தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 14 april 2014

புலிகளை மீள இயங்கச் செய்ய முயற்சித்த அரசியல்வாதிகள் குறித்து விசாரணை?


இலங்கைத் தமிழரின் நலனுக்கு முன்னுரிமை! - மோடி உறுதி
[ ஞாயிற்றுக்கிழமை, 13 ஏப்ரல் 2014, 11:48.39 PM GMT ]
இலங்கை, மலேசியா, பிஜி போன்ற நாடுகளில் உள்ள தமிழ் மக்களின் நலத் திட்டங்களுக்கு இந்திய அரசாங்கம் முன்னுரிமை வழங்க வேண்டும் என்று, பாரதீய ஜனதா கட்சியின் பிரதம வேட்பாளர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
பாரதீய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தால், இதனை நிறைவேற்றும் என்றும் உறுதியளித்துள்ளார்.
சென்னையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற பிரசார கூட்டத்தில் உரையாற்றும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை இந்தியாவுக்கு அடிபணியாத இலங்கை,  பாகிஸ்தான் போன்ற நாடுகள் தொடர்பில் கடுமையான அணுகமுறையை பின்பற்ற வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
2015 முதல் இலங்கை கல்வி முறைமை முற்றாக மாற்றம்!
[ திங்கட்கிழமை, 14 ஏப்ரல் 2014, 12:13.17 AM GMT ]
அடுத்த வருடம் முதல் இலங்கையில் கல்வி முறையில் முற்றாக மாற்றம் செய்யப்படும் என்று கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இதன்படி 5ம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை, கல்விப் பொதுத் தராதர சாதாரணதர மற்றும் உயர்தர பரீட்சைகள் என்பன மாற்றி அமைக்கப்படவுள்ளன.
அத்துடன் பாடப் புத்தகங்கள் மற்றும் பாடத் திட்டங்களும் மாற்றி அமைக்கப்படவிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
1977ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த அரசாங்கம் இலங்கையில் திறந்த பொருளாதார கொள்கையை அமுலாக்கியதுடன், அது சார்ந்த கல்வி முறையையும் அமுலாக்கி இருந்தது.
லண்டன் கல்வி முறையில் அடிப்படையில் இலங்கையின் கல்வி முறையும் காணப்பட்டதால், இலங்கையில் கல்வியில் சிறந்த பெறுபேறுகளை பெற முடியவில்லை.
இதன் காரணமாகவே கடந்த காலங்களில் இளைஞர்கள் ஆயுதங்களை ஏந்தி போரிட்டனர்.
இந்தநிலையில் தற்போது இந்த கல்வி முறைமையை முற்றாக மாற்றி அமைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
புலிகளை மீள இயங்கச் செய்ய முயற்சித்த அரசியல்வாதிகள் குறித்து விசாரணை?
[ திங்கட்கிழமை, 14 ஏப்ரல் 2014, 12:19.02 AM GMT ]
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினை மீள இயங்கச் செய்ய முயற்சித்த அரசியல்வாதிகள் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
புலனாய்வுப் பிரிவினர் இந்த விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
அண்மையில் சுட்டுக் கொல்லப்பட்ட கோபி மற்றும் அவரது சகாக்கள் இருவருடனும் தொடர்புகளைப் பேணிய அரசியல்வாதிகள், ஏனைய நபர்கள் பற்றிய தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.
கோபி மற்றும் சகாக்களிடமிருந்து மீட்கப்பட்ட இரண்டு செய்மதி தொலைபேசிகளின் மூலம் இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் தகவல்களை திரட்டியுள்ளனர்.
கோபியின் மரணம் புலம்பெயர் தமிழ் சமூகத்தில் பெரும் குழப்ப நிலைமையை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Geen opmerkingen:

Een reactie posten