தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 16 april 2014

புலிகளின் புலனாய்வுப் பிரிவிற்கு நிதி உதவி வழங்கிய நபர் கைது

ஐக்கிய நாடுகள் சபையின் இளையோர் ஆலோசனை குழு இலங்கையில் அமைக்கப்பட்டுள்ளது!
[ புதன்கிழமை, 16 ஏப்ரல் 2014, 12:00.44 AM GMT ]
ஐக்கிய நாடுகள் சபையின் இளையோர் ஆலோசனைக் குழு கடந்த 7ம் திகதியன்று கொழும்பில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகளின் இளையோர் மத்தியில் நேரடி தொடர்புகளை பேணும் வகையில் இந்த அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
மூன்று நிகழ்ச்சித் திட்டத்தின் போட்டி அடிப்படையில் 15 பேர் இந்த குழுவுக்குள் உள்ளீர்க்கப்பட்டனர்.
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் பான் கீ மூன் நியமித்த இளையோர் பிரதிநிதி 2013 ம் ஆண்டில் இலங்கைக்கு சென்று திரும்பிய பின்னர், இலங்கையின் இளையோர் குரல்களை ஐக்கிய நாடுகளுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று அடிப்படையில் இந்தக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
சுமார் 300 விண்ணப்பதாரிகளிடம் இருந்து இந்த 15 பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இதில் வடக்கு மாகாணத்தில் இருந்து அங்கம் பெற்றுள்ள திவ்வியபாலன் சாந்திகுமார், ஐக்கிய நாடுகள் இளையோர் குழுவில் விளையாட்டு மற்றும் வினோத அம்சங்கள் தொடர்பான பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்தக் குழுவில் யாழ்ப்பாணம், அநுராதபுரம் பதுளை என்ற அடிப்படையில் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் இளையோர் அங்கம் பெற்றுள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmsyESaLXkp0.html
புலிகளின் புலனாய்வுப் பிரிவிற்கு நிதி உதவி வழங்கிய நபர் கைது
[ புதன்கிழமை, 16 ஏப்ரல் 2014, 12:06.30 AM GMT ]
தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவிற்கு நிதி உதவிகளை வழங்கிய நபர் ஒருவரை புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
நெடுந்தீவு பகுதியில் வைத்து குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புலிகள் அமைப்பை மீள ஒருங்கிணையச் செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ள புலிகளின் புலனாய்வுப் பிரிவினருக்கு குறித்த நபர் நிதி உதவிகளை வழங்கியுள்ளார்.
குறித்த நபர் உண்டியல் முறையின் ஊடாக மலேசியாவிலிருந்து 60 லட்ச ரூபா பணத்தைப் பெற்றுக்கொண்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் தமிழீழ விடுதலைப் புலிகளின் நலன்புரிப் பிரிவில் கடமையாற்றியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சந்தேக நபர் மலேசியாவில் சில வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இவரிடம் இரண்டு கடவுச்சீட்டுக்கள் காணப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சந்தேக நபர் அடிக்கடி மலேசியாவிற்கு பயணம் செய்பவர் என விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyESaLXkp1.html

Geen opmerkingen:

Een reactie posten