[ புதன்கிழமை, 16 ஏப்ரல் 2014, 04:53.20 PM GMT ]
ஆங்கில ஊடகம் ஒன்று இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
சீனாவின் புராதன பட்டுவீதியை ஒத்ததாக, 21ம் நூற்றாண்டுக்கான பட்டுவீதியை இந்து சமுத்தர நாடுகளுக்கு இடையில் அமைக்கும் திட்டத்தை சீனா முன்னெடுத்து வருகிறது.
இதற்கு ஏற்கனவே இலங்கை அரசாங்கம் ஆதரவை வெளியிட்டுள்ளது. எனினும் தற்போதைய அரசியல் நிலவரங்களின் அடிப்படையில் இலங்கையில் விரைவில் ஆட்சி மாற்றம் ஒன்று ஏற்படலாம் என்று சீனா கருதுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில் தமது திட்டத்தை விரைவாக நிறைவேற்றிக் கொள்ள இந்த செயற்திட்டத்தை விரைவுப் படுத்தி இருப்பதாக அந்த ஊடகம் தெரிவித்துள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyESaLXkt5.html
இலங்கை விஜயம் இரத்தானமை குறித்த பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் கவலை
[ புதன்கிழமை, 16 ஏப்ரல் 2014, 04:42.47 PM GMT ]
கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் அழைப்பின் பேரில் அண்மையில் ஐந்து பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள் இலங்கைக்கு விஜயம் செய்வதாக இருந்தது.
அந்த குழுவுக்கு ரொபர்ட்சன்னே தலைமை தாங்கினார். எனினும் விஜயம் செய்ய உத்தேசித்திருந்த தினத்துக்கு முதல் இந்த விஜயத்தில் இருந்து தாங்கள் விலகிக் கொள்வதாக இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் அறிவித்தனர்.
எனவே இந்த விஜயத்தை முழுமையாக தாம் ரத்து செய்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் இந்த விஜயம் அரசியல் நோக்கத்தில் அமையவில்லை என்றும், இதனால் முரளிதரனின் அமைப்புக்கு பல ஆயிரம் பவுண்ட்கள் நட்டம் ஏற்பட்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
அத்துடன் இது தொடர்பில் தாம் ஆழ்ந்த வருத்தமடைவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyESaLXkt4.html
Geen opmerkingen:
Een reactie posten