[ வியாழக்கிழமை, 17 ஏப்ரல் 2014, 06:46.57 AM GMT ]
இலங்கையில் நடந்த போர்க்குற்றம் குறித்து சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரணை நடத்தவும், இலங்கை போரில் இந்திய இராணுவத்தின் பங்கு குறித்து விசாரிக்க கோரியும் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
சட்டத்தரணி ராம்சங்கரின் பொது நலன் மனுவை விசாரித்த நீதிபதிகள், மனுதாரரின் கோரிக்கை நீதிமன்ற வரம்புக்குள் வராது என்று கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
http://www.tamilwin.com/show-RUmsyESbLXkw1.html
சிங்கள தேசமே!! பயங்கரவாதம் என்ற கடிவாளத்தினை எப்போது கைவிடுவாய்?
[ வியாழக்கிழமை, 17 ஏப்ரல் 2014, 01:56.57 AM GMT ]
ஏன் இந்த உலகிலே எங்களை மட்டும் நீ வெறுக்கின்றாய் உனக்கும் எமக்கும் அப்படி என்ன பகை. உன் உடலிலே ஓடுவது இரத்தம் தமிழன் உடலிலே ஓடுவது என்ன தண்ணீரா? ஏன் எங்களை சந்ததிகளிலே இன்னமும் நிறுத்துகின்றாய்? இன்னும் எத்தனை சந்ததிகளுக்கு இந்த கொடுமையினை செய்ய நினைக்கின்றாய்,
நாங்கள் என்ன மந்தைக் கூட்டமோ வரிசையில் நில், முன்னாலே போ, பின்னாலே வா, திரும்பு, சிரிக்காதே, அழாதே, பாடாதே, ஓடாதே என்று நீ நினைத்த நினைப்புகளுக்கெல்லாம் எங்களை ஆட்டிவைக்கின்றாய், இன்னமும் எத்தனை காலம் இந்த அவலங்களைத் தரப்போகின்றாய் எங்கள் பிள்ளைகளுக்கு.
எட்டுத் திக்குகளும் பீரங்கியாலும், துப்பாக்கி வேட்டுக்களாலும் அதிர்ந்து கொண்டிருந்த போது தேடினாய் வீடுவீடாக, தேடினாய் காடுகாடாக, கடல்கடலாக சல்லடை போட்டு தேடினாய், சத்தியமாக எதை தேடுகின்றாய் என்று தெரியாத அப்பாவிகளை எல்லாம் கதறக்கதற இழுத்துச் சென்று கொன்றாய்.
தீபமேத்தி கோவில் போல இருக்கும் வீடுகளுக்குள்ளேயே சப்பாத்துக் கால்களுடன் அனுமதியின்றி நுழைந்து அப்பாவையும், அம்மாவையும் சாமி அறைகுள்ளே சமாதி கட்டினாய்.
பருவமாற்றத்தினால் அரும்பு மீசையுடனும் குறும்பு பார்வையுடனும் மெல்ல சுதந்திரமாய் பறக்க சிறகுகளை விரிக்கும் போதே கொலைவாளேந்திய உன் பிள்ளைகள் எம் பிள்ளைகளை எம் கண்முன்னே கொன்று குவித்தார்கள் குவியல்களாக அல்ல மாமிச மலைகளாக.
அப்படி எதைக் கேட்டோம், உன்னிடம் என்ன செய்தோம், உனக்கு வரலாறு முழுதும் அழுது துடிக்கும்படி, நீ ஏன் எங்கள் முதுகளிலே அடிக்கின்றாய்? தமிழன் என்றால் நாய் என்று நீ அன்று சொன்னாய், தமிழன் இறைச்சி இங்கே கிடைக்கும் என்று விற்பனை செய்தாய்,
அப்படி எதைக் கேட்டோம், உன்னிடம் என்ன செய்தோம், உனக்கு வரலாறு முழுதும் அழுது துடிக்கும்படி, நீ ஏன் எங்கள் முதுகளிலே அடிக்கின்றாய்? தமிழன் என்றால் நாய் என்று நீ அன்று சொன்னாய், தமிழன் இறைச்சி இங்கே கிடைக்கும் என்று விற்பனை செய்தாய்,
பருவமடைந்தாலென்ன அடையாவிட்டாலென்ன தமிழிச்சி என்றால் உன் காமப்பசிக்கு தீனியாக அள்ளிச்சென்றாய் ஆத்திரத்தின் உச்சியிலே தமிழன் ஆயுதம் ஏந்திய போது ஐயோ அம்மே கொட்டி கொட்டி என்று உலகம் முழுதும் எம்மை பயங்கரவாதிகளாக்கினாய்,
சுதந்திர தாகம் கொண்டு உன்னோடு உன் இனத்தோடு வாழ முடியாதென்று தனிநாடு கேட்டோம், மறுத்தாய், உரிமையினை கொடு என்று உரக்கக்கேட்ட அத்தனை குரல்வளைகளையும் கடித்துக் குதறினாய் உன் இதயம் எங்கே ?உன் மனச்சாட்சி எங்கே?
பிரிவினை கேட்டோம் என்று உலகத்திலே புரளியை கிளப்பினாய், பயங்கரவாதிகள் என்று பச்சைகுத்தி அலயவிட்டாய், எது பிரிவினைவாதம் இல்லாத ஒன்றை உன்னுடம் கேட்டோமா?
எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்ததும் இந்நாடே - அதன் முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து முடிந்ததும் இந்நாடே, அந்த நிலத்திலே எங்கள் நிலத்திலே எங்களை அமைதியாய் வாழவிடு எங்களை நாங்களே ஆள்கின்ற அரசைக்கொடு என்றுதான் கேட்டோம்.
இல்லை என்றாய் வேண்டும் என்று வேகம் கொண்டோம். போருக்கு வந்தாய் மூக்குடைத்தோம், முகம் உடைத்தோம், முள்ளந்தண்டுகளை முறித்தெறிந்தோம், வீரம் என்றால் தமிழன் என்று விளங்கிக் கொண்டபின் சமாதானம் என்று சமரசம் செய்ய வந்தாய். வஞ்சகமாய் உலகமெங்கும் ஓடி ஓடி உலகிலே முதலாவது தீவிரவாதிகள் புலிகள் என்று பதவியை பெற்றுத் தந்தாய் தமிழர்களுக்கு.
நாட்டை பிரியவிட மாட்டோம் என்ற நீயே தமிழனை பலவீனப்படுத்த வடக்கையும், கிழக்கையும் பிரித்தாய். பிரிவினைகளையும் குரோதங்களையும் வளர்த்தாய். காலாகாலமாய் உன் கால்களிலே எத்தனை தமிழர்கள் மிதிபட்டு செத்தார்கள். செத்துக் கொண்டிருக்கின்றார்கள் இன்னமும் ஓயவில்லையா உன் கொலைக்கரம் இன்னமும் தணியவில்லையா உன் இரத்த தாகம்.
இன்று போர் முடிந்தது என்று நீ அறிவித்து ஐந்து ஆண்டுகள் நெருங்கிக் கொண்டிருக்கின்றது. ஆனால் நீளும் உன் கொலைக்கரங்களும் அகலும் உன் நில அபகரிப்பும் தமிழர்களை நோக்கி நகர்ந்த வண்ணமே உள்ளது. யுத்தம் முடிந்தது. இங்கே அனைவரும் இலங்கை குடிமக்கள் எல்லோரும் ஒருதாய் மக்கள் என்றெல்லாம் சர்வதேசமெங்கும் சூளுரைக்கும் நீ இன்னமும் எதற்கு ஆயுதங்களை வாங்கி குவிக்கின்றாய்?
தமிழர் தாயகங்களில் உன் படைகளை குவிக்கின்றாய், அவர் கைகளிலே ஆயுதம் கொடுக்கின்றாய்? பூ பறிப்பதாக சொல்லிக்கொண்டு ஏன் இன்னமும் கோடரியுடன் அலைகின்றாய்?
ஒட்டுமொத்த புலிகளையும் கொன்றோம் என்று வேட்டுச் சத்தமிட்டு காலிமுகத்திடலிலே கர்ச்சித்துக் கொண்டாயே அன்று இன்று மீண்டும் அங்கே புலிகள், இங்கே புலிகள் என்று பூச்சாண்டி காட்டுகின்றாய் ஏன்?
பண்டாரநாயக்கா முதல் மகிந்தர் வரைக்கும் உன் ஆட்சிப் பீடத்திலேறிய அனைவருமே புலி புலி என்று உச்சரித்தபடிதான் ஆட்சி நடாத்தினர்கள், நடத்துகின்றர்கள். சுதந்திர இலங்கை என்று சுடர்பிடிக்கும் நீ ஏன் இதுவரைக்கும் ஒரு தமிழனைக்கூட ஆட்சிபீடம் ஏற்றவில்லை?
இன்று சொந்தமண்ணிலே தமிழர்கள் ஒதுக்கப்பட்டவர்களாக சமஉரிமை சமநீதி எதுவுமே அற்றவர்களாய் ஒரு தனிமனிதனுக்குரிய சுதந்திரங்கள் அனைத்துமே மறுக்கப்பட்ட மந்தைகளாய் உன் ஆட்சியின் கீழே வாழவேண்டிய கட்டாயத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.
உன்னால் உன் மக்களால் வதைக்கப்பட்டு விரட்டப்பட்ட தமிழர்கள் உலகமெங்கும் இன்று சுதந்திர மனிதர்களாய் புத்தியீவிகளாகவும் உலகத்தின் பல தலைவர்களின் மத்தியிலே சமநிலையிலே வாழ்ந்து கொண்டிருக்கும் அதே நேரம் என்று தணியும் எங்கள் சுதந்திர தாகம் என்று தாயக விடிவுக்காய் தாயக மக்களின் விடியலுக்காய்.உலகத்தின் நீதிமன்றத்திலே நீ நடாத்திய இன அழிப்பிற்கு நீதிகேட்டு போராடிக் கொண்டிருக்கின்றார்கள்.
இது உனக்கு மிகவும் பாரிய சவால். உன்னால் முடிந்தால் அவர்களையும் கொன்று புதைத்து விடுவாய் ஆனால் அது முடியாது போனாதால் அவர்கள் மீது பயங்கரவாதிகள் என்ற சாயத்தினை பூசிவிடவும் புலிகள் என்ற
முத்திரையினை குத்தி விடவும் நீ உலகில் எத்தனையோ சூழ்ச்சிகளை செய்வதை அறிவோம், இது எத்தனை காலம்.
முத்திரையினை குத்தி விடவும் நீ உலகில் எத்தனையோ சூழ்ச்சிகளை செய்வதை அறிவோம், இது எத்தனை காலம்.
தமிழிச்சிகள் வயிற்றிலே பிறக்கப்போகும் ஒவ்வொரு பிள்ளைகளும் உன் பயங்கரவாத பட்டியலிலே இணைக்கப்படுமா? எத்தனை சந்ததிகள் அழிக்கப்பட்டாலும் ஓடிக்கொண்டிருக்கும் உதிரத்திலே இருக்கும் மரபணுக்கள் தமிழன் என்ற உணர்வினை ஊட்டிக்கொண்டே இருக்கும் உன்னால் என்ன் செய்யமுடியும்?
இதுதான் தர்மம் என்று சொல்பவன் இதயத்தில் இரத்தக் காட்டேரிகளும், மாமிசப் பேய்களும் தாண்டவமாடிக் கொண்டிருக்கும் போது தர்மம் வெல்லும் வெல்லும் என்று காத்திருக்கும் தமிழினம் அதர்மத்தின் பிடியிலே அகப்பட்டு
அழிந்து கொண்டிருக்கின்றது. ஏன் என்று கேட்பதற்கு யாரும் இல்லாத அனாதைகள் போல் தமிழினம் இன்று வாழ்ந்து கொண்டிருக்கின்றது.
அழிந்து கொண்டிருக்கின்றது. ஏன் என்று கேட்பதற்கு யாரும் இல்லாத அனாதைகள் போல் தமிழினம் இன்று வாழ்ந்து கொண்டிருக்கின்றது.
குடியைக் கொடுக்கும் கோடரிக்காம்புகளும் போ என்று சொன்னால் கடித்து குதறும் ஏவல் நாய்களும் இன்று உன்னால வளர்க்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. மரத்துடன் மரமாய் வளரும் குருவிச்சை மரங்களாய் தமிழினத்தோடு ஒட்டிக்கொண்ட கயவர்களும் பதவிக்கும் பகட்டுக்கும் பல் இழிக்கும் பாவிகளும் உன் திட்டமிடலின் கீழே தமிழினத்தின் அவலத்தின் சூத்திரதாரிகளாய் விஸ்வரூபம் எடுத்துள்ளனர்.
மேலோர்கள் வெஞ்சிறையில் வீழ்ந்து கிடப்பதுவும், நூலோர்கள் செக்கடியில் நோவதுவுங் காண்கிலையோ? தர்மமே வெல்லும் என்ற சான்றோர் சொல் பொய்யாமோ என்று பாரதி பாடிவைத்தான். ஆம் விடுதலை வேண்டும் என்று எத்தனை தமிழர்கள் போராடினார்களோ, அத்தனை பேரும் மண்ணுக்குள்ளே தஞ்சம் என்று வந்தவர்களை நீ கொடிய சிறைகளிலும், வதை முகாம்களிலும் வதைத்துக் கொண்டிருக்கின்றாய்.
இருட்டிலே நடப்பது தெரியாது என்று இன்னும் எத்தனையோ கொடுமைகளை தமிழர்களுக்கு செய்தாய். உண்மைக்கு வெளிச்சம் எதற்கு, புதைகுழிகள் எல்லாம் இன்று திறக்கப்படுகின்ற போது உன் கொலைமுகத்தினை உலகம் காணத் தொடங்கியுள்ளது.
ஸ்ரீலங்கா தேசமே! பௌத்த சிங்களப் பூதமே இலங்காபுரி என்ற எம் இராவணேசன் ஆண்ட பூமியை நீ ஸ்ரீலங்கா என்று மாற்றிக் கொள்ளலால் ஆயிரம் ஆயிராம் ஆண்டுகளாய் எம் முன்னோர்களாலும் பல கவியரசர்களாலும் புகழப்பட்ட ஈழம் என்ற சொல்லை நாங்கள் பயன்படுத்தக்கூடாது என்று நீ சொல்வது எந்தவிதத்தில் நியாயம்.
நித்திரை கொள்ளும் புத்தனை தட்டி எழுப்பிக் கேட்டுப்பார் உனக்கு மன்னிப்பேதும் உண்டோ என்று அரசியலே வேண்டாம் என்று துறவுக்கோலம் கொண்டவர் சித்தார்த்தன் அவரின் போதனைகளை சொல்லும் பிக்குகளே தமக்கான ஒரு அசரியல் கட்சியினை உருவாக்கியுள்ளமையினை நினைத்து வேதனைப்படுவதா வெட்கப்படுவதா?
இலங்கை பௌத்த சிங்கள நாடு என்று கொக்கரிக்கும் உனக்கும் பௌத்தத்திற்கும் ஏதாவது சம்மந்தம் உள்ளதா ஆராய்ந்து பார்.
இன்று பல புலம்பெயர் அமைப்புக்களை நீ உனது தேசத்தில் தடை செய்திருக்கின்றாய். ஆனால் உனது மண்ணிலே தமிழருக்கெதிரான தீவிரவாத அமைப்புக்களை வளரவிட்டுள்ளாய். வளர்த்துக்கொண்டிருக்கின்றாய்.
இலங்கை ஒரே தேசம் என்று நீ சொல்வது உண்மையானால் மே 18 இதை தேசிய துக்கதினமாக அறிவிப்பாயா?
மலை மலையாக கொல்லப்பட்ட அதனை உறவுகளுக்கும் உன் தேசமெங்கும் தீபமேற்றி வணக்கம் சொல்வாயா?
ஐயோ என்று தலையிலே அடித்து கதறி அழுது கண்ணீர் விடுவதற்கு தமிழர்களை அனுமதிப்பாயா?
கொன்றாய் கோரத்தாண்டவம் போட்டாய், எம் பிள்ளைகளை கொன்றது உன் தேசத்திற்கு சந்தோசம் என்றால் உனது நாடு வேறு என்று நீயே எமக்கும் எம் பிள்ளைகளுக்கும் உணர்துகின்றாய்.
கொடிய போர் முடிந்ததே நானே வீரன் என்று நீயே கொக்கரித்தாய், கொடிபிடித்தாய். மீண்டும் ஏன் போர்க்கோலம் கொள்கின்றாய்? கழிவறைக்கு சென்றாலும் புலி புலி என்று ஏன் உச்சரித்துக் கொள்கின்றாய்.
சுட்டெரிக்கும் சூரியன் உச்சியை பிளக்கின்றான், உள்ளங்கால் வெந்து வேதனை கொடுக்கின்றது. சந்திகளில் நிறுத்தி எமை என்னதான் தேடுகின்றாய்? உள்ளாடைக்குள்ளும் மேலாடைக்குள்ளும் அப்படி எதைத்தான் தேடுகின்றாய்?.
அடையாள அட்டைகளை காட்டி காட்டியே எங்கள் அடையாளத்தினை தொலைத்து விட்டோம். தாய் யார் என்று புகைப்படத்தில் காண்கின்றோம் தந்தை எங்கே தேடிக்கொண்டிருக்கின்றோம் எம் இனத்தை வாழ விடமாட்டாயோ?
ஐயோ இரத்தம் கொதிக்கின்றது, முளை கொதித்து மூக்குவழியாய் வருகின்றது, புலியோ புலியோ என்று கேட்டு கேட்டு மீண்டும் எங்கள் பிள்ளைகளை குடையாதே. நான் புலிதானடா என்று புதிதாய் துளிர்கள் எழ எத்தனிக்கச் செய்யாதே. சுதந்திரமாய் திரிய வேண்டிய எங்கள் பிள்ளைகளுக்கு பயங்கரவாதிகள் என்ற கடிவாளத்தினை கட்டி உன் கைப்பிடியிலே வைத்துக் கொள்ளாதே?
நிறுத்து இத்தோடு புலி வேட்டைக்குப் போகாதே, அங்கே உறங்கும் பூனைகளை புலிகளாக்காதே, புலி வந்தாலென்ன விட்டாலென்ன நெடுங்காட்கள் நீ நிம்மதி கொள்ளமாட்டாய்.
தலைவிரிகோலமாய் எம் தாய்மார் இட்ட சாபம் பலிக்கும். மண்வாரி தூற்றிய மாதர் குலத்தின் சாபங்கள் உனை எரிக்கும்.
இலங்கைக்குள்ளே உனது பலம், ஆனால் உலகமெங்கும் தமிழன் போராட்டம் விஸ்வரூம் எடுத்துள்ளது. இருட்டுக்குள் நடந்த கொலைகளெல்லாம் வெளிச்சத்தில் இன்று.
வெகுவிரைவில் உனக்கோர் மரண அடி விழும் அது மடிந்து போன தமிழன் காதுகளிலே மணியோசையாய் ஒலிக்கும்.
-ஆதித்தன்
sankilijan@gmail.com
sankilijan@gmail.com
http://www.tamilwin.com/show-RUmsyESbLXku5.html
Geen opmerkingen:
Een reactie posten