தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 9 april 2014

நல்லிணக்க செயற்பாடுகளை துரிதமாக மேற்கொள்ளுமாறு அவுஸ்திரேலியா வலியுறுத்து

பாலியல் வன்முறைகளை தடுக்கும் மாநாட்டில் இலங்கை கலந்து கொள்ளும்: பிரித்தானியா
[ புதன்கிழமை, 09 ஏப்ரல் 2014, 07:51.48 AM GMT ]
எதிர்வரும் ஜூன் மாதம் நடைபெறும் மோதல்களின் போது பாலியல் வன்முறைகளை தடுப்பது தொடர்பான மாநாட்டில் இலங்கை கலந்து கொள்ளும் என பிரித்தானியா நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
பிரித்தானிய நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அந்நாட்டின் வெளிவிவகாரம் மற்றும் பொதுநலவாய விவகார அமைச்சர் வில்லியம் ஹக் இதனை கூறியுள்ளார்.
மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு நாங்கள் எந்த நாட்டை வற்புறுத்தவில்லை. ஆனால் இலங்கை அதில் கலந்து கொள்வதற்காக ஊக்குவிக்கின்றோம்.
ஜூன் மாதம் நடைபெறும் மோதல்களில் பாலியல் வன்முறைகளை தடுப்பது தொடர்பான மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு 143 நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆனால் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும் என எவருக்கும் அழுத்தம் கொடுக்கவில்லை.
எனினும் அண்மைய தசாப்தங்களாக இலங்கையின் நிகழ்வுகளையும் அவர்களின் திட்டங்களையும் முன்வைக்க இலங்கைக்கு இது பொருத்தமான சந்தர்ப்பமாக இருக்கும். இதனை மேற்கொள்ள நாங்கள் இலங்கையை ஊக்குவிக்கின்றோம் என்றார்.
நல்லிணக்க செயற்பாடுகளை துரிதமாக மேற்கொள்ளுமாறு அவுஸ்திரேலியா வலியுறுத்து
[ புதன்கிழமை, 09 ஏப்ரல் 2014, 08:08.56 AM GMT ]
இலங்கையில் நடைபெற்ற மோதல்களின் இறுதிக்கட்டம் உட்பட பல சம்பவங்கள் குறித்த கவலைகள் இருப்பதாக அவுஸ்திரேலிய அரசாங்கம் கூறியுள்ளது.
முடிந்தளவில் கூடிய விரைவில் நல்லிணக்க செயற்பாடுகளை முன்னெடுக்குமாறு அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் ஜூலியா பிஷோப் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கையின் அரசியல் தலைமையுடன் இடம்பெற்ற சந்திப்புகளில் இவர் இதனை வலியுறுத்தியுள்ளதாக அவுஸ்திரேலிய ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
ஜூலியா பிஷோப் மேலும் தெரிவிக்கையில்,
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை இலங்கை அரசாங்கம் அமுல்படுத்த வேண்டும்.
அரசாங்கத்தின் சில பொறுப்புகளின் அடிப்படையில் தமிழ் பிரதேசங்களான வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு அதிகாரத்தை பரவாலக்க வேண்டும்.
இலங்கையில் நடைபெற்ற இறுதிக்கட்டப் போரின் போது இருத் தரப்பின் மீதும் சுமத்தப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பில் சுதந்திரமான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும்.
பல தசாப்தங்களாக இலங்கையில் நடந்த பயங்கரமான நிகழ்வுகளுக்கு பதிலளிக்கும் வகையில் இலங்கை விரைவான நம்பத்தகுந்த நல்லிணக்க செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும்.
பேச்சு சுதந்திரம், ஊடக சுதந்திரம், வலுவான ஜனநாயகம் மற்றும் சகிப்புத்தன்மை உட்பட பல் கலாசார சமூகங்களை கொண்டுள்ள அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் இருக்கும் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற நிலைமையை ஏற்படுத்த வேண்டும் எனவும் அவுஸ்திரேலிய வெளிவிவகா அமைச்சர் கூறியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyETdLXnr4.html

Geen opmerkingen:

Een reactie posten