தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 16 april 2014

இலங்கை இராணுவத்துக்கு இந்தியா வழங்கிய உதவிகள் சட்ட விரோதமானவை இல்லை!- இராணுவ பேச்சாளர்

பொதுபல சேனா தொடர்பான காணொளிகளை வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவு
[ புதன்கிழமை, 16 ஏப்ரல் 2014, 04:27.36 PM GMT ]
ஜனபல சேனா நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பை பொது பலசேனா அமைப்பு குழப்பியடித்தமை தொடர்பான வழக்கு இன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன் போது குறித்த 9ம் திகதி இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பில் இதுவரையில் யாரும் கைது செய்யப்படவில்லை என்று காவற்துறையினர் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
இந்த நிலையில் கொழும்பு கொம்பனி வீதியில் உள்ள நிப்போன் விருந்தகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பு தொடர்பான காணொளிகளை கொம்பனி வீதி காவற்துறையிடம் வழங்குமாறு நீதிமன்றம் இரண்டு தொலைக்காட்சி அலைவரிசைகளுக்கு உத்தரவிட்டது.
இதன் அடிப்படையில் சந்தேக நபர்களை அடையாளப்படுத்துமாறும் நீதிமன்றம் கோரியுள்ளது
http://www.tamilwin.com/show-RUmsyESaLXkt2.html
இலங்கை இராணுவத்துக்கு இந்தியா வழங்கிய உதவிகள் சட்ட விரோதமானவை இல்லை!- இராணுவ பேச்சாளர்
[ புதன்கிழமை, 16 ஏப்ரல் 2014, 04:35.08 PM GMT ]
இந்தியா இலங்கை இராணுவத்துக்கு சட்ட விரோதமான உதவிகள் எதனையும் வழங்கவில்லை என்று, இராணுவ பேச்சாளர் ருவான் வணிகசூரிய தெரிவித்துள்ளார். சற்று முன்னர் உள்நாட்டு தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்திய இராணுவ துருப்பினர் இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக 2009ம் ஆண்டு காலப்பகுதியில் போரிட்டதாக தெரிவித்துää இந்திய உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர்,
இறுதி யுத்தத்தின் போது இந்தியா பல்வேறு உதவிகளை வழங்கியதாகவும், எனினும் அவை சட்ட விரோதமான உதவிகள் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவினால் ஆயுதங்கள்,  பயிற்சிகள், புலனாய்வுத் தகவல்கள் போன்றன வழங்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் அவர் இந்திய இராணுவத்தினர் விடுதலைப் புலிகளுக்கு எதிராக போரிட்டமை தொடர்பில் நேரடியான பதில் எதனையும் வழங்கவில்லை.
அத்துடன் அவர் இந்த குற்றச்சாட்டை நிராகரிக்கவும் இல்லை.
http://www.tamilwin.com/show-RUmsyESaLXkt3.html

Geen opmerkingen:

Een reactie posten