தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 16 april 2014

இலங்கையர்களை கைது செய்ய இந்தியாவில் விசேட சோதனைகள்!- இலங்கையில் இருந்து கடல்மார்க்கமாக இந்தியாவுக்கு தங்கம் கடத்தல்!- புலனாய்வு அறிக்கை!

கடற்பரப்பின் பாதுகாப்பை அதிகரிக்குமாறு அவுஸ்திரேலிய புலனாய்வு பிரிவு இலங்கைக்கும் மலேசியாவுக்கும் எச்சரிக்கை
[ புதன்கிழமை, 16 ஏப்ரல் 2014, 12:41.33 AM GMT ]
இலங்கை மலேசியா போன்ற நாடுகள் தங்களின் கடற்பிரதேசங்களை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று அவுஸ்திரேலிய புலனாய்வு பிரிவு எச்சரித்துள்ளது.
இது குறித்து அவுஸ்திரேலிய புலனாய்வு துறையினர் அறிக்கை ஒன்றை வழங்கி இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி எதிர்வரும் மே மாதம் அளவில் இலங்கையில் இருந்து மீண்டும் அகதிப் படகுகள் அவுஸ்திரேலியா மற்றும் நியுசிலாந்தை நோக்கி பயணிக்கவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவற்றை தடுக்கும் நோக்கில் இலங்கை அரசாங்கமும்,  மலேசிய கடலோர படையினரும் தயாராக இருக்க வேண்டும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே இதற்கான வளங்களை அவுஸ்திரேலியா இரண்டு நாடுகளுக்கும் வழங்கி இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmsyESaLXkp6.html
இலங்கையர்களை கைது செய்ய இந்தியாவில் விசேட சோதனைகள்!- இலங்கையில் இருந்து கடல்மார்க்கமாக இந்தியாவுக்கு தங்கம் கடத்தல்!- புலனாய்வு அறிக்கை
[ புதன்கிழமை, 16 ஏப்ரல் 2014, 12:53.52 AM GMT ]
இலங்கையர்கள் சிலரைக் கைது செய்ய இந்தியாவில் விசேட சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
அண்மையில் இலங்கை அரசாங்கத்தினால் 16 புலம்பெயர் தமிழ் அமைக்களையும், வெளிநாடுகளில் வாழ்ந்து வரும் 424 பேரையும் தடை செய்யப்பட்ட பட்டியலில் இணைப்பதாக அறிவித்திருந்தது.
அரசாங்கத்தினால் கறுப்பு பட்டியலிடப்பட்ட 424 பேரில் 32 பேர் இந்தியாவில் தங்கியிருப்பதாக தகவல் வெளியிடப்பட்டிருந்தது.
இவ்வாறு தங்கியிருக்கும் இலங்கையர்களை கைது செய்ய இந்திய பொலிஸார் சோதனைகளை ஆரம்பித்துள்ளனர்.
இந்திய பயங்கரவாத தடுப்புப் பிரிவான கியூ பிரிவு பொலிஸார் தமிழகத்தின் முக்கிய நகரங்களில் சோதனைகளை நடத்தியுள்ளனர் என சிங்கள ஊடகமொன்றில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
இலங்கையில் இருந்து கடல்மார்க்கமாக இந்தியாவுக்கு தங்கம் கடத்தல்!-  இந்திய புலனாய்வு அறிக்கை
விமானங்களின் ஊடாக இந்தியாவுக்குள் தங்கம் கடத்தப்பட்டமை கட்டுப்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், தற்போது இலங்கையில் இருந்து கடல்மார்க்கமாக தங்கம் கடத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்திய புலனாய்வு அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து தங்கம் விமானம் மூலம் கடத்தி வரப்பட்டது.
எனினும் தமிழகம் மற்றும் கேரளா போன்ற பகுதிகளில் இந்த கடத்தல்கள் முறியடிக்கப்பட்டு பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் டுபாய் உள்ளிட்ட நாடுகளில் இருந்து இலங்கைக்கு தங்கம் கொண்டு வரப்பட்டு, இலங்கையில் இருந்து மீனவர்களின் துணையுடன் தமிழகத்துக்கு கொண்டு செல்லப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் தமிழக கரையோர பகுதிகளில் சுங்க புலனாய்வு பிரிவினரும், கடலோர காவற்படையினரும் அதியுச்ச விழிப்பு நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyESaLXkp7.html

Geen opmerkingen:

Een reactie posten