தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 6 april 2014

இலங்கை அரசாங்கத்தின் ஐனநாயக மீறல் நல்லதல்ல: சந்திரிகா

ஜனாநாயத்தை மீறி இலங்கை அரசாங்கத்தினால் தொடர்ந்தும் செயற்பட முடியாது என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசாங்கம் வரைமுறைகளை மீறி ஜனநாயகத்தை எதிர்த்து வருகிறது.

இதனை எப்போதும் தொடரமுடியாது.

இந்த நிலைமையை மாற்றி ஜனநாயகத்தை நிலைநாட்ட எதிர்கட்சிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அந்த இயலுமை எதிர்கட்சிகளுக்கு இல்லை என்றால், இலங்கை மக்கள் அதற்கான புரட்சியை ஏற்படுத்தி நாட்டில் ஜனநாயகத்தை நிலைநாட்டுவார்கள் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை அரசியலுக்கு வருவது குறித்து தாம் இன்னும் எந்த தீர்மானத்துக்கும் வரவில்லை என்றும், ஆனால் தற்போது நடக்கின்ற சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு தாம் மீண்டும் அரசியலுக்கு வந்தாலும் ஆச்சரியம் இல்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.
06 Apr 2014
http://www.lankaroad.net/index.php?subaction=showfull&id=1396774548&archive=&start_from=&ucat=1&

Geen opmerkingen:

Een reactie posten