இந்திய அரசாங்கத்தின் அக்கறையின்மையாலேயே இலங்கை இந்திய மீனவர்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தை தொடர்ந்தும் தமதமடைந்துவருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இலங்கை மீன்பிடித் திணைக்களத்தின் தலைவர் ஹெட்டியாராச்சி இதனைத் தெரிவித்துள்ளார்.
இலங்கை மற்றும் இந்திய மீனவர்களுக்கு இடையிலான இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை இலங்கையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
எனினும் கடந்த காலங்களில் இந்த பேச்சுவார்த்தை இலங்கையில் தமிழக மீனவர்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்தமையை காரணம் காட்டி நடைபெற்றிருக்கவில்லை.
தற்போது அனைத்து மீனவர்களும் விடுவிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் மீண்டும் பேச்சுவார்த்தையை நடத்துவது தொடர்பில் இந்தியாவிடம் இரண்டு தடவைகள் கோரப்பட்ட போதும், இந்திய அரசாங்கம் இன்னும் பதில் வழங்கவில்லை என்று தெரிவித்துள்ளார். |
Geen opmerkingen:
Een reactie posten