[ புதன்கிழமை, 16 ஏப்ரல் 2014, 12:13.54 AM GMT ]
தேசிய சமாதான சபையின் பணிப்பாளர் ஜெஹான் பெரேரா, தம்மைப் பொறுத்தவரை சர்வதேச நியமங்களின் அடிப்படையில் உள்ளுர் மட்ட விசாரணை முன்னெடுப்புக்கான வாய்ப்பு இன்னும் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
உள்ளுர் மட்ட முயற்சிகள் தோல்வியடைந்ததன் காரணமாகவே சர்வதேச அழுத்தம் ஏற்பட்டதாக யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் சட்டத்துறை விரிவுரையாளர் குமாரவடிவேல் குருபரன் தெரிவித்துள்ளார்.
கடந்த மார்ச் 27ம் திகதியன்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட இலங்கைக்கு எதிரான சர்வதேச விசாரணைக்கு தாம் ஒத்துழைக்கப் போவதில்லை என்று இலங்கையின் ஜனாதிபதியும், வெளியுறவு அமைச்சரும் கூறியுள்ள நிலையிலேயே இந்தக் கருத்துக்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இந்தியா உட்பட்ட நாடுகள் இலங்கையில் சர்வதேச விசாரணை நடத்தப்படக்கூடாது என்று கூறியுள்ளன.
எனவே இலங்கையைப் பொறுத்தவரையில் சர்வதேச விசாரணை ஒன்றை எதிர்கொள்வதை தாமதிப்பதற்கு உடனடியாக உள்ளுர் மட்ட விசாரணையை முன்கொண்டு செல்வது சிறந்தது.
அத்துடன், அவ்வாறான உள்ளுர் விசாரணை ஒன்றுக்கு சர்வதேசத்தின் அனுசரணையை பெற்றுக் கொள்ளலாம் என்றும் ஜெஹான் பெரேரா ஆலோசனை வழங்கியுள்ளார்.
யாழ்ப்பாண பல்கலைக்கழக சட்டத்துறை விரிவுரையாளர் குமரகுருபரனின் தமது மேலதிக கருத்தில், ஐக்கிய நாடுகளின் வாக்குகளுக்கு அப்பால் இலங்கை மீது சர்வதேச விசாரணை என்ற கோரிக்கை வலுப்பெற்றுள்ளமையை சுட்டிக்காட்டியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyESaLXkp2.html
ஜெயக்குமாரி பிரிட்டன் பிரதமரிடம் போலி குற்றச்சாட்டை சுமத்தியவர்!- சிங்கள பத்திரிகை
[ புதன்கிழமை, 16 ஏப்ரல் 2014, 12:20.52 AM GMT ]
பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட கோபி என்பவருக்கு ஜெயக்குமாரி தனது வீட்டில் அடைக்கலம் வழங்கியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாட்டில் பிரிட்டன் பிரதமர் டேவிட் கமருன் பங்கேற்றிருந்தார்.
பொதுநலவாய நாடுகள் மாநாட்டில் பங்கேற்ற கமருன் வடக்கிற்கு விஜயம் செய்திருந்தார்.
இவ்வாறு வடக்கிற்கு விஜயம் செய்த போது, ஜெயகுமாரி கமருனிடம் முறைப்பாடு செய்துள்ளமை விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
இராணுவத்தினர் இளைஞர்களை கடத்துவதாகத் தெரிவித்து ஜெயகுமாரி, பிரிட்டன் பிரதமரிடம் மகஜர் ஒன்றை ஒப்படைத்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyESaLXkp3.html
Geen opmerkingen:
Een reactie posten