மூவரது உறவினர்களும் உடல்களை அடையாளம் காட்டினார்கள் ?
12 April, 2014 by admin
நேற்று முன் தினம் நெடுங்கேணியில் இலங்கை இராணுவத்தின் சுற்றுவளைப்பில் 3 தமிழ் இளைஞர்கள் சுட்டுகொல்லப்பட்டார்கள். இச்செய்தியை இலங்கை இராணுவம் தன்னிச்சையாக அறிவித்துள்ளது. தாம் தேடிவந்த முன் நாள் விடுதலைப் புலிகள் உறுப்பினர்களான தேவியன், கோபி மற்றும் அப்பன் ஆகியோரது உடல்களை அனுராதபுரம் கொண்டுசென்ற இலங்கை இராணுவம், உறவினர்கள் வந்து அவர்களது உடல்களை அடையாளம் காட்டியுள்ளதாக தெரிவித்துள்ளார்கள்.
அத்தோடு மரண விசாரணைகள் முடிவடைந்து விட்டதாகவும், அவர்களின் உடல்களை இன்றைய தினம்(சனிக்கிழமை) மாலை தாம் தகனம் செய்ய இருப்பதாகவும் இராணுவம் மேலும் தெரிவித்துள்ளது. இதேவேளை வட கிழக்கில் இராணுவம் ஏன் நிலைகொள்ளவேண்டும் என்று, இப்போது சர்வதேசத்திற்கு புரியும் என தாம் நினைப்பதாகவும் இலங்கை மேலும் தெரிவித்துள்ளது. இங்கே நாம் ஒரு விடையத்தை நன்றாக உற்றுநோக்கவேண்டும். பல சர்வதேச ஊடகங்கள், புலிகள் மீண்டும் எழுவதாகவும், அவர்கள் அடக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகளை வெளியிட்டுள்ளார்கள்.
3 தமிழ் இளைஞர்களைக் கொன்றுவிட்டு, இலங்கை இராணுவம் வட கிழக்கில் நிலைகொள்வது சரியான விடையமே என்று இலங்கை நிரூபித்துள்ளது. இதனை சர்வதேசமும் ஆமோதிப்பது போன்ற நிலை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழர்கள் மிகவும் கவனமாக இருப்பது நல்லது.
அத்தோடு மரண விசாரணைகள் முடிவடைந்து விட்டதாகவும், அவர்களின் உடல்களை இன்றைய தினம்(சனிக்கிழமை) மாலை தாம் தகனம் செய்ய இருப்பதாகவும் இராணுவம் மேலும் தெரிவித்துள்ளது. இதேவேளை வட கிழக்கில் இராணுவம் ஏன் நிலைகொள்ளவேண்டும் என்று, இப்போது சர்வதேசத்திற்கு புரியும் என தாம் நினைப்பதாகவும் இலங்கை மேலும் தெரிவித்துள்ளது. இங்கே நாம் ஒரு விடையத்தை நன்றாக உற்றுநோக்கவேண்டும். பல சர்வதேச ஊடகங்கள், புலிகள் மீண்டும் எழுவதாகவும், அவர்கள் அடக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகளை வெளியிட்டுள்ளார்கள்.
3 தமிழ் இளைஞர்களைக் கொன்றுவிட்டு, இலங்கை இராணுவம் வட கிழக்கில் நிலைகொள்வது சரியான விடையமே என்று இலங்கை நிரூபித்துள்ளது. இதனை சர்வதேசமும் ஆமோதிப்பது போன்ற நிலை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழர்கள் மிகவும் கவனமாக இருப்பது நல்லது.
ரஷ்யா சென்று திரும்பிய தேவிகன் ! உண்மைகள் வெளியாகியது !
13 April, 2014 by admin
கோபி, தேவியன் மற்றும் அப்பன் தொடர்பாக பல செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளது. சிங்களம் வெளியிடும் சில தகவல்களை ஆதாரம் காட்டியே பல ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டு வந்தது. இம் மூவர் தொடர்பாக பல மர்மங்கள் உள்ளது என்று "அதிர்வு" இணையம் பலதடவை எழுதி வந்துள்ளது. வியாழக்கிழமை அதிகாலை என்ன நடந்தது ? இதோ அந்த பரபரப்பு செய்தி ! சில கசப்பான உண்மைகளை நாம் இங்கே வெளியிடவேண்டிய நிலையிலும் உள்ளோம் !
விடுதலைப் புலிகள் 2009ம் ஆண்டு நடைபெற்றபோரில், பெரும் நிலப்பரப்புகளை இழந்து, குறுகிய ஒரு பகுதியில் சிக்கியவேளை அவர்களிடம் இருந்த 2 சிலின் 147 ரக விமானங்களும், கொழும்புக்குச் சென்று தாக்குதல் நடத்தியது. ஆனால் அவை மீண்டும் புலிகளின் இடம் திரும்பிச் செல்ல தாயாராகச் செல்லவில்லை.(தற்கொலை தாக்குதல் திட்டமே தீட்டப்பட்டது) இன் நிலையில் 2011ம் ஆண்டு அதிர்வில் நாம் ஒரு செய்தியை வெளியிட்டு இருந்தோம். வன்னியில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட்ட புலிகளின் 2 விமானத்தில், ஒன்று திடீரென காணாமல் போய் பின்னர் அது மீண்டும் மற்றைய விமானத்தோடு இணைந்து பறப்பில் ஈடுபட்டது என்பதாகும். சில நிமிடங்கள் மட்டும் பலாலி இராணுவத் தளத்தில் உள்ள ராடர் திரையில் ஒரு விமானம் மட்டும் காணால் போனது. (அது மிகவும் தாழ்வாகப் பறந்திருக்கவேண்டும்) அல்லது அவ்விமானம் ஒருவரை தரையிறக்கி இருக்கவேண்டும் என்று நாம் அன்றே எழுதி இருந்தோம். சரி தற்போது நடந்த விடையத்திற்கு வருவோம்.
இதனை நம்பி , ஏற்கனவே புலிகள் இயக்கத்தில் உள்ள சிலர், இவர்களோடு தொடர்புகொண்டால் இந்த இளைஞர்கள் செய்யும் முதல்வேலை அவர்களை கியூ பிரிவு பொலிசாரிடம் காட்டிக்கொடுப்பது தான். ஆனால் அதேவேளை பொலிசார் வருமுன்னர் புலிகள் உறுப்பினர்களுக்கு தகவலையும் கொடுத்துவிடுவார்கள். அதனால் அந்தப் புலிகள் உறுப்பினர்கள், அங்கிருந்து தப்பி தலைமறைவாக வாழவேண்டும். இன் நிலையில் இலங்கை சென்றால் நல்லது, இல்லையென்றால் மலேசியா சென்றுவிடுங்கள் என்று, இந்த இலங்கை அரசின் ஏஜண்டுகள் அவர்களுக்கு அறிவுரை கூறுவார்கள். இதனை நம்பி பலர் மலேசியா சென்று மாட்டிக்கொண்டு பின்னர் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளார்கள். மேலும் சிலர் இலங்கை சென்று பின்னர் மாட்டிக்கொண்டுள்ளார்கள். இதுபோல பல மாதங்களுக்கு முன்னரே கோபியும் இலங்கை இராணுவத்தின் கைகளில் சிக்கிவிட்டார் என்றே கூறப்படுகிறது.
இறுதியாக இவர்களை அங்கிருந்து நெடுங்கேணி கொண்டு சென்ற இராணுவத்தினர் இவர்களை காட்டில், கைகளை கட்டி சுட்டுக்கொன்றுள்ளார்கள். பிரேதத்தை அடையாளம் காட்டிய உறவினர் ஒருவர் அதிர்வுக்கு தெரிவித்த தகவலின் அடிப்படையில், ஒரு சடலம் கைகள் கட்டப்பட்ட நிலையில் தான் அனுராதபுரம் கொண்டுசெல்லப்பட்டது என்று தெரிவித்துள்ளார். இதேவேளை இலங்கை இராணுவத்தில் புதிதாக இணைந்த சிப்பாய்களை பலரை அங்கே கொண்டுசென்றுள்ளார்கள் கோட்டபாயவின் ஆட்கள். அவர்களுக்கும் உண்மை நிலை தெரியாது. ஏன் எனில் அவர்களும் "கொட்டியா" என்று சொல்லி பரபரப்பாக தான் இருந்துள்ளார்கள். ஒரு நாடகம் நடப்பது அவர்களுக்கே தெரியாது. துப்பாக்கிகள் சகிதம் இந்த புதிய இராணுவத்தினர் காடுகளில் தேடுதல் நடத்தியும், துப்பாக்கிப் பிரயோகமும் செய்துள்ளார்கள். பின்னர் குறிப்பிட்ட 4 இராணுவ அதிகாரிகள் தாம் ஏற்கனவே சுட்டு மறைத்து வைத்திருந்த மூவரது உடல்களையும் வெளியே கொண்டுவந்து தாம் அவர்களை கொன்றுவிட்டதாக கூறியுள்ளார்கள்.
இவ்வளவு இராணுவம் ஏன் வந்தது ? எப்படி இவ்வளவு சீக்கிரம் இவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டார்கள் ? மூவரைப் பிடிக்க இவ்வளவு இராணுவமா ? என்று தமக்கு தாமே கேள்விகளை எழுப்பியவாறு வந்த இராணுவத்தினர் மீண்டும் ரக் வண்டிகளில் ஏறிச் சென்றுள்ளார்கள் என்றால் பாருங்களே. ஆக மொத்ததில் மாபெரும் நாடகம் ஒன்றை இலங்கை இராணுவத்துடன் இணைந்து கோட்டபாய நடத்தி முடித்துள்ளார். சிறையில் இருந்த 3 நிராயுதபாணிகளை கொன்று, காட்டில் போட்டுள்ளார்கள். இதனால் பல சர்வதேச ஊடகங்கள், வட கிழக்கில் இராணுவம் நிலைகொள்வது அவசியம் என்ற இலங்கையின் கருத்தை முற்று முழுதாக ஏற்றுள்ளது. புலிகள் மீண்டு வருகிறார்கள் என்று நம்புகிறது. சர்வதேசத்தை ஏமாற்றவும், புலிகள் மேல் சர்வதேச நாடுகள் போட்டுள்ள தடையை நீடிக்கவும், வட கிழக்கில் இராணுவத்தை தொடர்ந்து நிலைகொள்ளச் செய்யவும் இந்த 3 உயிர்கள் பலிகொடுக்கப்பட்டுள்ளது. கோட்டபாய தமிழர்களை மட்டும் அல்ல சிங்களவர்களையும் அப்பட்டமாக ஏமாற்றியுள்ளார். ஓமந்தையில் நேற்று மீண்டும் சோதனைச் சாவடி திறக்கப்பட்டுள்ளது. மீண்டும் பழைய நிலைக்கு இராணுவம் கொண்டுசெல்லபப்ட்டுள்ளது. இதுவே நடந்து முடிந்துள்ளது.
http://athirvu.com/target_news.php?getnews=news&action=fullnews&showcomments=1&id=6672
Geen opmerkingen:
Een reactie posten