வேண்டுமென தெரிவிப்பதாகவும், ஸ்ரீதரன், சுரேஸ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன் மற்றும் மாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் ஆகியோர் பங்கேற்கக் கூடாது எனவும் வலியுறுத்தி வருவதாகவும் குறிப்பிடப்படுகிறது.
நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் பங்குபற்றுவது குறித்து தீர்மானிக்கும் நோக்கில் கடந்த 19ம் திகதி வவுனியாவில் கூட்டம் நடத்தப்படவிருந்தது.
எனினும், முரண்பாடுகள் காரணமாக கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டதாக திவயின தெரிவித்துள்ளது.
நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் அடுத்த கூட்டம் மே மாதம் முதல் வாரத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Geen opmerkingen:
Een reactie posten