இலங்கைக்கான தனது நான்கு நாள் விஜயத்தின் முடிவிலேயே சிங்கப்பூரின் வெளிவிவகார மற்றும் சட்ட விவகார அமைச்சர் கே.சண்முகம் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் – அத்தகைய ஒரு முடிவினைக் காணாதவிடத்து, பின்னர் நின்று நிலைக்கக்கூடிய ஓர் இன நல்லிணகத்தை உருவாக்குவது சிரமம் என்று குறிப்பிட்டதுடன், அத்தகைய ஒரு முடிவைக் காண்பதற்கான வழியில் பயணிக்க இலங்கையை சிங்கப்பூர் உற்சாகப்படுத்துகின்றது என்றும் சொன்னார்.
அவர் இலங்கையில் தங்கியிருந்த போது, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஆகியோருடன் கலந்துரையாடல்களை நடத்தினார்.
தனது சந்திப்புக்களின் போது இரு தரப்பு உறவில் ஏற்படுகின்ற சாதகமான முன்னேற்றங்கள், இருதரப்பு கூட்டுச் செயற்பாடுகளை மேலும் விரிவாக்கி ஆழப்படுத்துவதற்கான சாத்தியப்பாடுகள் தொடர்பாக அவர் கலந்துரையாடினார் என்று தெரிவிக்கப்படுகின்றது.
வடக்கிற்கான தனது விஜயத்தின் போது – வட மாகாண ஆளுநர் ஜ.ஏ.சந்திரசிறீ மற்றும் யாழ்ப்பாண மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா ஆகியோரையும் அமைச்சர் கே.சண்முகம் சந்தித்தார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில் – ” இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கில் நடைபெற்ற மீள் கட்டுமான மற்றும் அபிவிருத்திப் பணிகள் திடமானதாகவும் தெளிவாகத் தெரிகின்றதாகவும் இருக்கின்றன” என்றும் அவர் தெரிவித்தார்.

http://www.jvpnews.com/srilanka/64586.html
Geen opmerkingen:
Een reactie posten