பி.பி.சி செய்தி சேவையின் இலங்கைக்கு பொறுப்பான ஊடகவியலாளர் சார்ள்ஸ் ஹெவுலனுக்கு அரசாங்கம் வழங்கிய இரண்டு வருடத்திற்கான வீசா அனுமதி நீடிப்பதில்லை என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த மாதம் காலவதியாகவும் அவரது வீசா அனுமதியை புதுப்பிக்க அவர் விண்ணப்பித்திருந்த போதிலும், அவருக்கு மூன்று மாதங்களுக்கு மட்டுமே வீசா அனுமதி வழங்கப்படும் என அமைச்சின் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
மூன்று மாதங்களுக்கு வழங்கப்படும் வீசா அனுமதி முடிவடைந்த பின்னர், அவர் உடனடியாக நாட்டை விட்டு வெளியேற வேண்டும் எனவும் அமைச்சு உத்தரவிட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyESdLXjv4.html
Geen opmerkingen:
Een reactie posten