தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 16 april 2014

குராம் ஷேக்கின் கொலைச் சந்தேக நபர்களுக்கு பிணை: அதிர்ச்சியில் குடும்பம்!!

யாழில் சட்ட விரோத மணல் அகழ்வுப் பிரச்சினைக்கு தீர்வு
[ புதன்கிழமை, 16 ஏப்ரல் 2014, 05:03.30 PM GMT ]
யாழ்ப்பாணம் வடமராட்சி – கிழக்கு பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வந்த சட்டவிரோத மணல் அகழ்வுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இன்று காலை இது தொடர்பில் வடமாகாண விவசாயத்துறை அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தலைமையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றது.
இதன் போது வடமராட்சி கிழக்கு பிரதேசங்களான அம்பன், குடத்தனை, நாகர்கோவில் பிரதேசங்களில் இருந்து சட்ட விரோதமான முறையில் மணல் அகழ்வு இடம்பெறுவது தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டது.
இந்த நிலையில் இதில் கலந்து கொண்டிருந்த மணல் அள்ளும் பாரவூர்திகளின் உரிமையாளர்கள், மணல் அகழ்வு செய்வதற்கு பிரதேச செயலகங்களின் ஊடாக யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் அனுமதி பெறும் திட்டம் ஒன்றை அமுலாக்குமாறு கோரினார்கள்.
இதன் மூலம் சட்ட விரோத மணல் அகழ்வை தவிர்க்க முடியும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து இந்த யோசனையை ஏற்றுக் கொண்ட வடமாகாண விவசாயத்துறை அமைச்சர் பொ.ஐங்கரநேசன், இந்த திட்டத்தை உடனடியாக அமுலாக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmsyESaLXkt7.html
குராம் ஷேக்கின் கொலைச் சந்தேக நபர்களுக்கு பிணை: அதிர்ச்சியில் குடும்பம்
[ புதன்கிழமை, 16 ஏப்ரல் 2014, 05:00.39 PM GMT ]
பிரித்தானிய செஞ்சிலுவை சங்க பணியாளரான குராம் ஷேக்கின் கொலை வழக்கின் சந்தேக நபர்கள் நான்கு பேர் பிணையில் விடுவிக்கப்பட்டமை தொடர்பில் அவரது குடும்ப உறவினர்கள் அதிர்ச்சி வெளியிட்டுள்ளனர்.
பிரித்தானிய ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள குராம் ஷேக்கின் சகோதரர் நசீர் ஷேக் இதனைத் தெரிவித்துள்ளார்.
குராம் ஷேக்கின் வழக்கு விசாரணைக்காக இலங்கை வந்திருந்த அவரும், அவரது தாயாரும் வழக்கு சில வாரங்கள் ஒத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் நாடு திரும்பியுள்ளனர்.
இந்த நிலையில் குறித்த நான்கு பேருக்கு பிணை வழங்கியமை தங்களுக்கு அதிர்ச்சியளித்திருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyESaLXkt6.html

Geen opmerkingen:

Een reactie posten